Advertisment

Tamil News highlights: இந்தோனேஷியா மேற்கு பபுவா பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Tamil Nadu News, Tamil News LIVE, Kilambakkam bus terminus, Vijayakanth, Tamil nadu rains today, New Year 2024– 30 December 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aasa

Tamil news

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்         

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

  • Dec 30, 2023 20:55 IST
    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 பிப்.1ம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு



  • Dec 30, 2023 20:54 IST
    தென்காசியில் கனமழை

     தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது



  • Dec 30, 2023 19:34 IST
    முதல்வருடன் சுமுகமான சந்திப்பு : ஆளுநர் மாளிகை தகவல்

    முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது என்று ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினும் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆதரவை தருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி அளித்துள்ளார்.

     ஆளுநர் தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அரசியலமைப்பு சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 30, 2023 18:53 IST
    கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்; அமைச்சர் ரகுபதி

    ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார். 10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார். முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பான கோப்புக்களுக்கு அனுமதி கோரியுள்ளோம். அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புக்களுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி தருமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம். கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என ஆளுநருடனான ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்



  • Dec 30, 2023 18:34 IST
    புத்தாண்டு கொண்டாட்டம்; 18000 போலீசார் பாதுகாப்பு

    சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கடற்கரையில் மணற்பகுதியில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 1 மணி வரை மட்டுமே கேளிக்கை விடுதி, ரிசார்ட், ஹோட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.



  • Dec 30, 2023 18:08 IST
    புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

    புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்

    சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 18000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது; வாடகை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

    மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை

    இரவு 1 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்

    குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது

    என வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டி அளித்துள்ளனர்



  • Dec 30, 2023 17:43 IST
    நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் மயக்கம்

    தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நெரிசலில் சிக்கி நடிகர் டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போது மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்த பின்னர் நடிகர் டி.ராஜேந்தரை பத்திரமாக காரில் அழைத்து சென்றனர்.



  • Dec 30, 2023 17:31 IST
    ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் ஸ்டாலின் சந்திப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்துப் பேசுகிறார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Dec 30, 2023 17:06 IST
    கோவை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

    கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 5 பாரத் வந்தே பாரத் ரயில் சேவைகளையும், 2 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.



  • Dec 30, 2023 16:59 IST
    மதுரை எய்ம்ஸ் கட்ட ஜன.2க்குள் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும்; மத்திய அமைச்சர்

    மதுரை எய்ம்ஸ் கட்ட ஜனவரி 2 ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும். 3 மாதத்தில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும், என தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார்



  • Dec 30, 2023 16:31 IST
    ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது; மோடி

    அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் 'பிரான் பிரதிஷ்டா' விழாவிற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • Dec 30, 2023 16:11 IST
    நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை; சுதீஷ்

    விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க தே.மு.தி.க சார்பில் வலியுறுத்தப்படும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்கு தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளோம் என தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்



  • Dec 30, 2023 15:50 IST
    விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் - பிரேமலதா கோரிக்கை!

     

    “விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வச்சிருக்கோம்.. செய்வாங்கனு நம்புகிறோம்” -விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 

     



  • Dec 30, 2023 15:22 IST
    தென் மாவட்டங்களில் கனமழை - அமைச்சர் ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு

     

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தாமிரபரணி ஆற்றில் 7000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 



  • Dec 30, 2023 14:29 IST
    ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிவாரண உதவிகள் 

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.  அரிசி, கோதுமை, ரவை, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் வேஷ்டி, சேலை, பாய், போர்வை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன



  • Dec 30, 2023 13:46 IST
    பெருமழை - ரூ.1000 கோடியில் நிவாரண தொகுப்பு

     

    பெருமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண தொகுப்பு என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



  • Dec 30, 2023 13:45 IST
    5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

     

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Dec 30, 2023 13:28 IST
    கன்னியாகுமரி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Dec 30, 2023 13:27 IST
    விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி

    விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கட்சி தலைமை அனுமதி - பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு



  • Dec 30, 2023 13:05 IST
    நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடிகர் விஜய்

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகை சென்றடைந்தார் நடிகர் விஜய். 



  • Dec 30, 2023 12:51 IST
    விஜயகாந்த் உருவப் படத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மரியாதை

    சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்



  • Dec 30, 2023 12:38 IST
    சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி தேவை

    புத்தாண்டு - சென்னையில் தீவிர கண்காணிப்பு. நாளை இரவு 9 மணி முதல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள்.

    சென்னை மாநகரம் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தேவை. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை.

    முக்கிய இடங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை



  • Dec 30, 2023 12:36 IST
    அயோத்தியில் ரயில் நிலையம் திறப்பு

    அயோத்தியில் ரூ.240 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தியா தாம் ரயில் நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

    அமிர்த பாரத் அதிவிரைவு பயணிகள் ரயில்கள், புதிய வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.



  • Dec 30, 2023 12:35 IST
    நடிகர் விஜய் தூத்துக்குடி வருகை

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தூத்துக்குடி வந்தடைந்தார் நடிகர் விஜய். 



  • Dec 30, 2023 12:34 IST
    5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கம்: சிவசங்கர்

    சென்னை கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும்- சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்



  • Dec 30, 2023 12:34 IST
    5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கம்: சிவசங்கர்

    சென்னை கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும்- சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்



  • Dec 30, 2023 12:34 IST
    புதிய பேருந்து நிலையம் - தை திங்கள் பரிசு

    புதிய பேருந்து நிலையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு. நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடித்துள்ளோம்

    ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வசதி. 

    நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வசதி. புதிய ரயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது - அமைச்சர் சேகர்பாபு



  • Dec 30, 2023 12:24 IST
    ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

    இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார். 


    நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்து பேச அளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 
    ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார்



  • Dec 30, 2023 11:40 IST
    பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 

    திருவள்ளூர் பழவேற்காடு மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை மறுநாள்(ஜனவரி 1)  பி.எஸ்.எல்.வி-சி58 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 



  • Dec 30, 2023 11:36 IST
    அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி 

    ‘வால்மீகி’ விமான நிலையத்தை திறந்து வைக்க அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி 



  • Dec 30, 2023 11:36 IST
    அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி 

    ‘வால்மீகி’ விமான நிலையத்தை திறந்து வைக்க அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி 



  • Dec 30, 2023 11:01 IST
    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    Credit: Sun News



  • Dec 30, 2023 10:36 IST
    பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 58 ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜன.1 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு



  • Dec 30, 2023 10:34 IST
    மழைக்கு வாய்ப்பு

    மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    -சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 30, 2023 10:10 IST
    அதிக அளவில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு- அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

    தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

    ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். 25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது, 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது

    -சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி



  • Dec 30, 2023 09:57 IST
    நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடிகர் விஜய்

    திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.



  • Dec 30, 2023 09:48 IST
    அயோத்தி சர்வதேச விமான நிலைய காட்சிகள்

    புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.



  • Dec 30, 2023 09:36 IST
    சபரிமலை நடை இன்று திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.



  • Dec 30, 2023 09:32 IST
    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் பிரத்யேக புகைப்படங்கள்

    Credit: Sun News



  • Dec 30, 2023 09:30 IST
    பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை

    கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    அலுவலகத்துக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Dec 30, 2023 08:58 IST
    அம்ரித் பாரத் ரயிலின் உட்புற காட்சிகள்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தியில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் புதிய அம்ரித் பாரத் ரயிலின் உட்புற காட்சிகள்.



  • Dec 30, 2023 08:57 IST
    அயோத்தியில் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி

    பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு வருகை தந்து, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையம் மற்றும் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதை முன்னிட்டு அங்கு களைகட்டும் கலை நிகழ்ச்சிகள்



  • Dec 30, 2023 08:15 IST
    தாமிரபரணி ஆற்றில் 11 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

    பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

    சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்    



  • Dec 30, 2023 08:14 IST
    தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

    2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

    தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.



  • Dec 30, 2023 08:14 IST
    9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

    தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 30, 2023 07:51 IST
    அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

    நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.

    6 - 10ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரையும், 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் - முதன்மை கல்வி அலுவலர்



  • Dec 30, 2023 07:51 IST
    தெற்கு ரயில்வேக்கு 2 வந்தே பாரத் ரயில்கள்

    அயோத்யா ரயில் நிலையம் திறப்பு விழாவில் 6 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    6 வந்தே பாரத் ரயில்களில் கோயம்புத்தூர்- பெங்களூரு கன்டோன்மெண்ட் செல்லும் கோயம்புத்தூர் வந்தே பாரத், மங்களூரு சென்ட்ரல்- மட்காவு செல்லும் மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் என தெற்கு ரயில்வேக்கு 2 ரயில்கள் இன்று முதல் இயக்கம்.



  • Dec 30, 2023 07:50 IST
    அயோத்தி விமான நிலையம் இன்று திறப்பு

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து மோடி பிரமாண்டமான பேரணி செல்லவும் ஏற்பாடு



  • Dec 30, 2023 07:50 IST
    பராமரிப்பு பணி- திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

    திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை  திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு



  • Dec 30, 2023 07:50 IST
    பராமரிப்பு பணி- திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

    திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை  திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment