பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல்
அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட போட்டி இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் – இன்று 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றனர்.
மின்சார பயன்பாடு
தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மூவரில், இருவரது வேட்புமனு ஏற்பு. கோலார் தங்க வயல் தொகுதி வேட்பாளர் ஆனந்த் ராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதி வேட்பாளர் குமார் ஆகியோரின் வேட்புமனு ஏற்பு; புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்புமனு நிராகரிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் சென்னை – ஹைதராபாத் இடையிலான போட்டியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்துடன் கண்டுரசித்து வருகிறார்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக்கிற்கு லஞ்ச வழக்கில் விசாரணைக்காக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் தற்போது 3660 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதால் நாளை ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும்” கிராம கமிட்டி மூலம் மட்டுமே டோக்கன் வழங்க வேண்டுமென சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தல்
தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-ஐ தாண்டி வெயில் பதிவு. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.80, ஈரோட்டில் 105.44 டிகிரி வெயில் பதிவு
இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கருணாநிதி தான் என சென்னை பெரம்பூரில் நடைபெறும் சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் – காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போட்டி.
காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அதிமுக பெயரில் ஏற்பு.
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த ஆனந்தராஜ், கோலார் தொகுதியில் சுயேட்சையாக போட்டி
புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
சென்னை கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து ஜி.எம். காலனியில் ரூ.84 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் கட்டுமான பணியையும் தொடங்கிவைத்தார்.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12ம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார்
. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்த கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டிச் சென்ற இளம் பெண் தொடர்பாக சி.சி.வி. காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.
இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை 22.71 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
2016-21ம் ஆண்டுகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
இதனால் ₹1,515 கோடி நிதியை தமிழ்நாடு அரசு பெற முடியவில்லை என சி.ஏ.ஜி. கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது
12 மணி நேரம் வேலை மசோதா மூலம் தி.மு.க அரசுக்கு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. மசோதாவை திரும்ப பெறக் கோரி முதல்வர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சந்திக்க உள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்; சென்னை கடற்கரை – காஞ்சிபுரம் ரயில் சேவையில் பாதிப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, கலைக் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் பி.டெக் 2ஆம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்ற மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆருத்ரா மோசடி வழக்கில் காவல் துறையினர் அனுப்பிய சம்மனை எதிர்த்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை: அ.தி.மு.க ஆட்சியில் 2017-18-ம் ஆண்டு போட்டித் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்க 60,000 லேப்டாப்கள் வாங்கப்பட்டு 8079 லேப்டாப்கள் மட்டுமே விநியோகம். மீதமுள்ள லேப்டாப்களை வழங்க நடவடிக்கை எடுக்காததால் அதன் பேட்டரி உத்தரவாதம் காலாவதி ஆகி அரசுக்கு ரூ.68.71 கோடி தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
சூடானில் சிக்கியுள்ள கேரள மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும்; சூடானில் வாழும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தி.மு.க-வில் உள்ள ஒரே நல்லவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவரை விரைவில் தூக்கிவிடுவார்கள். தி.மு.க-வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வருமான வரித்துறையிடம் கொடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளும் தி.மு.க 12 மணி நேர வேலைக்கான மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் போல் வந்தவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம் அடைந்தார்.
கர்நாடகா தேர்தல்: புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு நிகாகரிக்கப்பட்டது. கையெழுத்து தவறாக இருப்பதாகவும் அதை சரிசெய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோலார் தொகுதியிலும் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜன் மனு நிராகரிக்கப்பட்டது.
“காவலர் நலனை பேணி காக்கும் அரசு”- சட்டப்பேரவையில் காவல்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
காவல்துறை செயல்பாடு தொடர்பாக மாவட்ட வாரியாக நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். பெண் காவலர்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு – முதல்வர் ஸ்டாலின்
வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி புரிய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையில் வதந்தி பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக 88 வழக்குகள் பதிவு. 128 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்
குரல் மாதிரி சோதனைக்காக சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் 2 பேர் ஆஜர்
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் தகவல் பரிமாற்றம் செய்த இரண்டு இளைஞர்கள் ஆஜர்
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளி முதலமைச்சர் ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் அமளி .
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 45,320க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,665க்கு விற்பனை
திரைப்பட நடிகர் மம்மூட்டியின் தாயார் ஃபாத்திமா (93) வயது மூப்பின் காரணமாக காலமானார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் நீக்கம் * நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம் . ட்விட்டர் சந்தா செலுத்தாத நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்ததிய தாக்குதலில் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் 17 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. வெயில் கொளுத்துவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுரை
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அருகே நேற்று இரவு பயங்கர தீ. பேய்மலை மொட்டை என்ற இடத்தில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில், காட்டுத் தீ பற்றியது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்