Tamil News Today Updates: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது.எந்த நேரத்திலும் உபரிநீர் திறந்துவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும்நிலை உருவாகியுள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அம்பத்தூர் காவல் துணை ஆணையருக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. பிற கடலோர மாவட்டங்களிலும் தொடர்மழை நீடித்தது. பீகார் முதலமைச்சராக 4-வது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்ற்றார்.
பகிரங்க ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த பின்பும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரது வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான். இதனால் அனைத்து குரு ஸ்தலங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News : கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் மேலும் 2,520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,30,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.31 விழுக்காடாக உள்ளது . அதோடு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,156 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,79,216 ஆக இருக்கிறது. மொத்த தொற்று எண்ணிக்கையில் 5.44 % பேர் தான் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Web Title:Tamil news today live weather forecast coronavirus covid 19 nitish kumar
செம்பரம்பாக்கம் ஏரியின் 5 மற்றும் 19வது கண் மதகுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான மையங்களை தமிழகத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான மையக்கள் சித்தூர், நெல்லூரில் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவை ஆர்.ஜே.டி புறக்கணிப்பு செய்தது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “தமிழகத்தில் மு.க.அழகிரி உள்ளிட்ட யார் புதிய கட்சி துவங்கினாலு துவங்காவிட்டாலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தமிழகம் வரும் அமித்ஷா தமிழை ஆட்சி மொழியாக அறிவித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நீர்த்தேக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்கிறார். கரூர் மாவட்டத்தில் ரூ.406 கோடி மதிப்பில் கதவணை திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் இன்று புதிதாக 1,725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 17 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது, மழைக் காலங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடுகள் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தனி நபர் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிபதி கலையரசன் விசாரணைக் குழுவுக்கு இன்று பொறுப்பு ஏற்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு .பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை .10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்
பீகார் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவ.23ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனியில் இடத்தகராறில் தியேட்டர் உரிமையாளர், இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நடராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், காயமான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஊர்வலங்கள், யாத்திரைகளை தமிழகம் ஆதரிக்காது. மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியல் செய்ய வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது என 'நமது அம்மா' நாளிதழில் பாஜகவுக்கு பதிலடி
தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது, என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும் முதன் முறையாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவத்தில் முதன் முறையாக இட ஒதுக்கீடு. இந்த அரசு ஓதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3650 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது.
மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தவிர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரைவு வக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் டிசம்பர் 15 வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவ.21, 22 மற்றும் டிச.12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
பீகார் முதலமைச்சராக 4-வது முறையாக இன்று நிதீஷ் குமார் பதவியேற்கிறார். இந்த விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. நிதிஷுடன் இணைந்து துணை முதல்வர்களாக பாஜக-வை சேர்ந்த இருவர் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.