Tamil News Updates: 2026-ல் தி.மு.க ஆட்சிக்கு வராது - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாக் இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss 1

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்துள்ளது. பெட்ரோல் 5 காசுகள் உயர்ந்து ரூ.100.80க்கும், டீசல் 5 காசுகள் உயர்ந்து ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது இருமுடி பையில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் போன்றவற்றை கொண்டு வருதை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

  • Nov 07, 2024 22:11 IST

    சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு

    சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கனமழையால் வெள்ளக் காடாக காட்சியளித்த  பாலைவனத்தில் தற்போது முதல் முறையாக பனிப்பொழிவும் நடந்துள்ளது.



  • Nov 07, 2024 21:11 IST

    2026-ல் தி.மு.க ஆட்சிக்கு வராது - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “2026-ல் தி.மு.க ஆட்சிக்கு வராது; சமீபத்தில் மது ஒழிப்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை கள்ளக்குறிச்சியில் நடத்தினர். குடி மிகுந்த, கஞ்சா நிறைந்த, கொலைகார மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Nov 07, 2024 20:24 IST

    தமிழகத்தில் இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 10 ம்ணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 07, 2024 19:45 IST

    அ.தி.மு.க கட்சி பணிகளை விரைவுபடுத்த கள ஆய்வுக் குழு அமைப்பு

    அ.தி.மு.க கட்சி பணிகளை விரைவுபடுத்துவதற்காக புதிதாக கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. "புதிய உறுப்பினர் அட்டைகள் அனைவருக்கும் கிடைத்ததா என்பதை ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.



  • Nov 07, 2024 19:39 IST

    இந்த ஆண்டு டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு - தமிழக அரசு

    டெங்கு பாதிப்பால் நடப்பு ஆண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்; டெங்கு தொடர்பான இறப்புகளை குறைக்கக் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; டெங்கு இறப்புகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது; தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 20,138 பேர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • Nov 07, 2024 19:05 IST

    ஜக்கி வாசுதேவுக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் வழக்கு; தள்ளுபடி செய்த ஐகோர்ட்

    ஜக்கி வாசுதேவுக்கு தரப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Nov 07, 2024 17:34 IST

    சென்னையில் பல இடங்களில் மிதமான மழை

    சென்னையில் இன்று காலை 8.30 மணி முதல் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மணலி புதுநகரில் 11 செ.மீ மழையும், மாதவரத்தில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.



  • Nov 07, 2024 16:56 IST

    2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கும்: டிடிவி தினகரன்

    2026 தமிழக சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அமமுக தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.



  • Nov 07, 2024 16:53 IST

    சீமானால் உயிருக்கு ஆபத்து: திருச்சி சூர்யா மனுவுக்கு தமிழக அரசு பதில்

    சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை குறித்து டி.ஜி.பி., திருச்சி எஸ்.பி. தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், விசாரணையை ஒத்திவைத்தார்



  • Nov 07, 2024 16:51 IST

    பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற மறுப்பு

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு



  • Nov 07, 2024 16:27 IST

    "பாக்கி தொகை நாளை வழங்கப்படும்" - ஸ்டூடியோ கிரீன்

    நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில்  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி



  • Nov 07, 2024 16:00 IST

    விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9, 10 தேதிகளில் கள ஆய்வு - ஸ்டாலின்

    விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9, 10 தேதிகளில் கள ஆய்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Nov 07, 2024 15:51 IST

    திருச்சி சூர்யா மனு; அரசுத் தரப்பில் பதில்

    சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவுக்கு, தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை குறித்து டி.ஜி.பி., திருச்சி எஸ்.பி. தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், விசாரணையை ஒத்திவைத்தார்



  • Nov 07, 2024 15:49 IST

    தமிழ்நாடு முழுவதும் ஆய்வு - முதல்வர் ஸ்டாலின்

    கள ஆய்வு பணி மகிழ்வாக அமைந்தது. கோவையில் தொடங்கினேன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Nov 07, 2024 15:25 IST

    பாம்பன் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்

    ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது



  • Nov 07, 2024 15:10 IST

    இ.பி.எஸ்-க்கு ரூ1.10 கோடி வழங்க ஓட்டுநர் தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது



  • Nov 07, 2024 14:33 IST

    புகாரை வாபஸ் பெற்றார் நடிகர் பார்த்திபன்

    நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்த நகைகள் மாயமானதாக அளித்த புகாரை வாபஸ் பெற்றார். நகைகளை ஊழியர் திருப்பி கொடுத்ததால், புகாரை வாபஸ் பெற்றார்



  • Nov 07, 2024 14:32 IST

    சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • Nov 07, 2024 14:31 IST

    நவம்பர் 28 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் படிப்பை முடித்துக் கொண்டு நவம்பர் 28 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் 



  • Nov 07, 2024 14:29 IST

    கொட்டும் மழையில் சாலையில் தரையில் படுத்து கிருஷ்ணசாமி போராட்டம்

    அருந்ததியர் சமூகத்தின் மூன்று சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் இன்றைய தினம் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற இருந்தது. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர். இதனை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கொட்டும் மழையில் சாலையில் தரையில் படுத்து போராட்டம் நடத்தி வருகின்றார்



  • Nov 07, 2024 13:57 IST

    அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; நீதிபதி விலகல்

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Nov 07, 2024 13:38 IST

    தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்படாதா என எதிர்கட்சிகள் காத்திருக்கின்றனர் - உதயநிதி

    தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்படாதா என எதிர்கட்சிகள் காத்திருக்கின்றனர். கூட்டணி விவகாரத்தில் முதல்வரும் கூட்டணி கட்சி தலைவர்களும் உறுதியாக உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Nov 07, 2024 13:32 IST

    உதகையில் கடும் பனிமூட்டம்

    உதகை, குன்னூர், கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதால் முக்கிய சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் மின்விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குகின்றனர்.



  • Nov 07, 2024 13:30 IST

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் சர்வதேச டி20 - வெள்ளிக்கிழமை முதல் தொடக்கம்

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் டர்பனில் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடங்குகிறது.  



  • Nov 07, 2024 12:56 IST

    ராணுவ தொழிற் பூங்காவிற்கு எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

    கோவை சூலூர் அருகே ராணுவ தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிப்காட் சாலையை தங்களால் பயன்படுத்த முடியாது என்பதால் தனி பாதை அமைத்து தர கோரிக்கை.



  • Nov 07, 2024 12:53 IST

    பயிர்க் கழிவுகளை எரித்தால் ரூ.30 ஆயிரம் வரை அபராதம்

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராத தொகையை இரட்டிப்பாக்கி ரூ. 30,000 வரை அதிகரிக்கும் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு அறிவித்துள்ளது. 



  • Nov 07, 2024 12:47 IST

    விஜயின் அரசியல் வருகை தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தாது - சி.பி.எம் பாலகிருஷ்ணன்

    விஜயின் அரசியல் வருகை மற்றும் அவரின் அறிவிப்புகள் திமுக கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏற்படுத்தாது என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.



  • Nov 07, 2024 12:14 IST

    ”2026 தேர்தலிலும் திமுக ஆட்சியமைக்க உழைக்க வேண்டும்"- உதயநிதி ஸ்டாலின்

    தஞ்சையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "திமுகவை அழிக்க வேண்டும் என பலர் கிளம்பி உள்ளனர்,  அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களே தகுந்த பதிலடியை தருவார்கள். 2026 தேர்தலில் 2வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க நாம் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



  • Nov 07, 2024 11:57 IST

    சூரசம்ஹாரம்: பழனி செல்லும் பக்தர்களுக்கு அறிவிப்பு!

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை 11 மணிக்கு மேல் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Nov 07, 2024 11:53 IST

    பாம்பன் பாலம் பணிகள் நிறைவு, திறப்பு எப்போது ?

    ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவு பெற்று ரயில்வே முதன்மை அதிகாரி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Nov 07, 2024 11:36 IST

    கமல்ஹாசனுக்கு துணை முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

    "மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்". மதவாத - பிளவிவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்துவரும் கமல்சாரின் பணிகள் மெம்மேலும் சிறக்கட்டும் என்றும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 



  • Nov 07, 2024 11:21 IST

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் மோதல்

    ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டுள்ளது.  

    சிறப்பு அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெறக்கோரி பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



  • Nov 07, 2024 10:44 IST

    தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

     

    தமிழ்நாட்டில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.  ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்துவிட்டு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது. 



  • Nov 07, 2024 09:50 IST

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.57,600க்கும் ஒரு கிராம் ரூ.7200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Nov 07, 2024 09:48 IST

    சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி வரும் 10ம் தேதி திறப்பு

    சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ₹2.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் 10ம் தேதி திறப்பு. 85 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில், மீன் கழிவுகளை வெளியேற்ற 28,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 



  • Nov 07, 2024 09:46 IST

    பூண்டின் விலை கிடுகிடு உயர்வு

    சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில், கடந்த வாரத்தை காட்டிலும் பூண்டின் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்வு நாட்டு பூண்டு முதல் ரகத்தின் விலை கிலோ ரூ.340க்கும், 2ம் ரக பூண்டின் விலை ரூ.280க்கும் விற்பனையாகிறது.



  • Nov 07, 2024 09:04 IST

    இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி

    பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொண்டாட்டம். இன்று மாலை நடைபெறவுள்ள சூரசம்கார நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள் வந்துகொண்டு இருக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாழைத்தண்டு, பழ வகைகளை நறுக்கி தயிருடன் கலந்து முருகனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.



  • Nov 07, 2024 08:55 IST

    தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை

    இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்த 6 நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



  • Nov 07, 2024 07:59 IST

    சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

    சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது இருமுடி பையில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் போன்றவற்றை கொண்டு வருதை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது.  பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களில் பெரும்பாலும் வீணாக எரிக்கப்படுவதை தவிர்கக இந்த முடிவு எனத் தெரிவித்துள்ளது. 



  • Nov 07, 2024 07:46 IST

    மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன் - கமலா ஹாரிஸ்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். வெற்றி பெற்ற டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறினார்.



Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: