Tamil News Today Live Updates: தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூச்சியை இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்க, விருப்பம் என ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுப்பிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டி திரையுலகினரும், ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
இந்தியாவில் 12 நாட்களில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாத தொற்று விகிதத்தில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 2-வது தலைநகர் குறித்த சர்ச்சைக்கு அரசு காரணமில்லை எனவும், அது அமைச்சர்களின் கருத்து எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான அரசின் தடைக்கு, தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் http://coe.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
- முதல்வர் பழனிசாமி
கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். pic.twitter.com/m2A1E5FOMi
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 21, 2020
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு
2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் நடைபெற உள்ள பாெதுத்தேர்தல் உள்ளிட்டவைகளுக்காக தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் * 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள்தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி * வாக்கு சேகரிப்பு, பிரசாரத்தின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களை இ-பாஸ் இருந்தால்தானே கண்டறிய முடியும். இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கெல்லாம் உள்ளது என்பதை கண்டறிய முடிகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பற்கு இ-பாஸ் முறை தான் உதவி புரிந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்ட ஒழுங்கை காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ரவுடித்தனம் செய்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.நாமக்கல், கரூர் மாவட்டங்கள் இடையே 46 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நாமக்கல்லில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதல்வர் பழனிசாமி, யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த "விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!"
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் திருவருளால் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி நலமோடு வாழ வாழ்த்துகிறேன். pic.twitter.com/l5aUKwkXV6
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 21, 2020
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை போலீசார் என்கவுன்ட்டர் செய்த நிலையில், ரவுடி திருவேங்கடம் கைது. திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர்
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்து தங்கம் கடத்தி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... pic.twitter.com/Pt9e43IkjW
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 21, 2020
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று,உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும்,மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.அதற்கு முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன். pic.twitter.com/QCTVg8bBX0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2020
விநாயகர் சதுர்த்திக்கு களி மண்னாலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து மக்கள் வழிபட்டு மகிழ்வார்கள். விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights