Advertisment

Tamil Breaking News Highlights: கருணாநிதி உருவ நாணயம் வெளியீட்டு விழா: ராஜ்நாத் சிங் சென்னை வருகை

Tamil News Live Updates-17-08-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சச

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 153-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

13 மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று சொந்த ஊரான ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Aug 17, 2024 20:58 IST
    மத்திய நிதி அமைச்சருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: காரணம் என்ன?

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனது கட்சி எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்த சந்திரபாபு நாயுடு பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்



  • Aug 17, 2024 20:57 IST
    கொடைக்கானல் போதை காலான் சம்பவம்: காவல்துறை எச்சரிக்கை

    கொடைக்கானலில்  ஒரே நாளில் போதை காலான் பயன்படுத்தியதாக 16 பேர் சிக்கினர்.. கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் போதை காளான் குறித்து பதிவு செய்பவர்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது என்ற காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Aug 17, 2024 20:05 IST
    பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

    பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.



  • Aug 17, 2024 20:03 IST
    மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி

    இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் ஆறுகாட்டுத் துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி. இதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், இலங்கை தூதரகம் மற்றும் இந்தியாவுடைய வெளியுறவுத் துறை ஆகியவற்றுக்கும் இவற்றை கவனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் உறுதியளித்தார்.



  • Aug 17, 2024 20:01 IST
    சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு

    கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் சிவராமன் (32) மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமனை தேடி வரும் நிலையில் கட்சியில் இருந்து சிவராமனை நீக்கி நாம் தமிழர் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.



  • Aug 17, 2024 19:40 IST
    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சாலையோர வியாபாரி தற்கொலை முயற்சி

    வியாபாரம் செய்ய சிலர் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க வலியறுத்திய சாலையோர வியாபாரி ஒருவர் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Aug 17, 2024 19:38 IST
    சிப்காட் விடுதி திறப்பு விழாவில் முதலமைச்சர் உரை

    தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் என்ற இடத்தை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது. இந்தியாவிலேயே பெண் பணியாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 41,000 பணியாளர்களில் 35,000 பேர் பெண்கள். 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளேன்.



  • Aug 17, 2024 19:35 IST
    திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்

    பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.



  • Aug 17, 2024 19:34 IST
    தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்: முதல்வர் ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம், தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மூலம், ஒரு டிரிலியன் டாலர் இலக்கை எட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Aug 17, 2024 17:38 IST
    'உரிய பாதுகாப்பை அரசு கொடுக்க வேண்டும்': மருத்துவர் பக்தவத்சலம்

    கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், "இரவு, பகலாக உழைத்து ஆயிரக் கணக்கான நோயாளிகளை காப்பாற்றும் எங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு நிர்வாகம் வழங்க வேண்டும்" மூத்த மருத்துவர் பக்தவத்சலம் தெரிவித்துள்ளார். 



  • Aug 17, 2024 17:34 IST
    சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் திறப்பு 

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மாலை 5 மணிக்கு சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைதத்தார். விழாவிற்காக சென்னை விமான நிலையம் வந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியூவை வரவேற்று காரில் அழைத்து சென்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. 



  • Aug 17, 2024 15:48 IST
    இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு

    மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் அரக நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.



  • Aug 17, 2024 15:23 IST
    இயக்குநர் மணிரத்னத்திற்கு சீமான் வாழ்த்து 

    "சிறந்த தமிழ்த்திரைப்படம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய 4 பிரிவுகளில் இந்திய ஒன்றிய அரசின் விருதினை வென்றதன் மூலம் அதிக விருதுகளைக் குவித்துள்ள 'பொன்னியன் செல்வன்-1' திரைப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்" என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Aug 17, 2024 15:22 IST
     எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக, ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு கோரி தி.மு.க பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



  • Aug 17, 2024 15:21 IST
    திரையரங்குகளில் `கங்குவா' பட டிரைலர் 

    சூர்யாவின் `கங்குவா' படத்தின் டிரைலர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



  • Aug 17, 2024 15:20 IST
    குண்டர் சட்டம் - சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

    "குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது" என்று தமிழக அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

    ரூ.3.30 கோடி நிதி மோசடி குற்றத்திற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தில்  அடைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



  • Aug 17, 2024 14:53 IST
    திருமா பிறந்த நாள்: இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து



  • Aug 17, 2024 14:49 IST
    திருநெல்வேலி உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நாளை கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம். 



