Advertisment

Tamil News Updates: வயநாடு நிலச்சரிவு - 27 மாணவர்கள் பலி; 300-ஐ நெருங்கும் உயிரிழப்பு

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
wayanad 2

Tamil News Today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

http://tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ள நிலையில், 27 மாணவர்கள் பலியாகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Aug 02, 2024 00:50 IST
    சமூகநீதிக் காவலர் மோடி - எல்.முருகன் புகழாரம்

    விளிம்புநிலை மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் பிரதமர் மோடி; பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானாவில் மாதிகா சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு தரப்படும் என மோடி வாக்குறுதி தந்தார். உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்     தாக்கல் செய்தது. அரசின் பிரமாணப் பத்திரத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.



  • Aug 02, 2024 00:43 IST
    சீர்காழி அருகே போலீஸ் எஸ்.எஸ்.ஐ வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச்சு

    சீர்காழி அருகே திருவெண்காட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன்(58) என்பவர் வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



  • Aug 01, 2024 23:32 IST
    ஆகஸ்ட் 5-ம் தேதி 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு

    பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் நாளை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது.



  • Aug 01, 2024 23:20 IST
    ஆக. 3 முதல் ஆக. 14-ம் தேதி வரை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து

    ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலை 9.30 - 1.30 மணி வரை சென்னை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலை 9.30 - 1.30 மணி வரை சென்னை கடற்கரை - பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். மேற்சொன்ன நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 01, 2024 21:36 IST
    வயநாடு நிலச்சரிவு: நிவாரணப் பணிகளுக்கு கமல்ஹாசன் ரூ. 25 லட்சம் நிதியுதவி

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கினார்.



  • Aug 01, 2024 20:14 IST
    கல்விக்கான தடைகள் புதிய வடிவில் மீண்டும் தொடங்கியுள்ளது - லயோலா கல்லூரியில் ஸ்டாலின் பேச்சு

    லயோலா கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “காமராஜர் காலம் பள்ளிக் கல்விக்கும் கலைஞர் காலம் கல்லூரிக் கல்விக்கும் பொற்காலம். உயர்கல்வி பொற்காலம் இப்போது ஆராய்ச்சிக் கல்வி பொற்காலமாக இருக்கிறது. கல்விக்கான தடைகள் புதிய வடிவில் மீண்டும் தொடங்கியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைக்கு வகையிலான புதிய பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. தடைகளை அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மாணவர்கள் அறிவு தளத்தில் பயணிக்க வேண்டுகிறோம்.” என்று பேசினார்.    



  • Aug 01, 2024 19:46 IST
    இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் மரணம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை ரோந்து படகு மோதி இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் மீனவர்களிடையே அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளான பாக் வளைகுடாவில் மீன் பிடிப்பதை தடுப்பதாக உள்ளது. மீனவர்களின் விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.



  • Aug 01, 2024 19:16 IST
    சாலை விதிகளை மீறிய நடிகர் பிரசாந்த்க்கு அபராதம்

    பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்த்-க்கு சென்னை போக்குவரத்து காவலதுறை ரூ. 2,000 அபராதம் விதித்தது. சமீபத்தில் தொகுப்பாளருடன் அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.



  • Aug 01, 2024 19:03 IST
    ரூ.35 லட்சம் வழங்கிய மம்முட்டி

     

    நடிகர் மம்முட்டி 20 லட்சத்துக்கான காசோலையை கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவிடம் வழங்கினார். அப்போது, தனது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் சார்பாக பதினைந்து லட்சம் காசோலையையும் வழங்கினார்.



  • Aug 01, 2024 18:49 IST
    கருணாநிதி குறித்து அவதூறு; யூ-ட்யூப்பில் பணம் சம்பாதிக்க எப்படியும் பேசலாமா? நா.த.க நிர்வாகி துரைமுருகனுக்கு நீதிமன்றம் கேள்வி

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கீழமை நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட வேண்டும் என நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.



  • Aug 01, 2024 18:46 IST
    சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனை; கனிமொழி சோமு வலியுறுத்தல்

     

    சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தினார்.



  • Aug 01, 2024 18:44 IST
    மாஞ்சோலை எஸ்டேட்; தமிழக அரசு முக்கிய தகவல்

     

    மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • Aug 01, 2024 18:13 IST
    பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறப்பு

     

    சென்னை -  செங்கல்பட்டு மார்க்கத்தில் பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது.



  • Aug 01, 2024 17:43 IST
    வயநாட்டில் முழு வீச்சில் மீட்பு பணிகள்; ராகுல் காந்தி


    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாட்டின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.



  • Aug 01, 2024 17:13 IST
    ஒகேனக்கல்லில் நீர் அதிகரிப்பு

     

    கேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2,00,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.



  • Aug 01, 2024 17:12 IST
    ஒரே நாளில் திரைக்கு வரும் 6 திரைப்படங்கள்

    தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 6 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.



  • Aug 01, 2024 16:23 IST
    உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

    இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!



  • Aug 01, 2024 15:41 IST
    பட்டியல் இன மக்களக்கு உள் ஒதுக்கீடு: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

    பட்டியலின மக்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவருக்கு சமூகநீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்சநீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியள்ளார்.



  • Aug 01, 2024 14:57 IST
    அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

    திராவிட மாடல் பயணத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம்" அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு.



  • Aug 01, 2024 14:13 IST
    வயநாட்டில் மீட்பு பணிகள் ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் முடியக் கூடிய சூழல் இல்லை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

     நிலச்சரிவில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது சாலியாற்றங்கரையோர பகுதிகளில், உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் மீட்பு பணிகள் ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் முடியக் கூடிய சூழல் இல்லை: வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்



  • Aug 01, 2024 14:09 IST
    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 01, 2024 14:09 IST
    2024ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு

    “2024ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



  • Aug 01, 2024 13:40 IST
    கடவுளின் அவதாரம் என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி இயற்கை பேரிடர்கள் வருவதற்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

    “கடவுளின் அவதாரம் என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி இயற்கை பேரிடர்கள் வருவதற்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை; ராமர் கோயிலுக்கு செலுத்தம் கவனத்தை மலைப்பிரதேசங்களுக்கு மத்திய பாஜக அரசு செலுத்த வேண்டும்; பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆளுநர்கள் தலையீடு செய்கிறார்கள்; ஆளுநர்கள் ஒழுங்காக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சரியாக செயல்படும்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி



  • Aug 01, 2024 13:33 IST
    பா.ஜ.க எம்.பி.,க்கள் வரம்பு மீறி பேசுகிறார்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

    “என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்த வேண்டிய சூழலில் கூட மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.,க்கள் வரம்பு மீறி பேசுகிறார்கள்” - ஈரோட்டில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி



  • Aug 01, 2024 13:29 IST
    வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 276ஆக உயர்வு

    வயநாடு பெரும் நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 276ஆக உயர்வு; மாயமான 206 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல்.



  • Aug 01, 2024 13:04 IST
    தமிழக மீனவர் பலி- மத்திய அரசு கண்டனம்

    இலங்கை கடற்படை கப்பல் மோதி, ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த விவகாரம் இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்த மத்திய அரசு

    டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகார துறை அமைச்சகத்திற்கு, இலங்கை தூதர்களை அழைத்து, எதிர்ப்பை பதிவு செய்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில், ஒரு மீனவர் பலி - 2 பேருக்கு தீவிர சிகிச்சை

    மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்



  • Aug 01, 2024 12:50 IST
    ராமேஸ்வரம் மீனவர் பலி - சாலை மறியல்

    இலங்கை கடற்படை கப்பல் மோதி, ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த சம்பவம்

    ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு, மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

    ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

    உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

    இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தல்



  • Aug 01, 2024 12:34 IST
    காவிரியில் நீர்வரத்து 1.80 லட்சம் கன அடியாக உயர்வு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்

    கரையோர வீடுகளை தொட்டுச் செல்லும் காவிரி ஆறு

    வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு ஓடும் வெள்ளம்

    காவிரியில் நீர்வரத்து 1.80 லட்சம் கன அடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • Aug 01, 2024 12:22 IST
    புதிய காவல் நிலைய கட்டடங்கள் திறப்பு

    புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

    காவல்துறை சார்பில் ரூ.47.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு. 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல்நிலைய கட்டடங்கள், 2 காவல் துறை கட்டடங்கள் திறப்பு/

    காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • Aug 01, 2024 12:08 IST
    அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும்

    அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும். உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு



  • Aug 01, 2024 12:05 IST
    நிவாரண முகாம்களுக்கு செல்லும் ராகுல், பிரியங்கா

    காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் இன்று கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.



  • Aug 01, 2024 11:23 IST
    கண்ணூர் விமான நிலையம் வந்த ராகுல், பிரியங்கா

    ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இன்று நிவாரண முகாம்களை பார்வையிட கண்ணூர் விமான நிலையம் வந்தனர்; இறப்பு எண்ணிக்கை 276 ஆக உள்ளது



  • Aug 01, 2024 11:18 IST
    சூரல்மலை- முண்டகை இடையே இரும்பு பாலம்

    முண்டகை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து மீட்கப்படும் உடல்கள்

    முண்டகையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டம்

    சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம்

    இரும்பு பாலம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்

    என்டிஆர்எப், முப்படைகளும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட உள்ளன

     



  • Aug 01, 2024 10:48 IST
    வயநாடு மீட்பு பணிகள் தீவிரம்

    இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையுடன் (ICG) ஒருங்கிணைந்து, அட்டமலை, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய மூன்று இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது



  • Aug 01, 2024 10:40 IST
    6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 01, 2024 10:17 IST
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,80,000 கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை 1,75,000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 1,80,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு 


    கர்நாடக அணைகளில் இருந்து, சுமார் 2.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.



  • Aug 01, 2024 09:55 IST
    எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிட தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



  • Aug 01, 2024 09:53 IST
    போலி பேராசிரியர்கள் நியமனம்: சீமான் கண்டனம்

    அறப்போர் இயக்கம்வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது

    தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது

    - சீமான் X தளத்தில் பதிவு



  • Aug 01, 2024 09:50 IST
    நாகை , காரைக்காலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

    நாகை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  முன்னாள் மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபீக் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை;
    அதே போல் காரைக்கால், சுண்ணாம்பு கார வீதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் நிர்வாகி அஷ்ரப் அலி என்பவரது வீட்டிலும் சோதனை



  • Aug 01, 2024 09:13 IST
    கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை பெங்களூரில் மீட்பு

    கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்



  • Aug 01, 2024 09:13 IST
    தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் 7 - 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.



  • Aug 01, 2024 08:50 IST
    3 நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில் வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1 ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



  • Aug 01, 2024 08:39 IST
    ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

    கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

    http://tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.



  • Aug 01, 2024 08:06 IST
    சூரல்மலையில் தொடரும் மீட்பு பணிகள்

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.



  • Aug 01, 2024 07:39 IST
    வயநாடு விரையும் ராகுல் காந்தி, பிரியங்கா

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி டெல்லியில் இருந்து வயநாடு புறப்பட்டனர்.

    முன்னதாக ராகுலும் பிரியங்காவும் புதன்கிழமை வயநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர், ஆனால் மோசமான வானிலை காரணமாக பயணத்தை நிறுத்திவிட்டனர். இருவரும் நிவாரண முகாம்களுக்கும் மருத்துவக் கல்லூரிக்கும் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.



  • Aug 01, 2024 07:37 IST
    11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

    மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 11 மாவட்டங்களுக்கு  கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.



  • Aug 01, 2024 07:27 IST
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,75,000 கன அடியாக உயர்வு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,40,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 1,75,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து, சுமார் 2.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேலும் நீர்வரத்து உயர வாய்ப்பு

    காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



  • Aug 01, 2024 07:27 IST
    தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் ஆகிய உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல். இக்கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க தீவிரம்.



  • Aug 01, 2024 07:27 IST
    பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பள்ளிகளில் பெறலாம்

    இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொது தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கிழமை (ஆக.1) முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.



  • Aug 01, 2024 07:26 IST
    நீலகிரியில் 3 நாள்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment