ஒரு வழியா பிக் பாஸ் வீட்டுக்கு 'டாடா' காட்டுன கவின் - கதறி அழுத லாஸ்லியா

Bigg Boss Kavin: உலகமே சேர்ந்து சொன்னத, நா உனக்கு சொல்றேன். இது ஒரு கேம், இத கேமா மட்டும் பாரு. முடிச்சுட்டு வெளில வா......

Bigg Boss Tamil 3 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு, நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறுவதாக நேற்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. இது நிஜமா அல்லது, பிக் பாஸ் போங்கு காட்டுகிறாரா என குழம்பிப் போனார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில், “உனக்கு இப்போ என்னாச்சு, எதுக்கு நீ போற” என சாண்டி கேட்க, “பத்தே நாள், உன் கூட நான் கடைசியா நல்லா பேசி எத்தனை நாளாச்சு? அப்போ இருந்து நான் இத யோசிச்சு வச்சிட்டேன். உலகமே சேர்ந்து சொன்னத, நா உனக்கு சொல்றேன். இது ஒரு கேம், இத கேமா மட்டும் பாரு. முடிச்சுட்டு வெளில வா, நான் போய் எல்லாத்தையும் அரேஞ் பண்றேன். இவ்ளோத்தையும் நான் பண்ணிட்டு, கூச்சமே இல்லாம என்னால மேடை ஏறி நிக்க முடியாது ண்ணே” என்கிறார் கவின்.

அடுத்த ப்ரோமோவில், ”உன் கிட்ட நான் சொன்னத மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு விளையாடு” என கவின் கூற, “எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல கவின்” என்கிறார் லாச்லியா. “எதுமே ஞாபகம் இல்லன்னா அந்த ஃபோட்டோவ எடுத்துப் பாரு ஞாபகம் வரும்” என்ற கவின், லாஸ்லியாவின் அப்பா படத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, “எதையும் யோசிக்கக் கூடாது, விளையாடிட்டு வா, வெளில பாத்துக்கலாம்” என்கிறார். “எனக்குத் தெரியும் நான் அவங்களுக்காகத் தான் இருந்திட்டு இருக்கேன். இல்லன்னா நான் எப்பயோ போயிருப்பேன்” என லாஸ்லியா கூற, “அப்ப நான் எதுக்கு இருந்தேன்னு தெரியனும்ல” என்கிறார் கவின்.

மூன்றாவது ப்ரோமோவில், “போகாதே” பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. தன் சுண்டு விரலை லாஸ்லியாவின் விரலோடு கோர்த்து விட்டு, பழம் விடுகிறார் கவின். பிக் பாஸ் வீட்டின் மெயின் கதவுகள் திறக்கின்றன. ”எல்லாருக்கும் டாடா பை பை” என கவின் கூற கதவு சாத்தப் படுகிறது, அப்போது கதவு சந்தில் கையை விடுகிறார் லாஸ்லியா.

இதன் மூலம், பிக் பாஸ் போட்டியிலிருந்து கவின் வெளியேறியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Bigg boss tamil 3 promo today kavin losliya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close