Advertisment

Tamil News Updates : தேர்தல் பிரசாரத்திற்காக 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி

Tamil Nadu News Update Today- 8 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi bjp cong

Tamil News Today updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 64.81% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 73.66%, புழல் - 85.09%, பூண்டி - 46.02% , சோழவரம் - 20.17% , கண்ணன்கோட்டை - 84.4%. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 08, 2024 21:42 IST
    வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு; சிதம்பரம் பரப்புரை

     

    சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பரப்புரை செய்தார்.
    அப்போது, “வேலையில்லா திண்டாட்டம் இந்த அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடி நான் பார்த்ததே கிடையாது” என்றார்.



  • Apr 08, 2024 21:36 IST
    மக்களவை தேர்தல்; சிறப்பு பேருந்துகள் இயக்கம்


    மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    அந்த வகையில், ஏப்.17 மற்றும் 18ஆம் தேதிகளில் 7154 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



  • Apr 08, 2024 20:55 IST
    பா.ஜ.கவுக்கு உரிய பாடம் அளிக்க வேண்டும்; உதயநிதி ஸ்டாலின் பரப்புரை


    பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், ஆளாத மாநிலங்களுக்கு குறைவான நிதியும் அளிக்கும் பா.ஜ.கவுக்கு உரிய பாடத்தை ஏப்.19ஆம் தேதி அளிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 08, 2024 20:53 IST
    சேப்பாக்கத்தில் தோனிக்கு சிலை? ரசிகர்கள் கோரிக்கை


    சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மகேந்திர சிங் தோனிக்கு சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Apr 08, 2024 20:52 IST
    மயிலாடுதுறை: சிறுத்தை குறித்து வதந்திர பரப்பினால் கடும் நடவடிக்கை

     

    மயிலாடுதுறையில் சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Apr 08, 2024 19:41 IST
    மக்களவை தேர்தல்; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    மக்களவை தேர்தலில் ஏப்.19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.



  • Apr 08, 2024 18:49 IST
    மெசூகுவர்த்தி ஏற்றி பிரார்தனைக்கு பின் உண்டியல் திருட்டு

     

    திண்டுக்கல் - முள்ளிப்பாடி தேவாலயத்தில், மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த நபர் ஒருவர், பிரார்த்தனைக்குப்பின் அருகில் இருந்த உண்டியலில் காசை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்லும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.



  • Apr 08, 2024 18:49 IST
    மெசூகுவர்த்தி ஏற்றி பிரார்தனைக்கு பின் உண்டியல் திருட்டு

     

    திண்டுக்கல் - முள்ளிப்பாடி தேவாலயத்தில், மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த நபர் ஒருவர், பிரார்த்தனைக்குப்பின் அருகில் இருந்த உண்டியலில் காசை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்லும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.



  • Apr 08, 2024 18:14 IST
    தமிழகத்தின் செங்கோல் - வெளியே யாருக்கும் தெரியவில்லை - ராஜ்நாத் சிங்

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்: “செப்டம்பருக்கு முன்பு வரை தமிழகத்தின் செங்கோல் பற்றி வெளியே யாருக்கும் தெரியவில்லை; புதிய நாடாளுமன்றத்தில் நீதியின் சின்னமான செங்கோலை பிரதமர் மோடி நிறுவியது புதிய சகாப்தத்தை குறிக்கிறது” என்ற் பேசினார்.



  • Apr 08, 2024 18:11 IST
    தேர்தலை முன்னிட்டு ஏப். 17, 18, 19  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப். 17, 18, 19 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Apr 08, 2024 18:11 IST
    தேர்தலை முன்னிட்டு ஏப். 17, 18, 19  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப். 17, 18, 19 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Apr 08, 2024 17:40 IST
    ஆடு மேய்த்தவரை அதிகரியாக்கி அழகு பார்த்தது திராவிடம் - தி.மு.க நிர்வாகி கார்த்திகேய சிவசேனாபதி

    கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர் சந்திப்பு: “ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம்... அதிகாரியை ஆடு மேய்க்க வைத்தது ஆரியம்..” என்று கூறினார்.



  • Apr 08, 2024 17:16 IST
    தமிழகத்தில் ஊழலால் நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை - அனுராக் தாக்கூர் விமர்சனம்

    சென்னை தியாகராய நகரில் தமிழிசையை ஆதரித்து ராஜஸ்தான் நிர்வாகிகள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளதால் நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை; பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து துறைகளும் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று கூறினார்.



  • Apr 08, 2024 16:54 IST
    மோடியின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் கட்சியின் அறிக்கை போல இருப்பதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு  எதிராக பிரதமர் மோடி பரப்புரைகளில் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.



  • Apr 08, 2024 16:43 IST
    குழப்பம் ஏற்படுத்தவே டி.டி.வி. தினகரன் தேர்தலில் நிற்கிறார் - தங்க தமிழ்ச்செல்வன்

    தேனி தொகுதி தி.மு.க  வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்: “மக்களை குழப்பவும் அ.தி.மு.க-வை சின்னாபின்னமாக்கவும் டி.டி.வி தினகரன் தேர்தலில் நிற்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. ஏழைகளுக்கு பா.ஜ.க எதையும் செய்யவில்லை. ஓ.பி.எஸ் தெருவுக்கு தெரு தர்ம யுத்தம் நடத்துகிறார்.” என்று விமர்சித்துள்ளார்.



  • Apr 08, 2024 15:44 IST
    செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் மோடி - ராஜ்நாத் சிங்

    தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. ஐ.நாவிலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறியுள்ளது என நாமக்கல் தேர்தல் பரப்புரையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்



  • Apr 08, 2024 15:27 IST
    ஏழைகளின் பிரச்சினைகளை காங்கிரஸ் உணர்ந்ததில்லை - மோடி

    ஏழைகளின் பிரச்சினைகளை காங்கிரஸ் உணர்ந்ததில்லை. பா.ஜ.க அரசின் முயற்சியால், 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர் என சத்தீஸ்கர் மாநிலம், பஸ்த்தரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • Apr 08, 2024 15:10 IST
    மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை - சஞ்சய் தத்

    மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்



  • Apr 08, 2024 14:57 IST
    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் அறிவிப்பு

    தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன. கல்வி ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணய குழு மாற்றி அமைக்கிறது



  • Apr 08, 2024 14:33 IST
    முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து

    தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதித் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், வரிப்பகிர்வை பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் இந்தப் புத்தாண்டு அமையட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Apr 08, 2024 14:14 IST
    தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தென்தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Apr 08, 2024 13:53 IST
    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ

    நாமக்கல் பா.ஜ.க வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்



  • Apr 08, 2024 13:46 IST
    விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு

    2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது



  • Apr 08, 2024 13:35 IST
    தபால் வாக்கு செலுத்திய ஆற்காடு வீராசாமி

    தி.மு.க மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, தபால் வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலுக்காக ஆற்காடு வீராசாமியிடம் தபால் வாக்கை தேர்தல் அதிகாரிகள் சேகரித்தனர்.



  • Apr 08, 2024 13:23 IST
    விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசு

    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவை விட அதிமுக வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் பெற்று கொடுத்தால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆடிகார் பரிசு தருவதாக அதிமுக தொண்டர் அறிவிப்பு



  • Apr 08, 2024 13:12 IST
    ஐ.பெரியசாமி மீதான வழக்கு: விசாரணைக்கு தடை

    அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 



  • Apr 08, 2024 12:39 IST
    உரிய விசாரணை வேண்டும்: அண்ணாமலை 

    கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை. விளையாட்டு மைதானம் தேவை தான், ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும்" - அண்ணாமலை 



  • Apr 08, 2024 12:27 IST
    விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

    விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு. அந்த தொகுதியின் உறுப்பினர் புகழேந்தியின் மறைவை அடுத்து சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு. 



  • Apr 08, 2024 12:24 IST
    நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை: அண்ணாமலை

    நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்- அண்ணாமலை



  • Apr 08, 2024 12:06 IST
    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பிரதமர் மோடி தமிழகம் வருவார். மகளிர் கட்டணமில்லா பேருந்தில் 460 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்



  • Apr 08, 2024 11:49 IST
    புஷ்பா-2 படத்தின் டீசர் வெளியீடு

     புஷ்பா-2 படத்தின் டீசர் வெளியீடு. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா-2. ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா-2 வெளியாகும் என அறிவிப்பு



  • Apr 08, 2024 11:48 IST
    ரூ.400 கோடி அளவில் வரிஏய்ப்பு செய்த ஆவணங்கள் பறிமுதல்

    தமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடந்து வந்தது

    ரூ.5 கோடி மதிப்பிலான நகை, பணம், ரூ.400 கோடி அளவிலான வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல்



  • Apr 08, 2024 11:15 IST
    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல்?

    விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. 

    மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.



  • Apr 08, 2024 10:45 IST
    சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

    கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில், சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்



  • Apr 08, 2024 10:11 IST
    நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

    நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு. 



  • Apr 08, 2024 09:57 IST
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨360 அதிகரிப்பு தங்கம் ஒரு கிராம் ரூ.6,660க்கும், சவரன் ரூ.53,280க்கும் விற்பனையாகிறது தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் கிடுகிடு உயர்வு.



  • Apr 08, 2024 09:46 IST
    அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்த விவசாயி

    அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்த விவசாயி.குட்டியை தாயோடு சேர்த்துவிடுமாறு விவசாயியிடமே திருப்பிக்கொடுத்த அண்ணாமலை. 



  • Apr 08, 2024 09:18 IST
    வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    "வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வெப்ப அலை வீசக்கூடும்" சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • Apr 08, 2024 09:17 IST
    நெல்லையில் 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்

    நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு செலவின பார்வையாளர் நோட்டீஸ் இன்று மாலை 5 மணிக்குள் கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு



  • Apr 08, 2024 08:44 IST
    தேர்தல் நேரம் எல்லார் வீட்டிலும் பணம் இருக்கும் : நயினார் நாகேந்திரன்

    சென்னை ரயிலில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய நான்கு கோடி ரூபாய் பணத்திற்கும், தமக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தேர்தல் நேரம் எல்லார் வீட்டிலும் பணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.



  • Apr 08, 2024 08:07 IST
    தேர்தல்: 6வது முறையாக தமிழ்நாடு வரவுள்ளார் பிரதமர் மோடி

    மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாக தமிழ்நாடு வரவுள்ளார் பிரதமர் மோடி. 



  • Apr 08, 2024 08:07 IST
    4 பேர் காயம்

    பிரதமர் ரோடு ஷோவில் மேடை சரிந்து விபத்து - 4 பேர் காயம்



  • Apr 08, 2024 08:07 IST
    ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக் குறைவால் மரணம்

    வந்தவாசி: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக் குறைவால் காலமானார். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment