பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 174-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 08, 2024 00:14 ISTநிவாரண நிதி கேட்டு, மத்திய அரசுக்கு ஆந்திரைா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்
ஆந்திராவில் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து நிலைமையை சீரமைக்கும வகையில், ரூ6882 கோடி பணம் கேட்டு மத்திய அரசுக்கு ஆந்திரா முதல்வர் சந்தரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
Sep 07, 2024 22:16 ISTகைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி மீது வழக்குப்பதிவு
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Sep 07, 2024 22:14 ISTஜெயிலர் பட வில்லன் நடிகர் கைது
பாதுகாப்பு பணியில் இருந்து சி.ஐ.எஃப் வீரரை மது போதையில் தாக்கியதாக கூறி ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Sep 07, 2024 20:31 IST29 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தடகள போட்டி: உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. 1995க்கு பின், 29 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சர்வதேச தடகள போட்டி நடக்கவுள்ளது. இதனை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
-
Sep 07, 2024 18:58 ISTபட்டப்பகலில் வீடு புகுந்து கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளுடன் ஒரு குடும்பத்தையே விரட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காண்போரை பதறவைக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட கலைச்செல்வன் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Sep 07, 2024 18:56 ISTபண பிரச்சனையால் இளைஞர் மீது கொடூர தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை, 3 பேர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் படுகாயம் அடைந்த இளைஞர் ஆரோக்கியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Sep 07, 2024 18:54 ISTத.வெ.க மாநாடு: நாளை காலை விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தகவல்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறித்து நாளை காலை 11 மணிக்கு கட்சித் தலைவர் விஜய் வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 07, 2024 17:36 ISTதள்ளிப்போகும் த.வெ.க மாநாடு?
தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியான நிலையில் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு தேதி அறிவிப்பை, கொடி அறிவிப்பு நாள் போன்று கொண்டாட த.வெ.க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்
-
Sep 07, 2024 17:22 IST11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 07, 2024 17:00 IST14 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரையும், 3 விசைபடகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகு, 14 மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்
-
Sep 07, 2024 16:30 ISTதுலீப் கோப்பை; ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி
துலீப் கோப்பை தொடரில் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
-
Sep 07, 2024 16:06 ISTமூட நம்பிக்கை தொடர்பாக நிகழ்ச்சி என்றால் தடுத்திருப்போம் - பள்ளி மேலாண்மை குழு
மூட நம்பிக்கை தொடர்பாக நிகழ்ச்சி என்றால் தடுத்திருப்போம். மகாவிஷ்ணு கூட்டத்தை கூட்டியதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிகழ்ச்சி நடப்பது குறித்து மேலாண்மை குழுவுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 28ம் தேதி நடந்த ஆன்மிக சொற்பொழிவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மகாவிஷ்ணுவை அழைத்து வந்தவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.சித்ரகலா தெரிவித்துள்ளார்
-
Sep 07, 2024 15:42 ISTகொடைக்கானலில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயம்
கொடைக்கானல் பைன் மரச் சோலை சுற்றுலா பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்
-
Sep 07, 2024 15:18 ISTகுளித்தலை அருகே விபத்தில் இளைஞர் மரணம்
குளித்தலை அருகே கருப்பத்தூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற கார்த்திக் (33) என்ற இளைஞர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Sep 07, 2024 14:24 ISTமகா விஷ்ணு கைது
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதால் காவல் நிலையம் முன்பு போலீசார் குவிப்பு
-
Sep 07, 2024 14:06 ISTமகாவிஷ்ணுவிடம் தீவிர விசாரணை
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Sep 07, 2024 14:05 ISTஎடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி. உடன் இருந்தவர்கள் இனிமேல் இருப்பார்களா என்கிற சந்தேகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எதையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவிடம் கிடையாது
- நெல்லையில் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
-
Sep 07, 2024 13:36 IST70 அடி உயர விநாயகர் சிலை
தெலுங்கானா: ஐதராபாத்தில் உள்ள கைரதாபாத் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 70 அடி உயர விநாயகர் சிலை
#WATCH | Telangana: A 70-ft tall Lord Ganesh idol installed in Khairatabad area of Hyderabad. Devotees arrive here to offer prayers on #GaneshPuja pic.twitter.com/nCdf7cOtBU
— ANI (@ANI) September 7, 2024 -
Sep 07, 2024 13:13 ISTமகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு இன்று சென்னை வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு சைதாப்பேட்டை துணை காவல் ஆணையர் வருகை
-
Sep 07, 2024 13:12 ISTவெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பின்னடைவு: அன்புமணி ராமதாஸ்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பின்னடைவு:
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 7, 2024
39 மாதங்களில் ரூ.68,145 கோடி மட்டுமே-வீண் விளம்பரங்களை
கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்!
2024-25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில்,… -
Sep 07, 2024 13:02 ISTதமிழகத்தில் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Sep 07, 2024 12:24 ISTமோடி பேச்சு
“கணிதப் பாடத்தில் சிரமப்படும் குழந்தைகளுக்கு வேத கணித நுட்பங்கள் மூலம் எளிதில் கணிதத்தைக் கற்றுக் கொடுக்கலாம். கணிதம் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்த புதுமையான கற்பித்தல் முறைகளுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்” என்று டெல்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
-
Sep 07, 2024 11:45 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் 53,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Sep 07, 2024 11:44 IST`வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு!
ரஜினி நடிக்கும் `வேட்டையன்' படத்தின் முதல் பாடல் `மனசிலாயோ' நாளை மறுநாள் திங்கள்கிழமை (செப். 9-ம் தேதி) வெளியாகிறது
-
Sep 07, 2024 11:13 ISTஅரசு பேருந்து மோதி கூலி தொழிலாளி படுகாயம் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூரைச் சேர்ந்த சரவணன் என்ற கூலி தொழிலாளி சாலையைக் கடக்கும் போது அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
Sep 07, 2024 11:12 IST'கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?' - சீமான் கேள்வி
“திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?. சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 7, 2024
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,… pic.twitter.com/OA1b1WcIUi -
Sep 07, 2024 10:47 ISTஇ-ஆபிஸ் மூலம் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் ஸ்டாலின்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன - முதலமைச்சர் ஸ்டாலின்
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-office வழியே பணி தொடர்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
-
Sep 07, 2024 10:34 ISTஅறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் - பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு
பெருந்திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை அறிவித்தது தமிழக அரசு
-
Sep 07, 2024 10:32 ISTஇ.பி.எஸ் விமர்சனம்
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். குற்றவாளிகள் பயமின்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு
-
Sep 07, 2024 10:29 ISTவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்
ஸ்டார்லைனர் விண்கலம், நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
ஜூன் 5ல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது ஸ்டார்லைனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் சுனிதா, வில்மோர் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஸ்டார்லைனரில் ஹீலியம் வாயு கசிவு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்ப அழைத்து வரும் முடிவை தற்காலிகமாக நாசா கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Sep 07, 2024 09:37 ISTநாதக முன்னாள் நிர்வாகி கைது
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு - நாதக முன்னாள் நிர்வாகி கைது
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உயிரழந்த சிவராமனுக்கு உதவியதாக நா.த.கட்சி முன்னாளி நிர்வாகி கருணாகரன் கைது. சிவராமன் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு கருவியை தீ வைத்து எரித்ததாக கருணாகரனை சிறப்பு புலனாய் குழு போலீசார் கைது செய்தனர்.
-
Sep 07, 2024 09:25 ISTஈச்சனாரி விநாயகர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு
கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு. ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் கூட்ட நெரிசல். தற்காலிக பேரிகார்டுகள் அமைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார்
-
Sep 07, 2024 09:16 ISTகிருஷ்ணகிரி: சிவராமனின் நண்பரும் கைது
போலி என்சிசி முகாம் நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மேலும் 2 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
போலியாக என்சிசி முகாம் நடத்த உதவியதாக அரசு பள்ளி என்சிசி அலுவலர் கோபு கைது. முக்கிய குற்றவாளியான சிவராமனின் நண்பர் கருணாகரன் என்பவரும் கைது
-
Sep 07, 2024 09:06 ISTகிருஷ்ணகிரி: என்.சி.சி ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியதாக அரசுப் பள்ளி என்.சி.சி ஆசிரியர் கைது. மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளரும், ஆண்கள் பள்ளி என்.சி.சி ஆலுவலருமான கோபு (47) என்பவர் கைது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.