Advertisment

Tamil Breaking News Highlights: தமிழகத்தில் ஜூலை 2 வரை வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

Tamil Nadu News Update Today- 28 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Summer heat Tamil nadu

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 29, 2024 07:34 IST
    தமிழகத்தில் ஜூலை 2 வரை வெப்பம் அதிகரிக்கும்

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனி முதல் செவ்வாய்க்கிழமை வரை (ஜூன் 29-ஜூலை 2) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

    சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 29,30 -ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு          



  • Jun 29, 2024 07:02 IST
    நீலகிரியில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இரண்டு தாலுகாக்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    - மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு



  • Advertisment
  • Jun 28, 2024 22:38 IST
    மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை

    மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நாளை தாக்கலாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Jun 28, 2024 20:52 IST
    விருது வழங்கும் விழா நிறைவு

    10மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நிறைவு;  காலை 10.30 மணிக்கு தொடங்கிய விழா சுமார் 9 மணி நேரமாக நடைபெற்றது;  800 மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் விருதுகள் மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினார் 



  • Jun 28, 2024 20:31 IST
    மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நாளை தாக்கலாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில்  உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jun 28, 2024 19:12 IST
    பூட்டிய வீடுகளில் இரவில் கொள்ளை - பா.ஜ.க நிர்வாகி கைது

    திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

    ரூ. 51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல். கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் தனது கிராமத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். 



  • Jun 28, 2024 18:41 IST
    காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

    சென்னையில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டுகளிடம் இருந்து 10.96 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் கள்ளச்சாராயம்  தொடர்பாக 4968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     2023ம் ஆண்டில் தமிழகத்தில் 3067 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன. 2023ம் ஆண்டில் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 2023 - 24ம் ஆண்டில் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்ற 1330 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 28, 2024 18:12 IST
    ஸ்டாலின் புதிய அறிவிப்பு

    “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் 1,93,891 அடுக்குமாடி குடியிருப்புகளில் 28,643 குடியிருப்புகள் சிதலமடைந்துள்ளன. சிதலமடைந்துள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் அடுத்த 3 ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும். 

    முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் சென்னையில் கொடுங்கையூர், வஉசி நகர் போன்ற திட்டப் பகுதிகள், தஞ்சையில் ஏ.வி.பதி நகர் மற்றும்  திருச்சியில் கோட்டக் கொல்லை திட்டப்பகுதிகளில் உள்ள 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடி செலவில் மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப் பகுதிகள் கட்டுமான செய்யப்படும்” என்று  110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவித்துள்ளார். 



  • Jun 28, 2024 17:58 IST
    பெண்கள் பாதுகாப்பு - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

    தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

    "பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெண்கள் பாதுகாப்பு குறித்து உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் தெரிவித்தது. 

    தமிழ்நாட்டில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க கோரி பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக தொடர்ந்த  வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. 



  • Jun 28, 2024 17:32 IST
    ரூ. 1,146 கோடி செலவில் மறு கட்டுமானம் 

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 குடியிருப்புகள், ரூ. 1,146 கோடி செலவில் மறு கட்டுமானம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

    சென்னை உட்பட பல நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்து மறு கட்டுமானம் செய்யப்படும். சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அடுத்த 3 ஆண்டுகளில் சீரமைக்கப்படும்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Jun 28, 2024 17:06 IST
    இடைக்கால தடை 

    ஆந்திராவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

     



  • Jun 28, 2024 16:57 IST
     நீலகிரியில் கனமழை

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Jun 28, 2024 16:57 IST
    "நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை" - ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “நீட் தேர்வு முறைகேடு நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதுபோன்ற முறைகேடுகளால் மாணவர்களின் பல ஆண்டுகால கனவு உடைந்து சுக்குநூறாகியுள்ளது. 

    மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என முறையிட்டோம். 2 கோடி மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை குறித்த விவாதிக்க என்.டி.ஏ கூட்டணி அரசு தயாராக இல்லை. 

    தேர்வு நடத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை நாம் மாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த முறைகேடுகள் தெளிவுப்படுத்தி உள்ளன. நீட் விலக்கு தீர்மானம் கொண்டு வருவதே ஒரே வழி, ஆனால், என்.டி.ஏ கூட்டணி அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. 

    இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்து எங்களை வழி நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது புரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து விவாதித்து, நிரந்திர தீர்வு காண எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம்” என்று உருக்கமாக பேசியுள்ளார். 



  • Jun 28, 2024 16:32 IST
    ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு - ஐகோர்ட் உத்தரவு

    ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jun 28, 2024 16:14 IST
    சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்தில் கள்ளக்குறிச்சி போலீசார்

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 9 போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளது. சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாகவும், கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Jun 28, 2024 15:50 IST
    மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    நீட் விவகாரத்தை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த நிலையில், பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மக்களவையிலும், நீட் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், திங்கட் கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • Jun 28, 2024 15:37 IST
    ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை

    மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



  • Jun 28, 2024 15:10 IST
    ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு தீவிர ஆய்வுக்கு பிறகே எடுக்கப்பட்டது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு தீவிர ஆய்வுக்கு பிறகே எடுக்கப்பட்டது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்



  • Jun 28, 2024 14:38 IST
    தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்



  • Jun 28, 2024 14:20 IST
    நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் – இ.பி.எஸ்

    நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை, இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்



  • Jun 28, 2024 14:12 IST
    நீட் விவகாரம்: ஜூலை 7 கருத்துக் கேட்பு

    நீட் தேர்வை வெளிப்படையாக, நம்பகத் தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்வது தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழு வரும் ஜூலை 7ஆம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை கூறலாம் https //innovateindia.mygov.in/examination-reforms-nta  என்ற இணைய தளத்தில் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என அழைப்பு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டது



  • Jun 28, 2024 14:06 IST
    நீட் தேர்வு: தி.மு.க மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி வரும் ஜூலை 3ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூலை 3ஆம் தேதி காலை 9 மணிகு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் - திமுக மாணவரணி



  • Jun 28, 2024 13:45 IST
    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் : இ.பி.எஸ் அறிக்கை

    ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்கிட வேண்டும் என தி.மு.க அரசுக்கு வலியுறுத்துகிறேன்” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை



  • Jun 28, 2024 13:42 IST
    7 நாட்களுக்கு மழை

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஜூலை 04-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 28, 2024 13:41 IST
    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் முக்கிய தகவல்

    தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் 2023 முதல் மே 2024 வரை 13,612 குற்றங்கள் கண்டறியப்பட்டு, ரூ.19.68 கோடி அபராதம் விதிப்பு; 85,495 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 13,639 கடைகள் மூடல்; மேலும், 154 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு ரூ.11.79 லட்சம் அபராதம் விதிப்பு” - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • Jun 28, 2024 13:30 IST
    6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்: பிரேமலதா விஜயகாந்த்

    ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை.  6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம் . விஷச்சாராய விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.  போதைப்பொருள் புழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்தார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்



  • Jun 28, 2024 13:08 IST
    மாணவ, மாணவிகளை பாராட்டிய விஜய்க்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

    தமிழகம் முழுவதும் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டிய விஜய்க்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து.  பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியை விஜய் செய்துள்ளார் - சீமான் என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - சீமான்



  • Jun 28, 2024 12:02 IST
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா சந்திப்பு விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்ததாக தகவல்



  • Jun 28, 2024 11:25 IST
    தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

    நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

    தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.



  • Jun 28, 2024 11:22 IST
    டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

    டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.



  • Jun 28, 2024 10:55 IST
    சின்னத்துரை அருகில் அமர்ந்த விஜய்

    ஜாதி கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அருகில் விஜய்



  • Jun 28, 2024 10:49 IST
    நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல்: தனித்தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்

    நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்.      

    நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு  எட்டாக்கனியாக ஆகிவிட்டது. நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

    மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.

    சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரை



  • Jun 28, 2024 10:19 IST
    சுடச்சுட தயாராகும் விருந்து

    கல்வி விருது வழங்கும் விழா மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது.   அதன்படி, கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு சாதம்,  வடை,  அப்பளம்,  அவியல்,  மோர்,  வெற்றிலை பாயாசம்,  இஞ்சி,  துவையல்,  தயிர் பச்சடி,  அவரை மணிலா பொரியல்,  உருளை காரக்கறி,  ஆனியன் மணிலா, வத்தக்குழம்பு,  கதம்ப சாம்பார்,  தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்படுகிறது.



  • Jun 28, 2024 10:17 IST
    புது தோற்றத்தில் விஜய்

    சென்னையில் த.வெ.க சார்பில் நடைபெறும் கல்வி விருது விழாவிற்கு வருகை தந்தார் விஜய்.

    Vijay kalvi vizha

     



  • Jun 28, 2024 10:08 IST
    சவரனுக்கு ரூ.328 உயர்ந்த தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்தது.  ஒரு கிராம் தங்கம் ரூ.6,666க்கும், சவரன் ரூ.53,328க்கும் விற்பனையாகிறது



  • Jun 28, 2024 09:49 IST
    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 8-ம் நாள் அமர்வு தொடங்கியது



  • Jun 28, 2024 09:29 IST
    கல்வி விருது வழங்கும் விழாவில் செல்போன் அனுமதியில்லை

    விஜய் தலைமையில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் செல்போன், பேனா, நோட்புக் கொண்டு செல்ல அனுமதியில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து இவற்றை டோக்கன் பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்படுகிறது. விழா முடிந்த பிறகு பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்



  • Jun 28, 2024 08:52 IST
    கர்நாடகா சாலை விபத்தில் 13 பேர் பலி

    கர்நாடகா ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.



  • Jun 28, 2024 08:21 IST
    அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன: புஸ்சி ஆனந்த்

    மாணவர்கள் பாராட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. விஜய் பேசிய பின்னர் 800க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளார்கள் .

    மாணவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்



  • Jun 28, 2024 07:56 IST
    டெல்லியில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

    டெல்லியில் கனமழை பெய்துவரும் நிலையில், விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து. வாகனங்கள் மீது மேற்கூரை விழுந்ததில் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 28, 2024 07:42 IST
    விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்த விஜய்

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார் விஜய்.  போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளார்.

    சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Jun 28, 2024 07:41 IST
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி,நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசான மழை பெய்யும்

     
    சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு



  • Jun 28, 2024 07:41 IST
    விஜய் தலைமையில் இன்று 2வது ஆண்டு கல்வி விருது விழா

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா,  இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது.

    இதில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.  இந்த விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் சமீபத்தில் வழங்கப்பட்டது.



  • Jun 28, 2024 07:40 IST
    செல்போன் கட்டணங்களை உயர்த்தியது ஜியோ

    5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது.

    ரூ. 155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ. 189 ஆகவும், ரூ 399 ஆக இருந்த கட்டணம் ரூ. 449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கான 2ஜிபி திட்டம் ரூ.299-லிருந்து ரூ.349 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஜூலை 3 ஆம் தேதியில் முதல் அமலாகும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    84 நாட்களுக்கான ரூ.666 மதிப்புள்ள ப்ளான் ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. மாதம், இரு மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment