தொண்டர்களை சந்திக்கும் சசிகலா
ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுக்கும் நிலையில் சசிகலா ஜூன் 27 முதல் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஜூலை 1ல் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 35 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு: அதிமுக பொதுக்குழுவின் நிகழ்வுகள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தன; எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த பதவியை பல கோடிகள் செலவழித்து அடைய நினைக்கிறார்கள்; தவறான நபர்களின் கையில் அதிமுக சிக்கியுள்ளது என்று கூறினார்.
கொரோன தொற்று அதிகரித்துவரும் நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோன தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சசிகலா பேட்டி: “அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள்; எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோருக்கான கட்சி; நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவேன்; அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும்; நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன்” என்று கூறினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில், சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை திருத்தணியில் தொடங்குகிறார்.
திருத்தணி வந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி மேலதாளங்களுடன் வரவேற்றனர்.
கட்சியிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும், சேர விரும்புபவர்களுக்கும் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் துரோகிகளாக மாறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழ் நிறுவனர் பெயரில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் பெயர்கள் இடம் பெற்று வந்த நிலையில், தற்போது எடப்பாடி.கே.பழனிச்சாமி பெயர் மற்றும் இடம்பெற்றுள்ளது
திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் மோடி. ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், டி.எச்.எப்.எல். மோசடி உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே பிரதமர் முயற்சிக்கிறார் என ராகுல் காந்தி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்
மகாராஷ்டிரா, அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏக்கள் 15 பேருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தொண்டர்களை சந்திக்க சசிகலா சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டார். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா திருத்தணி செல்கிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
சென்னையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்றடைந்தார். மதுரை விமானநிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தேனி செல்கிறார் ஓபிஎஸ். தேனியில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், அதிமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். சதிவலையை பின்னியவர்களுக்கு உரிய தண்டனையை மக்களே வழங்குவார்கள். ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது எனக் கூறினார்
விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை, ஐதராபாத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறியரக விண்கலன்களை உருவாக்கி வருகின்றன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் தேவை. உட்கட்சி பிரச்சினைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஓபிஎஸ் மீது பாட்டில் வீசப்பட்டது அநாகரீகமான செயல் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் கூறியுள்ளார்
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சனாதன தர்மத்தை மதத்தோடு ஓப்பிட்டு பேசக்கூடாது; இரண்டும் வேறு வேறு. சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும, வெளியில் கூறப்படும் மதச்சார்பின்மைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்
ஜூலை மாதத்தில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மோடி பேசினார்.
சென்னை, காட்டுப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து .
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். 'வருங்கால அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்' என கோஷம் எழுப்பி தொண்டர்கள் வழியனுப்பினர்.
இந்தியாவில் 11,739 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர் . கொரோனாவுக்கு தற்போது 92,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 911.50 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்தாண்டை விட நிதி ஒதுக்கீடு 49% அதிகரிப்பு . தமிழக தொழில்துறையின் தூண்களாக விளங்கும் இத்துறை மேம்பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
” குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை . அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை . அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர். பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை . ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் ” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது. சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் பிரிந்து காணப்படும் நிலையில் சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இன்று தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிறார். இதுதொடர்பாக சசிகலா அவர்கள் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்படுள்ளதாவது:
”ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம்தேதி (இன்று) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.
பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன்’ என கூறியுள்ளார்.