/indian-express-tamil/media/media_files/3C28vF7D1pRQVQAJvnCJ.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 182-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 32.8% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 3.856 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 31.77% ; புழல் - 68.51% ; பூண்டி - 2.48% ; சோழவரம் - 5.36% ; கண்ணன்கோட்டை - 59.8%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 16, 2024 04:39 IST
டாஸ்மாக்கை மூடுவது சுலபமான காரியம் இல்லை - திருமாவளவன்
வி.சி.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சு: “டாஸ்மாக்கை மூடுவது சுலபமான காரியம் இல்லை. மது மிகப்பெரிய லாபம் தரக்கூடிய தொழில்; மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது; சிரமப்பட்டு படித்து ஐ.ஏ.எஸ் ஆகி தற்போது சிலர் சாராயம் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கூறினால், அதனை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் எதிரியாகப் பார்க்கின்றனர். உணர்வுப்பூர்வமான பிரச்னையில் நாம் கைவைத்துள்ளோம்” என்று கூறினார்.
-
Sep 15, 2024 21:30 IST
விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டது - சென்னை போலீஸ் கமிஷனர் அருண்
சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: “விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன; சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,878 சிலைகள் கரைக்கப்பட்டன; பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது; விநாயகர் சிலைகள் கரைப்பதையொட்டி, 16,500 போலீசார் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 15, 2024 20:00 IST
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Sep 15, 2024 19:52 IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு; வி.சி.க-வின் கருத்து - வைகோ
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ: “வி.சி.க-வின் கருத்து அவர்களுடையது; இது ஜனநாயக நாடு; தமிழ்நாட்டில் இருப்பது போல் மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை; திராவிட இயக்கத்தின் ஆட்சிக்கும் கட்சிக்கும் ஆதரவான போர்வாளாக ம.தி.மு.க இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 15, 2024 18:42 IST
சென்னை பாலவாக்கத்தில் கிரேன் மூலம் தூக்கியபோது உடைந்து விழுந்த விநாயகர் சிலை
சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்வின்போது, கிரேன் மூலம் தூக்கிய விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விநாயகர் சிலையை எடுத்துவந்த மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Sep 15, 2024 18:39 IST
விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி படகு; உயிர்தப்பிய 5 மீனவர்கள்
விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்த 5 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகு மூலம் உயிர்த் தப்பினர். எஞ்சின் கோளாறு காரணமாக படகில் தீ பற்றிய பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் மீன்பிடி படகு முழுவதுமாக எரிந்து கடலில் மூழ்கியது.
-
Sep 15, 2024 18:32 IST
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவராக சுதா சேஷய்யம் நியமனம் - பேராசிரியர் வீ. அரசு எதிர்ப்பு
சென்னைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் வீ. அரசு, “பக்தி சொற்பொழிவு செய்யும் மருத்துவர் சுதா சேஷய்யனை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஒன்றிய அரசு நியமித்திருப்பது அந்த நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானது.. செம்மொழி தமிழாய்வு குறித்து அவருக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
Sep 15, 2024 17:38 IST
திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தந்தை - மகள் மரணம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த தந்தை – மகள், காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். தனது 2 மகள்களுடன் BHEL நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் காவிரி ஆற்றில் குளித்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இளைய மகள் ஆஷிகா சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மூத்த மகள் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷின் சடலத்தை தேடும் பணி தீவிமாக நடைபெற்று வருகிறது
-
Sep 15, 2024 17:21 IST
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடலூர், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 15, 2024 16:45 IST
மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த விவகாரம்; சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்டம்பர் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்
-
Sep 15, 2024 16:26 IST
நீலகிரி மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
நீலகிரி மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிகளால் மலை முழுவதும் போர்வை போர்த்தியதுபோல் நீல வண்ணத்தில் காட்சியளிக்கிறது
-
Sep 15, 2024 16:11 IST
உத்தராகண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த 30 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
-
Sep 15, 2024 15:54 IST
கல்யாண ராணியின் தோழி கைது
பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி கைது செய்யப்பட்டுள்ளார். சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வி தலைமறைவாக இருந்த நிலையில், தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கரூர் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
-
Sep 15, 2024 15:13 IST
அண்ணா தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் - விஜய்
தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என த.வெ.க தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
Sep 15, 2024 14:14 IST
உத்தரகாண்ட் நிலச்சரிவு - 15 தமிழர்கள் மீட்பு
ஆன்மிக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கினர். ஹெலிகாப்டர் மூலம் 15 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து ஐந்து பேராக ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டு வருவதாகவும் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.
-
Sep 15, 2024 14:06 IST
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - தவெக தலைவர் விஜய் பதிவ
த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024
-
Sep 15, 2024 14:04 IST
அண்ணா சிலைக்கு த.வெ.க பொதுச்செயலாளர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா சிலைக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
-
Sep 15, 2024 13:37 IST
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை: இலங்கை சிறைத்துறை அட்டூழியம் - ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை செய்யும் அதிகாரத்தை சிங்கள அரசுக்கு யார் கொடுத்தது? மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது!
இராமேசுவரத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு, பின்னர் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரை சிங்கள அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளது. சிங்கள அரசின் இந்த மனிதத் தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 7-ஆம் தேதி தண்டத் தொகையை கட்டியுள்ளனர். ஆனால், கடந்த 6-ஆம் தேதியே தண்டம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு இந்த கொடுமையையும், அவமதிப்பையும் இழைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது.
நீதிமன்றம் விதித்த தண்டத்தை செலுத்த மீனவர்களுக்கு காலக் கெடு உள்ளது. ஒரு வேளை அந்தக் காலக்கெடுவுக்குள் மீனவர்கள் தண்டத்தை செலுத்தாவிட்டால், அதை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் சிங்கள அரசு செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, மீனவர்களை மொட்டையடித்து, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கும் அதிகாரத்தை சிங்கள அரசுக்கு எந்த பன்னாட்டு அமைப்பு வழங்கியது?
இலங்கை சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு அல்ல. மாறாக, இந்தியாவின் இறையாண்மைக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் வேறு ஏதேனும் நாடுகளில் இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் மு.க.ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார். இது போதுமானதல்ல. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சிக்கலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, பிரதமர் அவர்களை சந்திக்கச் செய்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Sep 15, 2024 13:10 IST
உத்தராகண்ட் நிலச்சரிவு - தமிழர்களிடம் தொலைபேசியில் ஸ்டாலின் பேச்சு
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்களிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 30 தமிழர்களையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
Sep 15, 2024 13:05 IST
"முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்" - கெஜ்ரிவால் பேச்சு
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதிய கட்சி தலைமையகத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்றி தெரிவித்தார். இதன்பிறகு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் “நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கிய போதிலும், வழக்கு தொடரும். என் வழக்கறிஞர்களிடம் பேசினேன். வழக்கு முடியும் வரை முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன். இரண்டு நாட்களுக்கு பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்து மீண்டும் இருக்கையில் அமரவைக்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமரமாட்டேன்." என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
Sep 15, 2024 12:36 IST
பதவி விலகல் - கெஜ்ரிவால் அறிவிப்பு
முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2025 டிசம்பரில் தற்போதைய டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sep 15, 2024 12:04 IST
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார் பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு நீரிருப்பை பொறுத்து 8,461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
-
Sep 15, 2024 11:44 IST
செல்லூர் ராஜூ பேட்டி
தமிழ்நாட்டில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. நல் ஆட்சிக்கு அது சரிபட்டு வராது. பல மாநிலங்கள் இதற்கு உதராணம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
-
Sep 15, 2024 11:24 IST
இ.பி.எஸ் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
Sep 15, 2024 11:22 IST
அண்ணா பிறந்தநாள்- ஸ்டாலின் மரியாதை
சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை. தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
Sep 15, 2024 10:34 IST
தாம்பரத்தில் இருந்து 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்தால் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம். தாம்பரதில் இருந்து பல்லாவரத்திற்கு 10, தி.நகருக்கு 20, பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கம்.
-
Sep 15, 2024 09:13 IST
மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி- அன்புமணி
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி; திருமாவளவன் எல்கேஜி - அன்புமணி
மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி படித்திருக்கிறோம். திருமாவளவன் அதில் எல்.கே.ஜி தான்.
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தினால் ஆதரிப்போம்- பா.ம.க தலைவர் அன்புமணி -
Sep 15, 2024 09:10 IST
விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் தயார்
7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் மற்றும் 7 அடி உயரத்திற்கு மேல் உள்ள சிலைகளை கரைக்க 2 பகுதிகளாக பிரிப்பு. உயர் கோபுர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு. சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சிலையை கரைக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, வாகன நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர்.
-
Sep 15, 2024 08:39 IST
ஓணம் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து
இயற்கை பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை நம்பிக்கையையும், வலிமையையும் தரட்டும், ஓணம் பண்டிகையையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
-
Sep 15, 2024 08:38 IST
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்களை முன்னிட்டு, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம். மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் எனப் போலீசார் அறிவித்துள்ளனர்.
-
Sep 15, 2024 08:25 IST
உத்தராகண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க நடவடிக்கை
சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் ஆதி கைலாஷ் பகுதிகு ஆன்மீக பயணம் சென்றனர். உத்தராகண்ட் மாநிலம் தாவகட் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ஊர் திரும்ப முடியாமல் அங்குள்ள ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் மீட்பது தொடர்பாக உத்தராகண்ட் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.