Advertisment

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறைப்பு- திங்கட்கிழமை முடிவாகிறது

மத்திய அரசை பின்பற்றி இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், இதன் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
school

பள்ளி மாணவிகள்

Tamil News Today Live Updates: தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டங்கள் குறைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மத்திய அரசை பின்பற்றி இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், இதன் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.

Advertisment

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக, கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அப்போது விகாஸ் துபே தப்பி ஓட முயற்சி செய்ததால் அவரை என்கவுண்டர் செய்ததாக உத்திர பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துரை குழு இன்று ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் முதல்வரை சந்தித்து நோய் தடுப்பு முயற்சிகளை பற்றி ஆலோசிக்கிறார்கள். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் வணிகர்கள் கொலை வழக்கு குறித்த விசாரணையை இன்று தொடங்குகிறது சிபிஐ. தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 4,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. அதே நேரத்தில் 3,994 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:21 (IST)10 Jul 2020

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் 6 பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

    களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம்(30), தவுபீக்(27), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து காஜா மொய்தீன்(53), மெகபூப் பாஷா(48), இஜாஸ் பாஷா(46), ஜாபர் அலி(26), உள்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.  பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில் 6 பேர் மீதும் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

    22:16 (IST)10 Jul 2020

    கேரளாவில் இன்று 416 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்று 416 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் முதன்முதலாக தான் ஒரு நாளில் 400 பேருக்கும் அதிகமாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    22:04 (IST)10 Jul 2020

    சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி : 3 பேர் கைது

    சென்னை பெருங்குடி, திருவான்மியூர் பகுதியில், போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக மத்தி்ய குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    21:41 (IST)10 Jul 2020

    அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்பட உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    20:49 (IST)10 Jul 2020

    மகாராஷ்டிராவில் மேலும் 7,862 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் புதிதாக 7,862 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,38,461ஆக அதிகரித்துள்ளது. 226 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 9,893 ஆக உயர்ந்துள்ளது.

    20:29 (IST)10 Jul 2020

    முதல்வர் பழனிசாமிக்கு விருது

    முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள ரோட்டரி சங்கம் சார்பாக “ PAUL HARRIS FELLOW” விருது விரைவில் வழங்கப்பட உள்ளது.

    19:54 (IST)10 Jul 2020

    பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலு தகுதி நீக்கம்

    புதுச்சேரி பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    19:39 (IST)10 Jul 2020

    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13, 15, 16, 17 வயது சிறுமிகளின் திருமணத்தை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    19:11 (IST)10 Jul 2020

    மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு

    சென்னை - 1,205

    செங்கல்பட்டு - 242

    திருவள்ளூர் - 219

    தூத்துக்குடி - 195

    மதுரை - 192

    நெல்லை - 145

    விருதுநகர் - 143

    வேலூர் - 140

    சேலம் - 127

    திருச்சி - 109

    தேனி - 108

    கன்னியாகுமரி - 105

    திருவண்ணாமலை - 103

    ராமநாதபுரம் - 85

    கள்ளக்குறிச்சி - 80

    18:58 (IST)10 Jul 2020

    மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

    சென்னையில் மேலும் 1205 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2,475 ஆக உள்ளது.

    18:57 (IST)10 Jul 2020

    3,680 பேர் கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.

    18:42 (IST)10 Jul 2020

    50 சதவீத பணியாளர்கள் - தமிழக அரசு அனுமதி

    சென்னையில் நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவை சார்ந்த சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க வரும் 13ம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    18:18 (IST)10 Jul 2020

    ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றம். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.ஆக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    17:37 (IST)10 Jul 2020

    நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை

    சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும். அவரின் பிறந்த நாளான ஜூலை 11 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    17:23 (IST)10 Jul 2020

    17ம் தேதி விசாரணை

    தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    16:48 (IST)10 Jul 2020

    14வது நாளில் பிளாஸ்மா தானம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம்"

    சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது"

    தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து #Plasma தானம் செய்ய முதலமைச்சர் வேண்டுகோள்

    16:47 (IST)10 Jul 2020

    தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை

    தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் நடவடிக்கை

    18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்

    16:47 (IST)10 Jul 2020

    எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி

    கல்வி, சராசரி குடும்பத்தின் கனவு, எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி

    அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்

    தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

    16:46 (IST)10 Jul 2020

    சிபிசிஐடி அலுவலகம் வருகை

    சாத்தான்குளம் சம்பவம் - சிபிஐ விசாரணை குழு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வருகை

    வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

    சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைக்கிறார்

    15:57 (IST)10 Jul 2020

    மதிப்பூதியம் ரத்து

    சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து

    கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

    ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு

    15:23 (IST)10 Jul 2020

    தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

    கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் தனிமைப்படுத்திக்  கொண்டார் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா.

    15:16 (IST)10 Jul 2020

    103 பேருக்கு கொரோனா

    'திருவண்ணாமலையில் மேலும் 103 பேருக்கு கொரோனா'

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,860 ஆக அதிகரிப்பு

    15:03 (IST)10 Jul 2020

    ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை

    புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது

    முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம்,சுபநிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால் முழுஊரடங்கு இருக்காது

    -முதல்வர் நாராயணசாமி

    15:02 (IST)10 Jul 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்த கட்டம் என்ன? - முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை

    கொரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதார குழு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் சென்னை வந்தது. சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 7 பேர் குழுவில் உள்ளனர். நேற்று சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், டி.எம்.எஸ் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    பின்னர், தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தொற்று அதிகம் உள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இன்று காலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    15:01 (IST)10 Jul 2020

    சுரங்கப்பாதை பணி நடப்பதால் மாற்றம்

    வால்டாக்ஸ் சாலை வழியாக வருபவர்கள் ஈவிஆர் சாலை, முத்துசாமி பாலம் வழியாக அண்ணாசாலை செல்லலாம்

    முத்துசாமி சாலை வழியாக வருபவர்கள் வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணாசாலை செல்லலாம்

    * சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன் மெட்ரோ நிறுவனம் சார்பில் சுரங்கப்பாதை பணி நடப்பதால் மாற்றம் - போலீஸ்

    14:49 (IST)10 Jul 2020

    15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

    ‘சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்’

    சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

    * ஈவினிங் பஜார் சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது

    14:48 (IST)10 Jul 2020

    ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

    வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 7 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு e-box என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    14:48 (IST)10 Jul 2020

    தனியார் கல்வி கட்டண வசூல் தொடர்பான வழக்கு - வரும் 17 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

    தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளி, கல்லூரிகள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    14:22 (IST)10 Jul 2020

    விசாரணை ஒத்திவைப்பு

    தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவரும் ஸ்வப்னாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    தங்கக்கடத்தலில் ஸ்வப்னாவுக்கு பங்கு இருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பு வழக்கறிஞர் வாதம்

    14:02 (IST)10 Jul 2020

    சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை

    சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்

    * ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை இன்று தொடங்குகிறது

    * விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர்

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்

    * மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி செல்ல உள்ளனர்

    * வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றவுடன் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்க உள்ளனர்

    14:01 (IST)10 Jul 2020

    ஸ்டாலின் நலம் விசாரிப்பு

    கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!

    எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

    - மு.க.ஸ்டாலின்

    13:58 (IST)10 Jul 2020

    129 நபர்களுக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 129 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    * மொத்த பாதிப்பு - 1,724, வீடு திரும்பியோர் - 644

    * சிகிச்சை பெறுவோர் - 1080, உயிரிழப்பு -12

    13:50 (IST)10 Jul 2020

    தணிகாச்சலத்துக்கு ஜாமீன்

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறியதால் கைது செய்யப்பட்ட தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். 

    13:38 (IST)10 Jul 2020

    புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

    13:36 (IST)10 Jul 2020

    நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால் விற்பனை நிலையம், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அமைச்சர் வேலுமணி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

    13:24 (IST)10 Jul 2020

    தலைமை செயலகம் மூடல்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. 

    13:24 (IST)10 Jul 2020

    தலைமை செயலகம் மூடல்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. 

    13:23 (IST)10 Jul 2020

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    12:04 (IST)10 Jul 2020

    புதிய மருத்து கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

    நீலகிரி மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.447.32 கோடி மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி அமைகிறது. 

    10:51 (IST)10 Jul 2020

    முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை

    கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக்குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசின் கூடுதல் செயலர் ஆர்த்தி, தமிழகத்திற்கான கொரோனா கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    10:30 (IST)10 Jul 2020

    சென்னையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்

    சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; அந்த வகையில் இன்று காலையில் மட்டும் இதுவரை 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர்

    10:11 (IST)10 Jul 2020

    வெளியான ஸ்வப்னாவின் ஆடியோ

    கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது

    09:55 (IST)10 Jul 2020

    தங்கக் கடத்தல் வழக்கு - என்.ஐ.ஏ விசாரிக்க ஒப்புதல்

    தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது இவருக்கு பதிலாக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாட்டின் தேச பாதுகாப்புக்கு உறுவிளைவிக்கும் வகையில் நடந்துள்ள தங்க கடத்தல் வழக்கை தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க கோரி முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    09:38 (IST)10 Jul 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு. தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,93,802. இதில் குணமடைந்தோர் - 4,95.513, சிகிச்சை பெறுவோர் - 2,76,685, உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. 

    09:25 (IST)10 Jul 2020

    விகாஸ் துபே என்கவுண்டர்

    உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய முயன்ற போது டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தப்பியோடிய விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் நேற்று பிடிபட்டார். தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணமடைந்ததாக உ.பி காவல்துறை அறிவிப்பு. விகாஸ் துபேவை அழைத்து வரும் போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். 

    09:14 (IST)10 Jul 2020

    என்கவுன்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை!

    உத்தரப்பிரதேசத்தில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் கொல்லப்பட்டதை உறுதி செய்தது உ.பி. போலீஸ்

    Tamil nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடன் பேசிய தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், சித்த மருத்துவம் ஒரு கூடுதல் சிகிச்சை என்பதோடு பல தடுப்பு முறைகளில் ஒன்று என்று கூறினார். மேலும், ராதாகிருஷ்ணன் கூறுகையில், “முழு அளவில் கொரோனா தொற்றுநோய் வெளிப்படாதவர்கள் சித்த மருத்துவ சிகிச்சையை அனுபவபூர்வமாகத் தேர்வு செய்கிறார்கள். சென்னையில் உள்ள சித்த மருத்துவ மையங்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுபவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் சித்த மருத்துவ மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
    Coronavirus Uttar Pradesh Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment