Tamil News Today Live Updates: தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டங்கள் குறைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மத்திய அரசை பின்பற்றி இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், இதன் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக, கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அப்போது விகாஸ் துபே தப்பி ஓட முயற்சி செய்ததால் அவரை என்கவுண்டர் செய்ததாக உத்திர பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துரை குழு இன்று ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் முதல்வரை சந்தித்து நோய் தடுப்பு முயற்சிகளை பற்றி ஆலோசிக்கிறார்கள். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் வணிகர்கள் கொலை வழக்கு குறித்த விசாரணையை இன்று தொடங்குகிறது சிபிஐ. தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 4,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. அதே நேரத்தில் 3,994 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் 6 பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம்(30), தவுபீக்(27), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து காஜா மொய்தீன்(53), மெகபூப் பாஷா(48), இஜாஸ் பாஷா(46), ஜாபர் அலி(26), உள்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில் 6 பேர் மீதும் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
சென்னை பெருங்குடி, திருவான்மியூர் பகுதியில், போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக மத்தி்ய குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்பட உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம்"
சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது"
தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து #Plasma தானம் செய்ய முதலமைச்சர் வேண்டுகோள்
தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் நடவடிக்கை
18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்
கல்வி, சராசரி குடும்பத்தின் கனவு, எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி
அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்
தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்
கொரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதார குழு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் சென்னை வந்தது. சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 7 பேர் குழுவில் உள்ளனர். நேற்று சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், டி.எம்.எஸ் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
பின்னர், தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தொற்று அதிகம் உள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இன்று காலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
வால்டாக்ஸ் சாலை வழியாக வருபவர்கள் ஈவிஆர் சாலை, முத்துசாமி பாலம் வழியாக அண்ணாசாலை செல்லலாம்
முத்துசாமி சாலை வழியாக வருபவர்கள் வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணாசாலை செல்லலாம்
* சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன் மெட்ரோ நிறுவனம் சார்பில் சுரங்கப்பாதை பணி நடப்பதால் மாற்றம் - போலீஸ்
வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 7 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு e-box என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளி, கல்லூரிகள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்
* ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை இன்று தொடங்குகிறது
* விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்
* மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி செல்ல உள்ளனர்
* வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றவுடன் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்க உள்ளனர்
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!
எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
- மு.க.ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இன்று (10.7.2020) தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினேன். pic.twitter.com/UoeymicYwz
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 10, 2020
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால் விற்பனை நிலையம், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அமைச்சர் வேலுமணி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் #COVID19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
— SP Velumani (@SPVelumanicbe) July 10, 2020
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது இவருக்கு பதிலாக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாட்டின் தேச பாதுகாப்புக்கு உறுவிளைவிக்கும் வகையில் நடந்துள்ள தங்க கடத்தல் வழக்கை தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க கோரி முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய முயன்ற போது டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தப்பியோடிய விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் நேற்று பிடிபட்டார். தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணமடைந்ததாக உ.பி காவல்துறை அறிவிப்பு. விகாஸ் துபேவை அழைத்து வரும் போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights