Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.
சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக பொன்.மாணிக்கவேல் மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரே புகார் அளித்தனர்.
-
Aug 11, 2024 21:47 ISTபாரிஸ் ஒலிம்பிக் நிறைவு; பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 71வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகள் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. 6 பதக்கங்களுடன் இந்தியா 71வது இடம் பெற்றுள்ளது.
-
Aug 11, 2024 20:59 ISTசெபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? - மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி
செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா... அல்லது அதானியா? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா? நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என்று என இப்போது புரிகிறது என்று க்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகப் பேசினார்.
-
Aug 11, 2024 20:13 IST`தங்கலான்' திரைப்படத்தின் "அறுவடை" மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு
`தங்கலான்' திரைப்படத்தின் ‘அறுவடை’ எனும் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
-
Aug 11, 2024 20:06 ISTதிருவள்ளூரில் கார் மீது லாரி மோதி 5 பேர் பலி; 2 பேர் படுகாயம்
திருவள்ளுர் மாவட்டம், ராமஞ்சேரி அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி கார் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
Aug 11, 2024 19:08 IST‘செபியில் சேர்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே முதலீடு செய்யபட்டது’; ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து மதாபி புச் பதில்
“இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களுக்காக ஹிண்டன்பர்க்கிற்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்று மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த புச் தம்பதியினர், “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் முதலீடு 2015-ல் அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வசிக்கும் தனியார் குடிமக்களாக இருந்தபோதும், மாதாபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பும், முழு நேர உறுப்பினராக இருந்தாலும் செய்யப்பட்டது.” என்று பதிலளித்துள்ளனர்.
-
Aug 11, 2024 18:16 ISTதயாரிப்பாளர் சங்கத்துடன் எந்தப் பிரச்னையும் கிடையாது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்- நாசர்
நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி செய்தியாளர் சந்திப்பு: “தயாரிப்பாளர் சங்கத்துடன் எந்தப் பிரச்னையும் கிடையாது. வரும் வாரத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படும். படப்பிடிப்பு நிறுத்தம் வரக் கூடாது என்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் அனைத்தும் சுமுகமாக முடியும்” என்று கூறினார்.
-
Aug 11, 2024 17:58 ISTஅடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் கீதா ஜீவன்
அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்
-
Aug 11, 2024 17:25 ISTதென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடக்கம்
சென்னை தி.நகரில் நடிகர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது. துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
-
Aug 11, 2024 17:07 ISTதெலங்கானாவில் கார் மோதி காவலாளி மரணம்
தெலங்கானா, ஜீடிமெட்லா பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் காவலாளி உயிரிழந்தார். மதுபோதையில் காரை வேகமாக இயக்கியதால் விபத்து என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
-
Aug 11, 2024 16:22 ISTமாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கால்பந்து போட்டியில் பங்கேற்ற அவரின் அணி தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்தார். இதனையடுத்து அண்ணாமலையை சேலம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்
-
Aug 11, 2024 16:00 ISTதோட்டத்தில் பழம் பறித்தவர் மீது துப்பாக்கிச்சூடு
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தோட்டத்தில் தொடர்ந்து பழங்களை பறித்ததால், வெள்ளையன் (18) மீது தோட்ட உரிமையாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
Aug 11, 2024 15:34 ISTஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் மரணம்
சென்னை அடுத்த ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த கோபிநாத் தொழிலாளர் உயிரிழந்தார்
-
Aug 11, 2024 15:09 ISTவிஜய் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை - சீமான்
விஜய் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை; எனக்கும் இதே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
-
Aug 11, 2024 14:44 ISTசென்னை வெளுத்து வாங்கும் மழை
சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
-
Aug 11, 2024 13:41 ISTகனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு
சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
-
Aug 11, 2024 13:14 ISTமக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் கார் பந்தயத்தில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது: இ.பி.எஸ்
மக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் கார் பந்தயத்தில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டியது அவசியமா?. மக்களின் வரிப்பணத்தில் ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. மக்களின் பணம், மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
-
Aug 11, 2024 13:13 ISTமுன்விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம் சிறுமலை வேளாம்பண்ணையை சேர்ந்த சவேரியார், வெள்ளையன் இடையே முன்விரோதம் இன்று அதிகாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெள்ளையனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சவேரியார் கழுத்து, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெள்ளையன் தலைமறைவான சவேரியாரை தேடி வரும் போலீசார்.
-
Aug 11, 2024 12:54 ISTஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி குழுமம் மறுப்பு
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் அறிக்கை.
ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உறுதியான பிறகும், அதே குற்றச்சாட்டை மறுசுழற்சி செய்து வெளியிடப்பட்டுள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது
-
Aug 11, 2024 12:53 ISTபுடவை அணிந்து மாரத்தான் ஓடிய பெண்கள்
சென்னை: மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புடவை அணிந்து பெசண்ட் நகரில் மாரத்தான் ஓடிய பெண்கள்.
இந்த மாரத்தான் டிக்கெட் மூலம் கிடைத்த பணத்தை வைத்து பழங்குடியின பெண்களுக்கு நாப்கின், உள்ளாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொடுக்க முடிவு
-
Aug 11, 2024 12:33 ISTமாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்
விளையாட்டுப் போட்டியில் தோற்ற மாணவர்களை, ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்
மேட்டூர் அடுத்த கொளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அதிர்ச்சி
மைதானத்திலேயே மாணவர்களை தகாத வார்த்தையில் திட்டி, எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்
சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சிகர வீடியோ... உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை
-
Aug 11, 2024 12:23 ISTவயநாடு நிலச்சரிவு- ரூ.25 லட்சம் வழங்கிய தனுஷ்
வயநாடு நிலச்சரிவு, கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் தனுஷ்
-
Aug 11, 2024 11:58 ISTகொட்டும் மழையில் தார்சாலை பணி
திருத்தணியில் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கப்பட்டதால் அதிர்ச்சி. எத்தனை நாட்கள் தாங்கும் என நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கேள்வி.
ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை பொருட்படுத்தாது, தண்ணீரிலேயே போடப்பட்ட சாலை
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யாரும் இல்லாமல், சாலை அமைத்த ஒப்பந்ததாரர்
-
Aug 11, 2024 10:32 ISTமுதல் சுற்று கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்தமுள்ள 1.79 லட்சம் இடங்களில் இதுவரை 19,922 மாணவ, மாணவிகள் என்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சி.எஸ்.இ படிப்பில் 4,879 பேரும், இ.சி.இ படிப்பில் 2,704 பேரும் சேர்ந்துள்ளனர்.
-
Aug 11, 2024 09:57 ISTவிழுப்புரத்தில் 22 செ.மீ. மழைப்பதிவு
விழுப்புரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நள்ளிரவு முதல் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.
-
Aug 11, 2024 09:42 ISTமுதுநிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர்
தற்போது தமிழகத்தை சேர்ந்த 75% பேருக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Aug 11, 2024 09:04 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,548 கன அடியில் இருந்து 20,505 கன அடியாக அதிகரிப்பு
அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உயர்வு
-
Aug 11, 2024 08:36 ISTஅதானியின் சர்வதேச பங்குகளில் செபி தலைவர் முதலீடு: ஹிண்டன்பர்க் அறிக்கை
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்தாண்டு ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை தொடர்ந்து, அதானி நிறுவனத்தின் பங்குகள் பெறும் சரிவை சந்தித்த நிலையில், திங்கள்கிழமை பங்குச் சந்தை தொடங்கியவுடன் மீண்டும் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை காணும் என்று முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
Aug 11, 2024 08:16 ISTவினேஷ் போகத் மேல்முறையீடு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
Aug 11, 2024 07:46 ISTஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவை
சென்னை விமான நிலையத்தில் இருந்து புவனேஷ்வர், பக்தோரா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் இனி அன்றாடம் ஒரு விமானம் பறக்கவுள்ளது.
புதிய விமான சேவையை ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
-
Aug 11, 2024 07:31 ISTதமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 11, 2024 07:31 ISTவினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பளிக்கிறது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம்
இன்றுடன் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Aug 11, 2024 07:31 ISTமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.