பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 109-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்ச்சங்க மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
தமிழ்ச்சங்க மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சான் அன்டோனியோ நகர மேயர் ரான் நிரன்பெர்க் உடன் சந்திப்பு.
-
Jul 06, 2024 05:36 ISTபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங படுகொலை; 8 பேர் கைது - ஆணையர் அஸ்ரா கர்க் தகவல்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று செம்பியம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த கொலை வழக்கைப் பொறுத்தவரைக்கும் முதல் கட்ட விசாரணையில் 8 பேரை கைது செய்துள்ளோம். அந்த 8 பேரிடம் விசாரித்துக்க்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் டைம் ஆன பிறகு, கொலைக்கான நோக்கம் என்ன, என்ன காரணம், யார் யார் ஈடுபட்டிருக்கிறார்கள், என்பது தெரியவரும். கொலை நடந்த 4 மணி நேரத்தில் 8 பேர்களைக் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 06, 2024 00:55 ISTதமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மாயாவதி கண்டனம்
தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The gruesome killing of Mr. K. Armstrong, Tamil Nadu state Bahujan Samaj Party (BSP) president, outside his Chennai house is highly deplorable and condemnable. An advocate by profession, he was known as a strong Dalit voice in the state. The state Govt. must punish the guilty.
— Mayawati (@Mayawati) July 5, 2024பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்ப்பதாவது: “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது, கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.” என்று வலிறுத்தியுள்ளார்.
-
Jul 06, 2024 00:25 ISTபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை: செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் தருகிறது. இந்த வன்முறை சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: “தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த மனப்பான்மையோடு பாடுபட்டவர்.
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 05, 2024 23:31 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்தது காவல்துறை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை 5 தனிப்படை அமைத்துள்ளது.
-
Jul 05, 2024 23:30 ISTஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த 2 பேர் மீதும் தாக்குதல்
ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரமணிக்கு வலது காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களும் போடப்பட்டுள்ளது. பாலாஜி என்பவருக்கு காலில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
-
Jul 05, 2024 23:14 ISTபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை; எல். முருகன் கண்டனம்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jul 05, 2024 22:48 ISTபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அண்ணாமலை கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; தி.மு.க-வின் 3 ஆண்டு கால ஆட்சியில் சமூக வன்முறைகள் வழக்கமாகிவிட்டன என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jul 05, 2024 22:37 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை: கொலையாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் பெரம்பூரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 05, 2024 22:34 ISTபகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - அன்புமணி ராமதாஸ்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல்: தமிழகத்தில் சட்டம்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 5, 2024
ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும்… pic.twitter.com/oxSfDdm6WPவழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.
மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.
கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 05, 2024 22:11 ISTபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை; கதறி அழுத இயக்குனர் பா. ரஞ்சித்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அப்போலோ மருத்துவமனைக்கு வந்த இயக்குனர் பா. ரஞ்சித் கதறி அழுதார்.
-
Jul 05, 2024 21:40 ISTபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - இ.பி.எஸ் கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. @BSPArmstrong அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 5, 2024
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத்…அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா தி.மு.க முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.” என்று தெவித்துள்ளார்.
-
Jul 05, 2024 21:34 ISTசென்னையில் பா.ஜ.க மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகமாமன் கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் போலீசார் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைபேசியில் பேசிய மர்ம கூறியிவிட்டு போனை கட் செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கமலாலயத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது.
-
Jul 05, 2024 21:17 ISTபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை; ஹெச். ராஜா கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. அரசியல் கோழைகளின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. அரசியல் கோழைகளின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. pic.twitter.com/VvZRlBFWez
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) July 5, 2024 -
Jul 05, 2024 21:14 ISTபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது - திருமுருகன் காந்தி
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
அன்பிற்கும், மரியாதைக்குரிய தோழர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆழமான அம்பேத்கரிய பார்வையும், தோழமை உணர்வும் கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்ட களத்தில் நின்றவர், செயற்பாட்டாளர். 2019ல் சென்னையில்… pic.twitter.com/h05Y54ndEv
— thirumurugan gandhi (@thiruja2009) July 5, 2024திருமுருகன் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அன்பிற்கும், மரியாதைக்குரிய தோழர், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் மரணம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆழமான அம்பேத்கரிய பார்வையும், தோழமை உணர்வும் கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்ட களத்தில் நின்றவர், செயற்பாட்டாளர். 2019ல் சென்னையில் நவ27ம் தேதி நடந்த அண்ணலின் அரசியல்சாசன நாளில் ஒன்றாக உரையாற்றினோம். மிக ஆழமான வரலாற்று பார்வையில் அண்ணலின் அரசியல் சாசன போராட்டத்தை விளக்கிப்பேசிய அவரது உரை இன்றும் நினைவில் உள்ளது. அரக்கோணம் சோகனூரில் இருவர் 2021ல் படுகொலை செய்யப்பட்டதற்கான போராட்ட நிகழ்வில் சந்தித்தோம். இந்நிகழ்வில் அவர் பதிவு செய்த வழிகாட்டல் உரை நிதானமும், பொறுப்புணர்வும் கொண்டது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறேன். தோழருக்கு எனது வீரவணக்கத்தை பதிவு செய்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 05, 2024 21:04 ISTஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி; கொலையாளிகளை உடனே கண்டறிய வேண்டும் - வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன், கொலையாளைகளையும் கொலைக்கான பின்னணியையும் உடனே காவல்துறை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின்
— Sinthanai Selvan (@sinthanaivck) July 5, 2024
தமிழ் மாநிலத்தலைவரும்
ஆகச்சிறந்த பவுத்த சிந்தனையாளருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தமிழக காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கொலையாளிகளையும்… pic.twitter.com/1WJSUQWiNkவி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவரும் ஆகச்சிறந்த பவுத்த சிந்தனையாளருமான தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தமிழக காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கொலையாளிகளையும் கொலையின் பின்ணணியையும் உடனே கண்டறிய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 05, 2024 20:23 ISTசென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
-
Jul 05, 2024 20:20 ISTபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவால் வெட்டு; போலீஸ் வலைவீச்சு
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை பெரம்பூர் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
Jul 05, 2024 19:56 ISTபிரிட்டன் தமிழ் எம்.பி-க்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் எம்.பி., ஆக பதவியேற்கும் உமா குமரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்திற்கு மேலும் பெருமையை சேர்க்க முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Jul 05, 2024 19:54 ISTஸ்டாலின் திட்டங்களை தேர்தலில் அறிவித்து இங்கிலாந்து தொழிலாளர் கட்சி வெற்றி - தமிழக அரசு பெருமிதம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முத்திரைத் திட்டங்களான, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லத் திட்டம் ஆகிய மூன்றையும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி (Labour Party) தேர்தல் அறிக்கையில் திட்டங்களாக அறிவித்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
Jul 05, 2024 18:34 ISTநீட் தேர்வு விவகாரம் குறித்து தேசிய தேர்வு முகமை பதில் மனு
பீகாரின் பட்னா, குஜராத்தின் கோத்ரா ஆகிய மாநகரங்களில் மட்டுமே நீட் தேர்வு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன என கூறியுள்ள தேசிய தேர்வு முகமை வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், மத்திய அரசை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
Jul 05, 2024 17:28 ISTநீட் முறைகேடு - மத்திய அரசு பதில் மனு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது, நீட் தேர்வு போன்றவற்றை சிறப்பாக நடத்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Jul 05, 2024 17:27 ISTகாவிரியில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு
காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3,463 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
-
Jul 05, 2024 17:25 ISTசெப். முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 250 கோடி வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.
-
Jul 05, 2024 17:21 ISTநாடாளுமன்ற தேர்தல் தோல்வி : தொகுதி வாரியாக ஆய்வு செய்ய ஈபிஎஸ் முடிவு
அதிரடி நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டம்
-
Jul 05, 2024 16:11 ISTரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு – இ.பி.எஸ்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
Jul 05, 2024 15:50 ISTபதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்
பிரிட்டன் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்
-
Jul 05, 2024 15:36 ISTசொத்து குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மனு தள்ளுபடி
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மறைந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரங்கநாயகம் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தன பாண்டியன், முருகன் அதியமான் விடுதலையை எதிர்த்த லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jul 05, 2024 15:16 ISTஇந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்
இந்தியாவின் முதல் CNG பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.95,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
-
Jul 05, 2024 14:47 ISTமுதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் – மருத்துவ கல்வி வாரியம் அறிவிப்பு
முதுநிலை நீட் தேர்வு 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 05, 2024 14:25 IST3, 4 தலைவர்களின் சுய லாபத்தால் அ.தி.மு.க அழிந்து கொண்டிருக்கிறது - அண்ணாமலை
அ.தி.மு.க என்ற கட்சி 3, 4 தலைவர்களின் சுய லாபத்தால் அழிந்து கொண்டிருக்கிறது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Jul 05, 2024 14:04 ISTரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
திருச்சி சிறுகனூர் வனப்பகுதியில், ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கொலை வழக்கு தொடர்பாக பிடிக்க முயன்ற போது தாக்க வந்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
காலில் குண்டு பாய்ந்த நிலையில் ராஜா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
-
Jul 05, 2024 13:30 ISTநம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை
நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பொருந்தும். அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஈ.பி.எஸ். கேட்டுக் கொண்டார். அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை ஈ.பி.எஸ்.க்கு இல்லை
அண்ணாமலை
-
Jul 05, 2024 13:25 ISTஅடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தேனி
நீலகிரி
கோவை
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 05, 2024 13:24 ISTஅதிக மழைப்பொழிவு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 98% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக 58.6 மி.மீ மழை பதிவாகும் நிலையில், தற்போது 116 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
-
Jul 05, 2024 12:46 ISTAI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவம்- பிரேமலதா அறிக்கை
திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை. அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
-
Jul 05, 2024 12:46 ISTவெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுப்பு
விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
-
Jul 05, 2024 12:16 ISTசசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்
அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்வதாக சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும். ஜெயலலிதா இனி அதிமுகவை ஏற்று நடத்துவார் என்று ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப் போல, நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலா செயல்பட்டால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
-
Jul 05, 2024 12:12 ISTஓ.பி.எஸ்.-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே கிடையாது- இபிஎஸ்
ஓ.பி.எஸ்.-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே கிடையாது. அதிமுக பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டவர் தான் ஓ.பி.எஸ்.
அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்வதாக சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி
-
Jul 05, 2024 12:10 ISTபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
-
Jul 05, 2024 12:09 ISTகனிமொழி பேட்டி
பல ஆண்டு காலமாக நீட் தேர்வு ரத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் நாடு முழுவதும் இப்போது எழுந்துள்ளது. நீட் தேர்வில் உள்ள பிரச்னைகள் குறித்து மற்ற மாநில மக்கள், அரசுகள் எதிர்க்க ஆரம்பித்து உள்ளனர். நாடாளுமன்றத்தில் நீட், மணிப்பூர் பிரச்னைகள் குறித்த விவாதங்களை நடத்தி இருக்க முடியும், ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை.
- சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் கனிமொழி பேட்டி
-
Jul 05, 2024 11:24 ISTஅ.தி.மு.க குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு கண்டிக்கத்தக்கது: இ.பி.எஸ்
அதிமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு கண்டிக்கத்தக்கது; அண்ணாமலை தலைவரான பிறகு தான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்; கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் இப்போதைய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அண்ணாமலை குறைவான வாக்குகளை பெற்றார்; தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா ?” - கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
-
Jul 05, 2024 11:23 ISTதமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், மக்களவை தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிக்கின்றனர்: இ.பி.எஸ்
“இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது; மக்களவை தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது; தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், மக்களவை தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிக்கின்றனர்” - கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
-
Jul 05, 2024 10:54 ISTபிரிட்டன் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் படுதோல்வி
பிரிட்டன் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் படுதோல்வி தோல்விக்கு தாமே பொறுப்பேற்பதாகவும் ரிஷி சுனக் பேட்டி இன்றிலிருந்து மாற்றம் துவங்குகிறது - வெற்றிக்கு பிறகு தொழிலாளர் கட்சி சார்பில் பிரதமராக முன்னிறுத்தப்பட்ட கீர் ஸ்டார்மர் பேட்டி.
-
Jul 05, 2024 10:30 ISTதயக்கமின்றி உரையாடுங்கள்; மற்ற மாணவர்களுடன் உரையாடும் போது தான் முழுமை பெறுகிறது: இறையன்பு
“இப்போது உள்ள மாணவர்கள் சக மாணவர்களுடன் பேசவதற்கு நிறைய கூச்சப்படுகிறார்கள், தயக்கமின்றி உரையாடுங்கள்; மற்ற மாணவர்களுடன் உரையாடும் போது தான் முழுமை பெறுகிறது” - சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு
-
Jul 05, 2024 10:11 ISTகல்லூரிகளில் சேர்ந்த பிறகு மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இறையன்பு பேச்சு
“கல்லூரிகளில் சேர்ந்த பிறகு மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அதன் மூலம் சுயமாக எழுத கற்றுக் கொள்ள வேண்டும்” - சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு
-
Jul 05, 2024 09:19 ISTகரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு வேலாயுதம்பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை
-
Jul 05, 2024 09:18 ISTபா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் சிறையில் உள்ளார், அலெக்சிஸ் சுதாகர் அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது
-
Jul 05, 2024 08:17 ISTகுழித்துறை அரசு போக்குவரத்து பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
குழித்துறை அரசு போக்குவரத்து பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- பேருந்து சிறைபிடிப்பு குமரி மாவட்டம் குழித்துறை பணிமனையில் பணிபுரிந்த 2 பணியாளர்களை காரணம் கூறாமல் பணியிடை மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு போக்குவரத்து பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு பணிமனையில் இருந்து பேருந்தை இயக்க முயன்ற ஓட்டுநருடன் வாக்குவாதம்- பேருந்தை சிறைபிடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
-
Jul 05, 2024 08:16 ISTஉத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வருகை
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வருகை கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் ஹத்ராஸில் கடந்த 2ம் தேதி கூட்டநெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
-
Jul 05, 2024 08:14 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.