Advertisment

Tamil News Updates: 'கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தல்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kasthuri 1x

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 234-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

2025 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கான தேதி அறிவிப்பு 

2025 ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் 24,25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஆங்கிலத்தில் படிக்க:  US Election Results 2024 LIVE Updates

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil
  

 

  • Nov 06, 2024 22:52 IST
    'கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தல்

    தமிழ்நாடு தலைமைச் செயலகம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதிக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் அரசுப் பணியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களை நாட்டைச் சுரண்டும் ஊழல் பேர்வழிகள் என பேசியுள்ள நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.



  • Nov 06, 2024 21:17 IST
    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை 

    சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், மேடவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துவருகிறது.



  • Nov 06, 2024 21:11 IST
    கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீனம் திடீர் திருமணம் 

    கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீனம் 28வது மடாதிபதி மகாலிங்க சுவாமி அக்டோபர் 10-ம் தேதி பெங்களூரு சென்று பதிவுத் திருமணம் செய்துள்ளார். ஹேமாஸ்ரீ (47) என்பவரை திருமணம் செய்ததை ஆதீனம் மகாலிங்க சுவாமி (54) உறுதி செய்துள்ளார். திருமணமாகாதவர்கள் ஆதீனமாக இருந்துள்ளனர் என ஆதீனம் மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்துள்ளார்.



  • Nov 06, 2024 20:29 IST
    நடிகை கஸ்தூரி மீது ஆண்டிப்பட்டி, மதுரை, திருச்சியில் வழக்குப்பதிவு

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறாகப் பேசியதாக, நடிகை கஸ்தூரி மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மீது நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. மதுரை திருநகர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி மீது திருச்சியிலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையிலும் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Nov 06, 2024 20:24 IST
    ஐப்பசி சுபமுகூர்த்த நாட்கள்: நவ. 7, 8 தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

    ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினத்தையொட்டி, நவம்பர் 7, 8 தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லை ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள்,  இரு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகள் வழங்கவும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 ஒதுக்கவும் ஆணை பிறப்பித்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.



  • Nov 06, 2024 19:16 IST
    மதுரையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கைக் கோரி நவ. 16-ல் அ.தி.மு.க போராட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு

    அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கைக் கோரி அ.தி.மு.க சார்பில் நவம்பர் 16-ம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார். மேலும், வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Nov 06, 2024 18:20 IST
    12ஆண்டுகள், 53 டெஸ்ட் போட்டிகள்: ஒன்றை கூட மிஸ் செய்யாத அஸ்வின்

    கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற 53 டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். 12 வருடங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற 18 டெஸடட் தொடர்களையும் கைப்பற்றிய இந்திய அணி சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளையும் தவறவிட்டது.



  • Nov 06, 2024 17:35 IST
    உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை: சென்னை ஐகோர்ட்

    உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்று - சென்னை உயர் நீதிமன்றம்  கூறியுள்ளது. சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக 91 பேரை பணி நீக்கம் செய்ததற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக்கோரி சிஐடியூ தரப்பில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டிருந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் வாதம் செய்த நிலையில், இந்த மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Nov 06, 2024 17:32 IST
    நிவின் பாலி மீதான பாலியல் புகார்: காவல்துறை அறிக்கை

     பிரபல நடிகர் நிவின் பாலி மீது பெண் அளித்த பாலியல் புகார் - நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என போலீசார் அறிக்கை



  • Nov 06, 2024 16:27 IST
    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி !

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றார் டொனால்ட் ட்ரம்ப்.



  • Nov 06, 2024 16:25 IST
    டிரம்ப் -க்கு பிரதமர் மோடி வாழ்த்து !

    "இரு நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் இணைந்து பாடுபடுவோம்” என அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Nov 06, 2024 16:17 IST
    "அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது" - முதலமைச்சர் ஸ்டாலின்

    "திராவிட மாடல் அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகள்,  அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளால்தான் நமது கனவுகள் மெய்ப்படுகிறது. ஒருதிட்டத்தின் வெற்றி, அதன் நோக்கத்தை விட நடைமுறைப்படுத்துவதில்தான் உள்ளது" என்று கோவையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவிட்டுள்ளார்.

     



  • Nov 06, 2024 16:13 IST
    தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு !

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 



  • Nov 06, 2024 15:52 IST
    டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த போலந்து பிரதமர் டஸ்க் !

    டொனால்ட் டிரம்பிற்கு போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்  வாழ்த்து தெரிவித்தார். "தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்கள்" என்றும்  "அமெரிக்க மற்றும் போலந்து நாடுகளின் நலனுக்காக ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்" என்றும் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். 



  • Nov 06, 2024 15:35 IST
    அமெரிக்க தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் தொடரும் வாக்கு எண்ணிக்கை

    அமெரிக்காவின் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் நெவாடா போன்ற முக்கிய மாநிலங்களில் வாக்குகள் இன்னும் நடைபெற்று வருவதால் குடியரசுக் கட்சியினர் செனட்டின் கட்டுப்பாட்டைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் இறுதி முடிவைத் தீர்மானிப்பதில் இந்த மாநிலங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.



  • Nov 06, 2024 15:32 IST
    நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு

    தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு. மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.



  • Nov 06, 2024 15:04 IST
     'கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார்' - கொலை முயற்சியை நினைவு கூர்ந்த டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் பீச்சில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், ஜூலை 13 அன்று தனது தேர்தல் பேரணி ஒன்றில், தன் மீதான படுகொலை முயற்சியை நினைவு கூர்ந்தார். 

    அப்போது "கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார்; கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார்." என்று கூறியுள்ளார்.



  • Nov 06, 2024 14:30 IST
    மினசோட்டாவில் கமலா ஹாரிஸ் வெற்றி 

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மின்னசோட்டா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி 52 ஆண்டுகளுக்கு வெற்றி பெற்றுள்ளது. 

    1972 இல் ரிச்சர்ட் நிக்சனுக்குப் பிறகு எந்தவொரு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் மினசோட்டாவில் வெற்றியை ருசிக்கவில்லை. டொனால்ட் டிரம்ப் 2016 இல் ஹிலாரி கிளிண்டனை விட 1.5 சதவீத புள்ளிகள் குறைவாகவே பெற்று இருந்தார். 



  • Nov 06, 2024 14:25 IST
    'வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக்-கிற்கு வாழ்த்துக்கள்' - டிரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து 

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்புள்ள டொனால்ட் மற்றும் மெலனியா டிரம்ப், வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக்கிற்கு வாழ்த்துக்கள்! வெள்ளை மாளிகைக்கு உங்கள் வரலாற்றுத் திருப்பம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியை வழங்குகிறது. இது மாபெரும் வெற்றி! உண்மையான நட்பில், உங்களுடையது, பெஞ்சமின் மற்றும் சாரா நெதன்யாகு." என்று பதிவிட்டுள்ளார். 



  • Nov 06, 2024 14:17 IST
    'மனமார்ந்த வாழ்த்துக்கள் என் நண்பரே', டிரம்பிற்க்கு  மோடி வாழ்த்து 

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காகவும் பணியாற்றுவோம்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Nov 06, 2024 14:07 IST
    “நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல” - நடிகர் எஸ்.வி.சேகர்

    “எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, EWS கொண்டு வருகிறார்களோ, பிராமணர் நல வாரியம் ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்களோ அது திமுகவாக இருந்தாலும் நான் திமுகவிற்காக பரப்புரை செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன்;

     நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் சமூகத்திற்காக பேசுகிறேன். எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல் ” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். 



  • Nov 06, 2024 13:43 IST
     மஸ்கிற்கு நன்றி சொன்ன டிரம்ப் 

    "எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி" என்று அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். 



  • Nov 06, 2024 13:08 IST
    மீண்டும் அதிபரானார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.



  • Nov 06, 2024 12:56 IST
    மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் - இபிஎஸ்

    திமுக மற்றும் பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாமென அ.தி.மு.க-வினருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இவ்வாறு இபிஎஸ் கூறியதாக தெரிகிறது.



  • Nov 06, 2024 12:44 IST
    லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் நேரில் ஆஜர்

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். மைசூரு நகரின் மையப்பகுதியில் தனது மனைவிக்கு முறைகேடாக 14 வீட்டு மனைகளை ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் நேரில் ஆஜரானார்.



  • Nov 06, 2024 12:38 IST
    துணை முதலமைச்சர் ஆய்வு

    விழுப்புரம் மாவட்டம், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.



  • Nov 06, 2024 12:10 IST
    மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை - 2 இந்தியர்கள் வெற்றி

    மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 2 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதற்காக 9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில், இதுவரை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க இலினாய்ஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தியும், விர்ஜினியா மாகாணத்தில் சுகாஸ் சுப்பிரமணியனும் வெற்றி பெற்றனர். இவர்களில் சுகாஸ் சுப்பிரமணியத்தின் தந்தை சென்னையையும், தாயார் பெங்களூருவையும் சேர்ந்தவர்கள்.



  • Nov 06, 2024 12:05 IST
    கோவை அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

    கோவையில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதேபோல், தூய்மை பணியாளர்களிடம், அவர்களுக்கு இருக்கும் குறைகளை கேட்டறிந்து கொண்டார்



  • Nov 06, 2024 12:00 IST
    அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சி பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகுறது.



  • Nov 06, 2024 11:49 IST
    தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். வெற்றிக்கு 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் சூழலில், 240-க்கும் மேற்பட்ட அளவில் முன்னிலை வகித்து வருகிறார்.



  • Nov 06, 2024 11:31 IST
    முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் சென்னை புறப்பட்டார். கோவையில், புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் திறப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில், அவர் மீண்டும் சென்னை புறப்பட்டார்.



  • Nov 06, 2024 11:23 IST
    மயிலாடுதுறைக்கு உள்ளூர் விடுமுறை

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.



  • Nov 06, 2024 11:08 IST
    கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என தகவல்

    இன்று அதிகாலை 4.20 மணிக்கு கோவை விமான நிலைய அலுவலகத்திற்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன், கோவை விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்



  • Nov 06, 2024 10:55 IST
    227 எலக்டோரல் வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை

    சி.என்.என் செய்தி படி, காலை 10 மணி நிலவரப்படி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் 227  எலக்டோரல் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் 165 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். 



  • Nov 06, 2024 10:10 IST
    நார்த் கரோலினாவில் டிரம்ப் வெற்றி

    அசோசியேட்டட் பிரஸ் செய்தி படி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், நார்த் கரோலினாவில் வெற்றி பெற்றார்.

    ஏழு முக்கிய மாகாணங்களின் முடிவுகள் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதை திறம்பட தீர்மானிக்கும்.



  • Nov 06, 2024 09:50 IST
    சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா- ஸ்டாலின் ஆய்வு

    கோவை - தற்போது முதல்வர் செம்மொழி பூங்காவை ஆய்வு செய்து வருகின்றார்.
    கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்ட வரும் செம்மொழி பூங்கா பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ₹133 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். 



  • Nov 06, 2024 09:37 IST
    பெரும்பான்மையை நெருங்கும் ட்ரம்ப் இப்போது முக்கிய மாகாணங்களின் மீது பார்வை

    ட்ரம்ப் பெரும்பான்மையை நெருங்கிவிட்டதால், இப்போது முக்கிய மாகாணங்களின் மீது பார்வை உள்ளது. 

    பல்லாயிரக்கணக்கான மக்கள் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள், பெரும்பாலும் ஏழு முக்கிய மாகாணங்கள் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை திறம்பட தீர்மானிக்கும்.

    டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மையை நெருங்கி வருகிறார், கமலா ஹாரிஸ் 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார்.

    ஏழு முக்கிய மாகாணங்களில் ஆறில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதாக செய்தி நிறுவனமான AP தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகள் தேவை. 



  • Nov 06, 2024 08:54 IST
    குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

    கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி வலுவாக உள்ள கலிஃபோர்னியா,வாஷிங்டன், ஹவாய் உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது

    தேர்தலை தீர்மானிக்கும் மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, நெவாடா, மிஷிகன், விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசம் நீடித்து வருகிறது



  • Nov 06, 2024 08:37 IST
    பெண் வாக்காளர்களை கவர்ந்த ஹாரிஸ்

    ஹாரிஸ் நாடு முழுவதும் 54 சதவீத பெண்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றார், டிரம்ப் வெள்ளை மக்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெறுகிறார்.

    ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  எடிசன் ஆராய்ச்சியின்படி, மக்கள்தொகை அடிப்படையிலான சில கருத்துக் கணிப்புகள் இதோ:

    பெண் வாக்காளர்கள்:

    ஹாரிஸ்: 54%

    டிரம்ப்: 44%

    வெள்ளை வாக்காளர்கள்:

    டிரம்ப்: 55%

    ஹாரிஸ்: 43%

    கருப்பு வாக்காளர்கள்:

    ஹாரிஸ்: 86%

    டிரம்ப்: 12%



  • Nov 06, 2024 07:49 IST
    ட்ரம்ப் முன்னிலை

    அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 154 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment