News Highlights : துணை வேந்தர் சூரப்பா குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்கு கடிதம்

Tamil News Today : தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை அறிக்கை மையம்.

By: Dec 2, 2020, 7:25:15 AM

Latest Tamil News : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களை மீட்கவேண்டும் என மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் டோமர், இன்று பிற்பகல் 3 மணியளவில் விக்யான் பவனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3-ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் விவசாயிகள் பங்கேற்பார்களா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று கூறிய நிலையில், ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ‘வா தலைவா வா’ என்று அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:12 (IST)01 Dec 2020
துணை வேந்தர் சூரப்பா குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்கு கடிதம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், சூரப்பா நேர்மையானவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

22:01 (IST)01 Dec 2020
இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம்; 4 மாணவர்களின் மருத்துவக் கலந்தாய்வு அனுமதி ரத்து

இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 மாணவர்களின் மருத்துவக் கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20:36 (IST)01 Dec 2020
புரெவி புயல் உருவானது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது தற்போது புயல் சின்னமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வங்கக் கடலில் புரெவி புயல் உருவாகியுள்ளது. இலங்கையின் திரிகோணமலைக்கு தென் கிழக்கே 4000 கி.மீ தொலைவில் இந்த புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19:30 (IST)01 Dec 2020
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 இடங்களில் தற்போது 53 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 10 நீதிபதிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் பங்கேற்க உள்ளனர்.

19:12 (IST)01 Dec 2020
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - காவல்துறை அறிவிப்பு

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

17:29 (IST)01 Dec 2020
சாதி வாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், சாதி வாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சாதி வாரியாக புள்ளிவிவரங்களை சேகரித்தால் மட்டுமே முழு தகவல் கிடைக்கும் என்றும் சமூக நீதி காக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

16:44 (IST)01 Dec 2020
பீகார் மாடல்' தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் - டி. ஆர் பாலு

"2021-சட்டமன்ற தேர்தலையொட்டி, முதியோர் - மாற்றுத்திறனாளிகள் - கொரோனா நோயாளிகள் வாக்களிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் ’பீகார் மாடல் தபால் வாக்குமுறை’ தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.  

16:42 (IST)01 Dec 2020
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் - தமிழக அரசு

7.5% இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களில், தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.   

16:33 (IST)01 Dec 2020
முதல்வர் வேண்டுகோள்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். டிசம்பர் 1-4ம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

15:29 (IST)01 Dec 2020
புதிதாக 31 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

15:00 (IST)01 Dec 2020
அறிவிப்புகளை தமிழில் வெளியிட உயர்நீதிமன்றம் ஆணை

தமிழகம் தொடர்பான மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் வெளியிட உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு 

14:50 (IST)01 Dec 2020
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

14:34 (IST)01 Dec 2020
"வாகனங்களுக்கு 'எப்.சி.' வழங்குவதில் ‘மெகா’ வசூல் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

"வாகனங்களுக்கு 'எப்.சி.' வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் ‘மெகா’ வசூல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், விவரங்களுக்கு

14:29 (IST)01 Dec 2020
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க உத்தரவு

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

14:28 (IST)01 Dec 2020
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - முதல்வர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

14:14 (IST)01 Dec 2020
பாரதிராஜா வாழ்த்து!

முரளி ராம நாராயணன் தலைமையிலான தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாழ்த்துகள் . தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி; எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம்  இயக்குனர் பாரதிராஜா கருத்து. 

14:09 (IST)01 Dec 2020
வேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர்!

டிச.7ஆம் தேதி திருச்செந்தூரில் வேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

12:53 (IST)01 Dec 2020
கமல்ஹாசன் பேட்டி!

எல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா ?  தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் . என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

12:31 (IST)01 Dec 2020
தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தி!

தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தி தொகுப்புக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு . மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை செய்வதாக நீதிமன்றம் அறிவிப்பு. 

12:30 (IST)01 Dec 2020
மு.க.அழகிரி பேட்டி!

:வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று - மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.  மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அரசியல் கட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,  ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவை அறிவிப்பேன்  என்றார். 

11:50 (IST)01 Dec 2020
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்

சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

10:59 (IST)01 Dec 2020
புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்

தென் தமிழகத்தில் புரெவி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

10:56 (IST)01 Dec 2020
துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அடுத்த 24 மணி நேரத்தில் புரெவி புயல் உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்த நிலையில் பாம்பன், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

09:51 (IST)01 Dec 2020
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை இரவு கரையைக் கடக்க வாய்ப்பு

நிவர் புயலைத் தொடர்ந்து 'புரெவி' புயல் தற்போது திரிகோணமலையிலிருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நாளை மாலை அல்லது இரவு இந்த 'புரெவி' புயல் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:19 (IST)01 Dec 2020
வன்னியர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% உள் ஒதுக்கீடு வேண்டுமென பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக வெளியூர்களிலிருந்து வரும் பாமகவினரை காவல்துறையினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரைக் கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்குப் போக்குவரத்து பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது.

09:12 (IST)01 Dec 2020
ரஜினி என்ன முடிவெடுத்தாலும் பாஜக வரவேற்கும் - எல்.முருகன்

"ரஜினிகாந்த் அண்ணா மிகப் பெரிய ஆன்மீகவாதி மற்றும் தேச பக்தர். அவர் என்ன முடிவெடுத்தாலும், பாஜக வரவேற்கும்" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Today's Tamil News : சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்தி 1 லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Web Title:Tamil news today live weather purevi cyclone rajini tamilnadu politics crime eps stalin modi delhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X