  • Aug 17, 2024 14:48 IST
    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு . 



  • Aug 17, 2024 14:40 IST
    லஞ்சம் வாங்கிய புகாரில் 4 காவலர்களை அதிரடியாக சஸ்பெண்ட்

    திருச்சி: லஞ்சம் வாங்கிய புகாரில் 4 காவலர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., வருண் குமார் உத்தரவு;



  • Aug 17, 2024 14:24 IST
    தனி மாநில கோரிக்கையை முன்வைத்து: பா.ஜ.க கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

    பா.ஜ.க கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) திப்ராலாந்து தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக ஆகஸ்ட் 23ம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.



  • Aug 17, 2024 13:59 IST
    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகளை படிப்படியாக செய்துவருகிறோம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக படிப்படியாக செய்துவருகிறோம்; மிக பிரமாண்டமான விமான நிலையம் பரந்தூரில் அமையும்” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி



  • Aug 17, 2024 13:56 IST
    27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்

    வரும் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்; அங்கே யாரை சந்திக்கிறார், என்ன என்ன முதலீடுகள் என்பது குறித்து தினம் தினம் உங்களுக்கு தகவல் தெரிவிப்பேன்” - சென்னையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி



  • Aug 17, 2024 13:46 IST
    ஆந்திர : வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு . சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி? என போலீசார் சந்தேகம் உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை. 



  • Aug 17, 2024 13:17 IST
    ஸ்ரீபெரும்புதூரில் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சிப்காட் மெகா குடியிருப்பு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

    ஸ்ரீபெரும்புதூரில் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சிப்காட் மெகா குடியிருப்பு. சிப்காட் மெகா குடியிருப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்" "ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் சிப்காட் மெகா குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்ற ஒரு குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த மெகா குடியிருப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கும்" தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



  • Aug 17, 2024 12:59 IST
    8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 17, 2024 12:58 IST
    ரயில் சேவை ரத்து

    அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஆகஸ்ட் 19, 21  ஆகிய தேதிகளில் காலை 11:10 மணி முதல் மதியம் 01:10 மணி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Aug 17, 2024 12:33 IST
    வதந்திகளை நம்ப வேண்டாம்: விழுப்புரம் ஆட்சியர்

    விழுப்புரம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முகாம் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

    முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ் அப்-ல் பரவும் தகவலை உண்மை என நம்பி, ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.



  • Aug 17, 2024 12:29 IST
    கர்நாடகா முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்

    கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரா சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்ய ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல்



  • Aug 17, 2024 12:02 IST
    நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளியில் வரும்? ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். கேள்வி



  • Aug 17, 2024 11:37 IST
    திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து



  • Aug 17, 2024 11:36 IST
    நாடு திரும்பினார் வினேஷ் போகத்

    பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நாடு திரும்பினார்



  • Aug 17, 2024 10:27 IST
    கே.சி.வேணுகோபாலுக்கு புதிய பதவி

    நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் நியமனம்



  • Aug 17, 2024 10:26 IST
    சிவகங்கை - ரவுடியை சுட்டுபிடித்த போலீஸ்

    சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் குகனை, வெட்டிவிட்டு தப்ப முயன்ற அகிலன் என்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

    தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி அகிலன் காயம், ரவுடி வெட்டியதில் எஸ்.ஐ. குகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    காளையார்கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நடந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதி 



  • Aug 17, 2024 09:56 IST
    கோவையில் மருத்துவர்கள் போராட்டம்

    கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்.

    GVJzTZsaEAQ0VYZ

    GVJzTZnbsAAgkOR



  • Aug 17, 2024 09:43 IST
    ஆரஞ்சு எச்சரிக்கை

    தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • Aug 17, 2024 09:43 IST
    'GOAT' படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்“ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது 



  • Aug 17, 2024 07:50 IST
    உ.பி: ரயில் தடம் புரண்டு விபத்து

    உத்தரபிரேதசம்: கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் (வாரணாசி - அம்தாவத்) ரயில் விபத்து - “தண்டவாளத்தின் குறுக்கே இருந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது ரயில் மோதி, இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளது. பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை;

    சம்பவ இடத்தில் சான்றுகள் சரிபார்க்கப்படுகின்றன. IB மற்றும் உபி போலீசார் விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர்” - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்



  • Aug 17, 2024 07:50 IST
    மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டம்

    மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட  உள்ளனர்;

    இன்று காலை தொடங்கி நாளை (ஆக.18 ) காலை  6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment