Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு
நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 15, 2024 07:05 ISTதென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை
தென்காசி, குற்றாலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை தொடர்கிறது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
-
Jul 14, 2024 20:44 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; செல்வ பெருந்தகை பேட்டி
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையின் புலன் விசாரணை முடிந்த பிறகு கருத்து சொல்கிறேன்.. இப்போது விசாரணையில் தலையிட விரும்பவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
-
Jul 14, 2024 18:43 ISTசித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்; காவிரியில் 8,000 கனஅடி நீர் திறக்க முடிவு
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jul 14, 2024 18:10 ISTகாவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை - அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணமலை: “காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை; காவிரி நீரை பகிர்வது தொடர்பாக ஏற்கெனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2024 18:08 ISTஜூலை 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூலை 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. ஜூலை 15-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Jul 14, 2024 17:19 ISTகாவிரி விவகாரம்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. தமிழகத்திற்கு ஜூலை இறுதி வரை தினசரி 1 டி.எம்.சி நீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில், சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து வருகிறது.
-
Jul 14, 2024 17:16 ISTபழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கை - தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
“243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வலியுறத்தி வருகிற 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று திருச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் (டிட்டோஜாக்) மயில் தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2024 16:58 ISTடாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது
-
Jul 14, 2024 16:33 ISTகேரளாவில் சட்டவிரோதமாக மலையேற்றம் சென்று சிக்கிய 40 பேர் பாதுகாப்பாக மீட்பு
கேரளாவில் சட்டவிரோதமாக மலையேற்றம் சென்று சிக்கிய 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நாலுமலைக்கு சட்டவிரோதமாக மலையேற்றம் சென்ற நிலையில், திடீரென வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். தற்போது 27 வாகனங்களுடன் மலை உச்சியில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மலையேற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
-
Jul 14, 2024 16:08 ISTரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்; காவல்துறை விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
-
Jul 14, 2024 15:40 ISTநல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி என தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
-
Jul 14, 2024 15:23 ISTதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jul 14, 2024 15:10 ISTமுதல்வர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி கடிதம்
ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என நீட் தேர்வு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்
-
Jul 14, 2024 14:05 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான உண்மையை மறைக்க தி.மு.க முயற்சி: அண்ணாமலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான உண்மையை மறைக்க தி.மு.க முயற்சி. சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு திருவேங்கடம் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை.
-
Jul 14, 2024 13:48 ISTடிரம்ப் மீதான கொலை முயற்சி: மிகுந்த கவலை அடைந்தேன்: ராகுல் காந்தி ட்வீட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி. மிகுந்த கவலை அடைந்தேன். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை
-
Jul 14, 2024 13:29 ISTஆம்ஸ்ட்ராங் கொலை - புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
உணவு டெலிவரி நிறுவன உடை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கும்பல் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு ஆம்ஸ்ட்ராங் கொலை - புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
-
Jul 14, 2024 13:09 ISTஆம்ஸ்ட்ராங் கொலை: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
உணவு டெலிவரி நிறுவன உடை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கும்பல்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு
ஆம்ஸ்ட்ராங் கொலை - புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
-
Jul 14, 2024 12:52 ISTதிருவேங்கடம் என்கவுண்டர் தி.மு.க அரசின் நாடகம்: சீமான்
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு
விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - சீமான்
முக்கிய அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?
உண்மையை மூடி மறைக்க போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும்- சீமான்
-
Jul 14, 2024 12:08 ISTட்ரம்ப்-ஐ சுட்டவர் 20 வயதாகும் இளைஞர்
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்-ஐ கொல்ல முயற்சித்தவரின் விபரங்களை வெளியிட்ட FBI
சம்பவ இடத்திலேயே துப்பாக்கிசூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்
ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியது 20 வயதாகும் தாமஸ் க்ரூக்ஸ் என்ற இளைஞர் என எப்.பி.ஐ அதிகாரிகள் தகவல். சம்பவம் நடநத இடத்தில் இருந்து 70.கி.மீ தொலைவில் அந்த இளைஞரின் வசிப்பிடம் இருப்பதாகவும் தகவல்
-
Jul 14, 2024 12:03 ISTதிருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனை
புழல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம்.
திருவேங்கடத்தின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ் குவிப்பு.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது
-
Jul 14, 2024 11:51 ISTட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: பைடன் நாளை ஆலோசனை
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் தெரிந்தது
ட்ரம்ப்பிற்கு எதிராக படுகொலை முயற்சி நடந்ததை உறுதிப்படுத்திய எஃப்.பி.ஐ
படுகொலை முயற்சிக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள்
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் 120 முதல் 150 மீட்டர் தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுட்டதாக தகவல்
வெள்ளை மாளிகையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் நாளை ஆலோசனை
-
Jul 14, 2024 11:29 ISTயாரைக் காப்பாற்ற திருவேங்கடம் என்கவுன்டர்?: இ.பி.எஸ்
"யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்?" எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர் - இ.பி.எஸ்
-
Jul 14, 2024 11:25 ISTதிருவேங்கடம் என்கவுன்டரில் சந்தேகம்: இ.பி.எஸ்
சரண் அடைந்தவரை என்கவுன்டர் செய்துள்ளனர். அவசர அவசரமாக அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன்?. கை விலங்கு இல்லாமல் எப்படி அழைத்துச் சென்றனர். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த திருவேங்கடம் மீது என்கவுன்டர் நடத்தி இருப்பதில் சந்தேகம் உள்ளது. சரண் அடைந்தவரை அதிகாலையில் அவசரமாக அழைத்துச் சென்றது ஏன்? - எடப்பாடி பழனிசாமி
-
Jul 14, 2024 10:46 ISTரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு
சென்னை புழல் அருகே ரவுடி திருவேங்கடம் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில், சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்.
-
Jul 14, 2024 10:33 ISTஆடி மாத பூஜைக்காக வரும் 15ம் தேதி சபரிமலை கோயில் நடைதிறப்பு
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது;
ஜூலை 20ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி -
Jul 14, 2024 10:11 ISTடொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது. இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்
- ராகுல் காந்தி எம்.பி
-
Jul 14, 2024 10:11 IST12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 14, 2024 09:48 ISTகாவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
வரும் நாட்களில் இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்
-
Jul 14, 2024 09:37 ISTரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
-
Jul 14, 2024 09:00 ISTடிரம்ப் மீது துப்பாக்கி சூடு: மோடி கண்டனம்
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கவலை தருகிறது. அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. டிரம்ப் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
பிரதமர் மோடி கண்டனம்
-
Jul 14, 2024 08:26 ISTஎன்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி A-3 குற்றவாளி
என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A-3 குற்றவாளி
இடது மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் 2 ரவுண்ட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.
-
Jul 14, 2024 07:50 ISTதேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தேனி, திண்டுக்கல் ஆகிய 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 14, 2024 07:47 ISTசென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது; தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொலை
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை
-
Jul 14, 2024 07:37 ISTஅமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
-
Jul 14, 2024 07:29 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று, தனது டெபாசிட்டை தக்க வைத்தார். 3 -வது இடம் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர்.
-
Jul 14, 2024 07:29 ISTமதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்தது
கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்தது
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
Jul 14, 2024 07:28 ISTவெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா, கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 5000 கன அடியாக தொடர்கிறது. காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
Jul 14, 2024 07:28 ISTதொடரைக் கைப்பற்றியது இந்தியா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
-
Jul 14, 2024 07:28 ISTINDIA கூட்டணி 10 இடங்களில் வெற்றி
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் INDIA கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக 2 தொகுதிகளிலும், பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.