Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
'சேரி' என்ற வார்த்தையை குஷ்பு தவிர்த்திருக்கலாம்: ஜெயக் குமார்
'சேரி' என்ற வார்த்தையை குஷ்பு தவிர்த்திருக்கலாம் என்பது எங்களது கருத்து. சரியான பாதையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. மழை நீர் வடிகால்களை தமிழக அரசு முறையாக தூர்வாரவில்லை- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார்
கைதி ஒருவர் தற்கொலை முயற்சி
கைதி ஒருவர் தற்கொலை முயற்சி. சென்னை, பூந்தமல்லி தனி கிளை சிறையில் ரவி என்ற கைதி தற்கொலை முயற்சி. புழல் சிறைக்கு மாற்ற கோரி கோரிக்கை வைத்த நிலையில் தற்கொலை முயற்சி
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
பக்தர்கள், காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையேறும் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு. 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி.
கல்லூரி வளாகத்தில் டோக்கன் விநியோகம். டோக்கன் வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைமோதல். பக்தர்களை தடுக்க திணறும் போலீசார்.
வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் உடைப்பு - பக்தர்கள், காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
கேரள பல்கலைக் கழகத்தில் நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் மரணம்
கேரள மாநில கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மக்களவையில் கேள்வி கேட்க பணம்; மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ
திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான கேள்வி கேட்க பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பால் அனுப்பிய புகாரை மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) "விசாரணை" செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்
சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு நெரிசல் மிகு இல்லாத மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் இனி 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது
இறப்பு சான்றிதழ்; தாமதமின்றி வழங்க ஐகோர்ட் உத்தரவு
இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் மாவட்ட எல்லையை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது. மாவட்ட எல்லை உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களை காட்டி இறப்புச் சான்றிதழை மறுக்கக்கூடாது. தாமதமின்றி வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன விதிமீறல்; வேலூரில் ரூ4.29 லட்சம் அபராதம் வசூல்
வேலூர் சரகத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக இன்று ஒரே நாளில் 84 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் ரூ4.29 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய சிறப்பு வாகன தணிக்கையில் ரூ33.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவு; 5 மணி நிலவரப்படி 68.24% வாக்குகள் பதிவு
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 68.24% வாக்குகள் பதிவாகியுள்ளன
சென்னயைில் காவல் உதவி ஆய்வாளர்கள் மோதல்: இருவருக்கு பணியிட மாற்றம்
சென்னை, கொத்தவால் சாவடி அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உதவி ஆய்வாளர்கள் பிரபு, வெங்கடேசன் ஆகியோரை அமைந்தகரை மற்றும் அரும்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி : அசோக் கெலாட் நம்பிக்கை
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன. 200 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், இன்று 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே தொடரும் என்று அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.
பெருக்கெடுத்த வெள்ளம் : குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டுள்ளதால், ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால மெயின் அருவியில் கரைகளின் ஓரத்தில் மட்டும் நின்று குளிக்க போலீசார் அனுமதி அளித்து்ளளனர்.
டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வு அட்டவணை டிச.15-ல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது. 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தகவல். 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது
சூர்யா உடல் நலம்பெற வேண்டி ரசிகர்கள் அன்னதானம்
மதுரை: ‘கங்குவா’ படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் சூர்யா உடல் நலம்பெற வேண்டி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய அவரது ரசிகர்கள்.
https://twitter.com/sunnewstamil/status/1728331848106082590/video/1
சாமானியர்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம். இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா?. சுதந்திரத்திற்காக ஒற்றுமையாக போராடிய நாம் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து உள்ளோம். மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்- ஆளுநர் ஆர்.என்.ரவி
பீகாரை தொடர்ந்து ஆந்திர மாநிலமும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு
ஆந்திர மாநிலத்தில் டிசம்பர் 9-ம் தேதி விரிவான சாதி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா அறிவிப்பு. அங்கு ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த மோடி
இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி.
தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி. இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது - பிரதமர் மோடி பெருமிதம்
Successfully completed a sortie on the Tejas. The experience was incredibly enriching, significantly bolstering my confidence in our country's indigenous capabilities, and leaving me with a renewed sense of pride and optimism about our national potential. pic.twitter.com/4aO6Wf9XYO
— Narendra Modi (@narendramodi) November 25, 2023
ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்: அண்ணாமலை
ஆவின் அதலபாதாளத்தில் உள்ளது. நாங்கள் வழங்கிய ரிப்போர்ட் பொய் என்றால், பாஜகவில் இருந்து 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறோம். ஆவின் நிறுவனத்திற்குள் அனுமதிக்க தயாரா? எல்லாவற்றையும் நான் படம் பிடித்து காட்டுகிறேன். ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்- அண்ணாமலை
நான் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - குஷ்பு
சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. சேரி மொழி கருத்திற்காக நான் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - குஷ்பு
'சேரி மொழி' கருத்து - குஷ்பு விளக்கம்
இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்?. வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?
அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? சென்னை, விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி
செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை
சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை இந்த சோதனை மூளையின் electrical செயல்திறனை கண்டறியும் பரிசோதனை முடிவுகளை நரம்பியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்
ராமச்சந்திரன் வீட்டில் இ.டி ரெய்டு
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்
கறம்பக்குடி அடுத்த குளந்திரான்பட்டியில் கரிகாலன் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு. திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் தொடரும் ரெய்டு
ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லை
சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம்.
வேங்கைவயல் விவகாரம்: மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கை. சிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி நடக்கிறது. ஏற்கனவே 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடர உள்ளேன் - அண்ணாமலை
என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர உள்ளேன். அந்த 1 கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும்ந மது விவசாயிகளின் மேம்பாடு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்- அண்ணாமலை
சென்னையில் 32 இடங்களில் மழைநீர் தேக்கம்
சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 32 இடங்களில் தேங்கிய மழைநீர். 5 இடங்களில் இருந்து மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம்.
மீதமுள்ள 27 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம். 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து சீராக நடக்கிறது - சென்னை மாநகராட்சி
11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
த்ரிஷாவிடம் விசாரணை
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு;
விசாரணையின்போது நடிகை த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தகவல்
மீண்டும் ரூ.46,000-ஐ தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,040க்கும், ஒரு கிராம் ரூ.5,755 ஆகவும் விற்பனை ஆகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது,
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
வைகை ஆற்றில் வெள்ளம்
மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், அப்பகுதி மக்களுக்கு SMS மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் இடமாற்றம்
சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றும் 132 நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கனமழை
சென்னையில் கிண்டி, அடையாறு, நுங்கம்பாக்கம், டி நகர், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.25) விடப்பட்டுள்ளது.
வழக்கமான அட்டவணைப்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்
#WATCH | Rajasthan Elections | A voter on a wheelchair being helped by her family to reach the polling booth, at a polling station in Sardarpura, Jodhpur. pic.twitter.com/V2f6Dp1J4u
— ANI (@ANI) November 25, 2023
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
மொத்தம் 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக சுமார் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 51,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மீட்பு பணி முடக்கம்
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது. சுரங்கத்தில் துளையிடும்போது இரும்பு கம்பிகள் தென்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணியில் தடைகள் தொடர்ந்து வருவதால் மனிதர்களை வைத்து, துளையிடும் பணியை மேற்கொள்ள முடிவு
சென்னை திரும்பினார் அஜித்
#WATCH | ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் அஜித்குமார்! #SunNews | #AjithKumar | #Vidamuyarchi pic.twitter.com/2pFyP9Ep33
— Sun News (@sunnewstamil) November 24, 2023
‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் அஜித்குமார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.