Advertisment

Tamil News Highlights: கருணாநிதியின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாட்டம்!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price today – 02 June 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
M Karunaithi

Karunanithi Birthday Rare and unseen photos his political journey

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை!

தமிழகத்தில் நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதன்படி 12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10ம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை!

பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முன்னேற்பாடு மற்றும் சிறப்பு வகுப்புகள் குறித்து, ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை நடத்துகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி!

தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கிறது. இதற்காக, ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil News Latest Updates

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கு முடக்கம்!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின், ரூ. 68.62 லட்சம் மதிப்பிலான, 33 வங்கி கணக்குகளை, அமலாக்கத்துறை முடக்கியது.

வணிகவரித்துறை எச்சரிக்கை

கடந்த நிதியாண்டில் 3.26 இலட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை. வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகை உடன் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என வணிகர்களுக்கு வணிகவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், 3வது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.

ஜி.எஸ்.டி வசூல்!

ஜி.எஸ்.டி கடந்த ஆண்டை விட மே மாதத்தில் 44% அதிகரித்து ரூ. 1.40 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஜி.எஸ்.டி வசூல் ரூ. 1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:36 (IST) 02 Jun 2022
    கருணாநிதி பாதையில் மு.க.ஸ்டாலின் - இளையராஜா

    தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார் . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன் என கோவை இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்


  • 22:34 (IST) 02 Jun 2022
    என் தந்தைக்கு சமமானவர் கருணாநிதி - இளையராஜா

    முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர் என கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா கூறியுள்ளார்


  • 21:32 (IST) 02 Jun 2022
    யுபிஎஸ்சி தேர்வு; ஜூன் 4, 5ல் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே

    சென்னையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காரணமாக ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும். தேர்வர்கள் பயனடையும் வகையில் புறநகர் ரயில்களை இயக்க முடிவு என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது


  • 20:17 (IST) 02 Jun 2022
    வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டிடம்; பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணித்தார் ஸ்டாலின்

    சென்னை மாநகராட்சியில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணித்தார். 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரிப்பன் கட்டடத்தில் நிறம் மாறும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது


  • 19:08 (IST) 02 Jun 2022
    சென்னை: பிரியாணி உணவகத்தில் கெட்டுப்போன 15 கிலோ சிக்கன் பிரியாணி பறிமுதல்

    சென்னை, வடபழனியில் உள்ள தனியார் பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கெட்டுப்போன 15 கிலோ சிக்கன் பிரியாணி மற்றும் கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


  • 18:38 (IST) 02 Jun 2022
    திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

    திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில், விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை நடத்த திட்டமிட்டிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றி வைக்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது


  • 18:06 (IST) 02 Jun 2022
    21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்


  • 17:35 (IST) 02 Jun 2022
    சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

    கொரோனா தொற்று பாதித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்


  • 17:16 (IST) 02 Jun 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

    தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உள்ளனர். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  • 17:10 (IST) 02 Jun 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

    தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உள்ளனர். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  • 17:07 (IST) 02 Jun 2022
    இளையராஜா பிறந்த நாள்; மோடி தொலைபேசியில் வாழ்த்து!

    இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  • 16:48 (IST) 02 Jun 2022
    கோவை பெண் தீக்குளித்து தற்கொலை; 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

    கோவையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்ந்தார். அவர் வேலை செய்துவந்த கடை உரிமையாளர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவான நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாவுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


  • 16:46 (IST) 02 Jun 2022
    யூடியூபர் கார்த்திக்கை காவலில் எடுக்க மறுப்பு!

    கோயில் புனரமைப்புக்கு பல லட்சம் வசூல் செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட வழக்கில், கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் கோபிநாத் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


  • 16:31 (IST) 02 Jun 2022
    படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும்.

    மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். புதிய தொழில்கள் தொடங்குவதில் உள்ள சிக்கலை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கூறியுள்ளார்.


  • 16:29 (IST) 02 Jun 2022
    போலி ஆவணங்கள் மூலம் கருமுட்டை தானம் - 3 பேர் கைது!

    ஈரோட்டில் போலி ஆவணங்கள் மூலம் 13 வயது சிறுமியை சட்டவிரோதமாக கருமுட்டை தானத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சிறுமியின் தாய், கள்ளக்காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 16:23 (IST) 02 Jun 2022
    சோனியா காந்தி 8ம் தேதி ஆஜராவார் - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட்!

    நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியை இன்று நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சோனியா காந்தி 8ம் தேதி ஆஜராவார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்துள்ளார்.

    சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • 16:01 (IST) 02 Jun 2022
    பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல்!

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ள அம்மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.


  • 15:56 (IST) 02 Jun 2022
    சோனியா காந்தி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - மு.க.ஸ்டாலின்!

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் இன்னும் நிறைவடையாததால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


  • 15:55 (IST) 02 Jun 2022
    20 நாட்களில் 18 கொலைகள் - சீமான் பேட்டி!

    திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன; சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை எப்படி ஏற்பது?" என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.


  • 15:53 (IST) 02 Jun 2022
    பாடகர் கே.கே. மரணம் - ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல்!

    "பாடகர் கே.கே.யின் அகால மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அனைத்து மொழிகளிலும் தனது வசீகரமான குரலின் மூலம் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் கே.கே. தனது பாடல்களின் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார் பாடகர் கே.கே." என்று பாடகர் கே.கே. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 15:23 (IST) 02 Jun 2022
    பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்!

    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

    தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 13:56 (IST) 02 Jun 2022
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.


  • 13:26 (IST) 02 Jun 2022
    என் அன்புக்குரிய தங்கை தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்

    தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி. தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


  • 13:25 (IST) 02 Jun 2022
    என் அன்புக்குரிய தங்கை தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்

    தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி. தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


  • 13:24 (IST) 02 Jun 2022
    தனியார் நட்சத்திர உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நட்சத்திர உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு செய்து வருகிறார்.


  • 13:23 (IST) 02 Jun 2022
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


  • 13:21 (IST) 02 Jun 2022
    மறைந்த பின்னணி பாடகர் கே.கே.வின் இறுதி ஊர்வலம் தொடக்கம்

    மறைந்த பின்னணி பாடகர் கே.கே.வின் மும்பையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. வெர்சோவா பகுதியில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.


  • 12:40 (IST) 02 Jun 2022
    சோனியா காந்திக்கு கொரோனா தொற்று

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தகவல்


  • 12:31 (IST) 02 Jun 2022
    கச்சத்தீவை மீட்க சரியான தருணம் - தேமுதிக

    இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு எடுக்க மத்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க எடுக்க சரியான தருணம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


  • 12:20 (IST) 02 Jun 2022
    அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

    வீரம், மனஉறுதி, துணிச்சல் என பெண்குலத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் அஞ்சலையம்மாள். அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 12:10 (IST) 02 Jun 2022
    ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

    அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை. தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது


  • 12:03 (IST) 02 Jun 2022
    ரஜினிகாந்த் - தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

    நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு. நடிகர்கள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் சந்திப்பு. தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்திருந்த நிலையில் சந்திப்பு


  • 11:50 (IST) 02 Jun 2022
    விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

    விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ10 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குநரகம். விமானத்தை டேக் ஆப் செய்வது, தரை இறுக்குவதற்கான அனுமதி விதிகளை மீறியதற்காக அபராதம் விதிப்பு.


  • 11:31 (IST) 02 Jun 2022
    இந்தியாவில் மேலும் 3,712 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 2,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிந்துள்ளனர். தற்போது, தொற்று பாதிப்பு 19 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 11:27 (IST) 02 Jun 2022
    வைகை அணையில் தண்ணீர் திறப்பு

    மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறப்பு


  • 11:21 (IST) 02 Jun 2022
    சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்

    சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி . நுழைவுக் கட்டணம் மாணவர்கள், சிறியவர்களுக்கு ரூ20 பெரியவர்களுக்கு ரூ50 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


  • 10:59 (IST) 02 Jun 2022
    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

    அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து, துறை செயலாளர்களுடன் 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.


  • 10:58 (IST) 02 Jun 2022
    10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. முக்கிய உத்தரவு!

    10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


  • 10:25 (IST) 02 Jun 2022
    மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை வாரியம்!

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.


  • 09:52 (IST) 02 Jun 2022
    புதுச்சேரி கோடை விழா!

    புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் கோடை விழாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.


  • 09:14 (IST) 02 Jun 2022
    தக்காளி விலை குறைந்தது!

    சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 40க்கு விற்பனையாகிறது.


  • 08:26 (IST) 02 Jun 2022
    பாடகர் கே.கே உடலுக்கு அஞ்சலி!

    மறைந்த பின்னணி பாடகர் கே.கே-வின் உடல், மும்பையில் உள்ள வெர்சோவா பிளாசாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி அளவில் வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment