Advertisment

Tamil News Today Live: தீபாவளி பண்டிகை - பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்

Tamil News Live Updates-30.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Police protection

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 227-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னை குடிநீர் ஏரிகளில் 41.54% நீர் இருப்பு  உள்ளது.  செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 4.884 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 41.75% ; புழல் - 74.76% ; பூண்டி - 14.73% ;  சோழவரம் - 9.8% ; கண்ணன்கோட்டை - 62.6%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 30, 2024 14:52 IST
    ஒன்றிணைந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என மக்கள் எண்ணம்- ஓபிஎஸ்

    அதிமுக ஒன்றிணைந்தால் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் என மக்களின் எண்ணமாக உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2026-ல் அதிமுகவுடன் இணையாவிட்டால் நல்ல முடிவாக எடுப்போம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.



  • Oct 30, 2024 14:40 IST
    தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் ராகுல் காந்தி

    மகாராஷ்டிராவின் தேர்தலை முன்னிட்டு, வரும் 6-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை ராகுல் காந்தி வெளியிடுகிறார். இதில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.



  • Oct 30, 2024 14:08 IST
    நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்

    நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி இருந்த தர்ஷன், முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற ஜாமின் கொரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 6 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Oct 30, 2024 13:49 IST
    2 மணி நேரத்திற்கு மழை தொடரும்

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்யுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அண்ணா நகரில் கடந்த 30 நிமிடங்களில் 7.5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.



  • Oct 30, 2024 13:37 IST
    8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை மற்றும்  ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 2-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2024 13:34 IST
    தீபாவளி பண்டிகை - பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தை பகுதி உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை தீவிரமாக கண்காணிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2024 13:12 IST
    புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு

    தீபாவளியை முன்னிட்டு நாளை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுமெனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Oct 30, 2024 13:07 IST
    சென்னையில் மழை

    சென்னையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மாம்பலம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு மற்றும் வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.



  • Oct 30, 2024 12:43 IST
    கால்பந்து மைதானங்களை, தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை திரும்பப் பெற சென்னை மாநகராட்சி முடிவு

    சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது



  • Oct 30, 2024 12:29 IST
    குரங்குகளுக்கு நல்ல உணவளிக்க ரூ 1 கோடி நன்கொடை வழங்கிய அக்ஷய் குமார்!

    பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அயோத்தியில் உள்ள சுமார் 1,200 குரங்குகளுக்கு நல்ல உணவளிக்க ரூ 1 கோடி நன்கொடை வழங்கினார்



  • Oct 30, 2024 12:10 IST
    தேவரின் உருவச் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை

    பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்



  • Oct 30, 2024 11:53 IST
    சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி தொடக்கம்

    சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளது. 1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ளரங்கம் உள்ளது. இதில் 500 இருக்கைகள் செஸ் பயிற்சி மையங்களில் இருந்து வரும் வருங்கால வீரர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள இருக்கைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்



  • Oct 30, 2024 11:35 IST
    கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்

    கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழக்கப்பட்டுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக கூறியதை அடுத்து, 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது



  • Oct 30, 2024 11:24 IST
    முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

    பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் தி.மு.க அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.



  • Oct 30, 2024 11:08 IST
    ஆட்சி அதிகாரத்தில் பங்கு - விஜய் கருத்துக்கு விஜய பிரபாகரன் வரவேற்பு

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று த.வெ.க. மாநாட்டில் விஜய் பேசியதற்கு, விஜய பிரபாகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விஜய பிரபகாரன், “அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும் போது அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை நாங்களும் முன்வைக்கிறோம்” என பசும்பொன்னில்  விஜய பிரபாகரன் பேட்டி அளித்தார். 



  • Oct 30, 2024 10:50 IST
    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ராகிங் – டி.எஸ்.பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த டி.எஸ்.பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் மீது பீர் பாட்டிலால் தாக்கிய நிலையில், காயமடைந்த ஆலன் கிரைசா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 5ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கவின், தியானேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Oct 30, 2024 10:27 IST
    தீபாவளி: கோவை - திண்டுக்கல் இடையே மெமு சிறப்பு ரயில் இயக்கம்

    தீபாவளியை ஒட்டி கோவை - திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாகவும் இன்று முதல் நவம்பர் 6 வரை தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும்



  • Oct 30, 2024 10:09 IST
    வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 7,440 விற்பனை செய்யப்படுகிறது



  • Oct 30, 2024 10:07 IST
    நெல்லையில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு 

    நெல்லை  மலையாளமேடு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே முன் விரோதம் காரணமாக மோதல். இரு தரப்பை சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு. 6 பேருக்கு அரிவாள் வெட்டு  ஏற்பட்டத்தில் ஒருவர் பலியானார்.

    5 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Oct 30, 2024 09:26 IST
    கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசூப் மரணம்

    'கங்குவா’ படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப் காலமானார்.

    kan edit

    'கங்குவா’ படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப் (43) காலமானார்.  கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நிஷாத் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சூர்யா 45 படத்திலும் அவர் பணியாற்ற ஒப்பந்தமாகி இருந்தார். 

    kan edit1



  • Oct 30, 2024 09:03 IST
    கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை

    தேவர் ஜெயந்தி தினத்தை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்க்காக புறப்பட்டார். 



  • Oct 30, 2024 08:36 IST
    தாம்பரம்-மானாமதுரை இன்று சிறப்பு ரயில்

    தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம். இன்று மாலை 5 மணிக்கு ரயில் புறப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது 



  • Oct 30, 2024 08:33 IST
    மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

    தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்றும்,  நாளையும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு;  காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 30, 2024 08:30 IST
    10,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    மதுரை: பசும்பொன் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில், பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன

    மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐஜி தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள எஸ்.பி.க்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    300 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கூடுதலாக போலீசார் போடப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்



  • Oct 30, 2024 08:28 IST
    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

     செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்,  மயிலாடுதுறை., தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 30, 2024 08:24 IST
    அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து 

     

    உலக அளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நண்பர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் கார் பந்தய முன்னெடுப்பை வாழ்த்தியத்ற்கு நன்றி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 



  • Oct 30, 2024 08:20 IST
    சென்னையில் கேஸ் நிரப்பும் பங்கில் விபத்து

    சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில்  திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.



  • Oct 30, 2024 08:19 IST
    2,31,363 பேர் சொந்த ஊர் பயணம்

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மொத்தம் 4059 பேருந்துகள் இயக்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் 

    வழக்கமாக இயங்கும் 2092 பேருந்துகளுடன் 1967 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 



  • Oct 30, 2024 07:52 IST
    பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை  அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை மட்டும் பள்ளி,  கல்லூரிகள் செயல்படும். மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 30, 2024 07:50 IST
    ஸ்டாலின் இன்று பசும்பொன் பயணம்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பசும்பொன் செல்கிறார். 
    தேவர் நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment