Advertisment

Tamil News Today : பொறியியல் தரவரிசைப் பட்டியல் செப். 28ம் தேதி வெளியிடப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

author-image
WebDesk
New Update
Tamil News Today : பொறியியல் தரவரிசைப் பட்டியல் செப். 28ம் தேதி வெளியிடப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

Tamil News Today Updates : தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. 8 நாட்கள் முன்னதாகவே நாடளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

Advertisment

கொரோனா தொற்றால் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 3000 கோடி நிதி வழங்கிடுக என பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:14 (IST)24 Sep 2020

    பொறியியல் தரவரிசைப் பட்டியல் செப். 28ம் தேதி வெளியிடப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

    நாளை வெளியிடப்படுவதாக இருந்த பொறியியல் தரவரிசைப் பட்டியல் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    20:42 (IST)24 Sep 2020

    அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி பிதமருக்கு கடிதம்

    அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    19:51 (IST)24 Sep 2020

    எஸ்பிபி கவலைக்கிடம்- மருத்துவமனை சென்றார் கமல்ஹாசன்

    எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய கமல்ஹாசன் மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவர்களிடம் எஸ்பிபி உடல்நிலை குறித்து கேட்டறிகிறார்.

    19:37 (IST)24 Sep 2020

    தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா; 66 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 66 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:43 (IST)24 Sep 2020

    பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துமனை நிர்வாகம்

    பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி உயிருக்கு மிக ஆபத்தான கட்டத்த்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    18:37 (IST)24 Sep 2020

    விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் - பிரேமலதா விஜயகாந்த்

    பிரேமலதா விஜயகாந்த்: விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார். விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

    18:09 (IST)24 Sep 2020

    குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு தொடரும்: மத்திய வேளாண் அமைச்சர்

    மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்: “வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவார்கள். காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழிநடத்தி, தனது கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது. குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு, அது தொடரும். விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் எல்லைக்கு வெளியே விற்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

    16:30 (IST)24 Sep 2020

    மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின

    நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ஐ பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும், மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இது வரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன.

    16:26 (IST)24 Sep 2020

    என்னால் இதை நம்ப முடியவில்லை - ஹர்ஷா போகல்

    16:24 (IST)24 Sep 2020

    டீன் ஜோன்ஸ் மரணமடைந்தார்
    முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணமடைந்தார். 
     

    16:03 (IST)24 Sep 2020

    51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு: மத்திய அரசு தகவல்

    கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த, 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா மெய்நிகர் மற்றும் நேரடியான நிகழ்ச்சியாக நடத்தப்படும். சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்தில் சமீபத்தில் நடந்த விழாக்களில் பின்பற்றியபடி, கொவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும்.

    15:52 (IST)24 Sep 2020

    தருமபுரி மாவட்டத்தில் இன்று மேலும் 77 பேருக்கு வைரஸ் தொற்று

    தருமபுரி மாவட்டத்தில் இன்று மேலும் 77 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3195 ஆக உயர்ந்துள்ளது.

    15:25 (IST)24 Sep 2020

    வழக்கமான முறையில் வழக்கு விசாரணைகள் நடைபெறும் - சென்னை உயர்நீதிமன்றம்

    புதுச்சேரி நீங்கலாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் வழக்கமான முறையில் வழக்கு விசாரணைகள் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மனுதாரர், இனி நேரில் நீதிமன்றங்களில் ஆஜாராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

     முன்னதாக,  கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலால் சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டி , பல்வேறு மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் மெய்நிகர் மூலம் விசாரணைகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

      

    15:19 (IST)24 Sep 2020

    உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

    15:08 (IST)24 Sep 2020

    அக்.1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

    10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆக்டோபர் 1ம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்  என்று தமிழக அரசு தெரிவித்தது.     

    14:53 (IST)24 Sep 2020

    இந்தியா – இலங்கை நட்புறவு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி கருத்து

    கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்தியா - இலங்கை இடையேயான ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை, இருநாடுகளும் ஆராய வேண்டியது அவசியமென பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.  இந்தியா – இலங்கை நட்புறவு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே-வுடன் நாளை மறுதினம், காணொளிக்காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா – இலங்கை இடையேயான இருதரப்பு நட்புறவு குறித்து விரிவாக விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    13:41 (IST)24 Sep 2020

    மணி நகரில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது - குஜராத் முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

    குஜராத்தின் மணி நகரில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதினார்.

    13:38 (IST)24 Sep 2020

    சுரேஷ் அங்கடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்து 2 நிமிடங்கள் மவுனம் அனுசரித்தது

    ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்து 2 நிமிடங்கள் மவுனம் அனுசரித்தது. அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பில் மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறது.

    13:35 (IST)24 Sep 2020

    491 காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளன

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 491 காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளன. 

    13:03 (IST)24 Sep 2020

    விஜயகாந்தை நலம் விசாரித்த முதல்வர்

    13:00 (IST)24 Sep 2020

    பாரதிராஜா ட்வீட்

    நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர் என்று இயக்குநர் பாரதிராஜா ட்வீட் செய்துள்ளார்.

    12:58 (IST)24 Sep 2020

    பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    12:57 (IST)24 Sep 2020

    சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரது பெருமைகளையும், புகழையும் போற்றி நினைவு கூர்கிறேன். விளையாட்டு, கல்வி, தொழில் என பல துறைகளில் சாதனை படைத்தவர் பா.சிவந்தி ஆதித்தனார்" என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

    12:34 (IST)24 Sep 2020

    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாகத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

    12:14 (IST)24 Sep 2020

    முதல்வர் இரங்கல்

    மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சுரேஷ் அங்கடியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். 

    11:35 (IST)24 Sep 2020

    விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    விஜயகாந்த் விரைவில் நலம் பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    11:14 (IST)24 Sep 2020

    சசிகலா கடிதம்

    ”ஆர்.டி.ஐ.-யின் கீழ் என்னைப் பற்றிய தகவல்களை வழங்கக் கூடாது”. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தம்மை பற்றி விவரங்களை வழங்கக் கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். 

    11:12 (IST)24 Sep 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    10:09 (IST)24 Sep 2020

    விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    10:02 (IST)24 Sep 2020

    விஜயகாந்த் நலம்பெற வேண்டும் ஓபிஎஸ்

    09:31 (IST)24 Sep 2020

    அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா

    திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா உறுதியான கே.எஸ்.விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    09:27 (IST)24 Sep 2020

    விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்

    விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

    Tamil News Today: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனையில், ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment