Advertisment

Tamil News Highlights: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை

12/02/2024- இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

 குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,520 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 765 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 491 மில்லியன் கனஅடியாக உள்ளது

 செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 12, 2024 21:45 IST
    வெற்றி துரைசாமி மரணம்; எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து வாடும் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்



  • Feb 12, 2024 20:51 IST
    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

    பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்



  • Feb 12, 2024 20:45 IST
    கால்பந்து ஆட்டத்தின் இடையே மின்னல் தாக்கி ஒரு வீரர் மரணம்

    இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து ஆட்டத்தின் இடையே மின்னல் தாக்கி ஒரு வீரர் உயிரிழந்துள்ளார்



  • Feb 12, 2024 20:21 IST
    வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமனம்

    வங்கதேச முன்னணி கிரிக்கெட் வீரர் நஜ்முல் ஹொசைன் அனைத்து விதமான போட்டிகளுக்கும் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Feb 12, 2024 20:04 IST
    ‘SK21' படத்தின் டைட்டில் டீஸர் பிப்.16ம் தேதி ரிலீஸ்

    சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘SK21' படத்தின் டைட்டில் டீஸர் பிப்.16ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது



  • Feb 12, 2024 19:40 IST
    முரசொலி அறக்கட்டளை மீதான புகார்; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம் பதிலளிக்கவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



  • Feb 12, 2024 19:23 IST
    கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்

    பின்னி மில் விவகாரம் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர்​ சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினர்​ சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், வருமானம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • Feb 12, 2024 19:06 IST
    சட்டப் பேரவையில் நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர் ரவி

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்



  • Feb 12, 2024 18:34 IST
    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலில் நடந்த விபத்தில் மரணம்; இ.பி.எஸ் இரங்கல்

    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலில் நடந்த விபத்தில் மரணம் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Feb 12, 2024 18:31 IST
    செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குநர் மோகன் முதலமைச்சரின் முகவரிதுறை செயலாளராக நியமனம்

    செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குநர் மோகன் முதலமைச்சரின் முகவரிதுறை செயலாளராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளார்.



  • Feb 12, 2024 18:13 IST
    தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் செய்தது தவறு - தமிழிசை சௌந்தரராஜன்

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் செய்தது தவறு. அவர் சில கருத்துகளை சொல்லியிருக்கக் கூடாது. ஆளுநர் உரையைக் கொடுக்காத ஆட்சியை தெலங்கான மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 12, 2024 18:10 IST
    ஆளுநர் ஆர்.என். ரவி மீது தி.மு.க-வுக்கு கோபம் ஏன்? - அண்ணாமலை கேள்வி

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “போலி தரவுகள் நிரப்பட்ட உரையை படிக்காததற்காக ஆளுநர் மீது தி.முக-வுக்கு கோபம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதை நினைவுபடுத்த வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 12, 2024 18:06 IST
    தனியார் மருத்துவமனை கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி அளித்தது எப்படி? சி.எம்.டி.ஏ-வுக்கு ஐகோர்ட் கேள்வி

    அனுமதி பெறாத கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமானம் மேற்கொள்ள அனுமதித்தது எப்படி என சி.எம்.டி.ஏ-வுக்கு கேள்வி எழுப்பியது. கட்டுமான பணியில் ஒலி மாசை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.



  • Feb 12, 2024 17:58 IST
    சிதம்பரம் சாக்காங்குடியில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

    கடலூர், சிதம்பரம் சாக்காங்குடியில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி, அரணை விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



  • Feb 12, 2024 17:32 IST
    வேங்கைவயல்: உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

    வேங்கைவயலில் பட்டியலினத்தவர் குடியிருப்பு பகுதியில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த மனுவை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 



  • Feb 12, 2024 17:25 IST
    ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டுள்ளோம் - ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி

    நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டுள்ளோம்; முதல்வரிடம் பேசி தெரிவிப்பதாக பேச்சுவார்த்தையில் டி.ஆர். பாலு தெரிவித்தார்.” என்று கூறினார்.



  • Feb 12, 2024 17:12 IST
    தி.மு.க-வுடன் ஐ.யூ.எம்.எல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

    நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தி.மு.க-வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.  தி.மு.க தொகுதி பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு உடன் ஐ.யூ.எம்.எல் குழு சந்திப்பு எடுக்கப்பட்டுள்ளது.



  • Feb 12, 2024 16:55 IST
    திமுகவுடன் ஐ.யூ.எம்.எல் பேச்சுவார்த்தை

    நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை திமுக தொகுதி பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு உடன் ஐயூஎம்எல் குழு சந்திப்பு



  • Feb 12, 2024 16:25 IST
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

    செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம். திருச்சி மாநகர ஆணையர் வைத்தியநாதன் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • Feb 12, 2024 16:21 IST
    பாஜகவில் இணைந்த அதிமுக நிர்வாகி நடுரோட்டில் வேட்டியை அவிழ்த்து மாற்றியதால் பரபரப்பு

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா ஏமாப்பூர் அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளரான முத்துக்குமார், அதிமுக கரை வேட்டியை கழற்றி, பாஜக கரை வேட்டியை கட்டி பாஜகவில் இணைந்தார்



  • Feb 12, 2024 16:05 IST
    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்பு

    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது



  • Feb 12, 2024 15:19 IST
    எடப்பா பழனிச்சாமி வந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து விளக்க தயார் : அமைச்சர் சிவசங்கர்

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு  என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.



  • Feb 12, 2024 14:44 IST
    பீகார் சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்

    பீகார் சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம். தீர்மானத்துக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 112 பேரும் வாக்களிப்பு.



  • Feb 12, 2024 13:52 IST
    14+1 என்பது தன்னுடைய கருத்து அல்ல: பிரேமலதா

    14+1 என்பது தன்னுடைய கருத்து அல்ல . கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். கூட்டணி குறித்து  எங்களிடம் பேச வருபவர்களிடம் ஆலோசித்துவிட்டு இறுதிமுடிவு எடுக்கப்படும் – பிரேமலதா



  • Feb 12, 2024 13:44 IST
    மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

    மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் சவான் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Feb 12, 2024 13:24 IST
    டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு

    டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு. அமல் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிப்பு.



  • Feb 12, 2024 12:50 IST
    எஸ்.கே 21 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும்

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே 21’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு



  • Feb 12, 2024 12:30 IST
    உயிரிழந்த தனது ரசிகரின் படத்திற்கு நடிகர் சூர்யா அஞ்சலி

    உயிரிழந்த தனது ரசிகரின் படத்திற்கு நடிகர் சூர்யா அஞ்சலி. குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா, எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.



  • Feb 12, 2024 12:20 IST
    நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: செயற்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

     நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. 



  • Feb 12, 2024 12:18 IST
    எல்லையில் தடுப்பரண்களை அமைக்கும் பணியில் காவல்துறையினர்

    டெல்லியை நோக்கி நாளை பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எல்லையில் தடுப்பரண்களை அமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளும் ஒரு சில கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளை டெல்லியை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்



  • Feb 12, 2024 12:16 IST
    தொகுதிப் பங்கீடு: திமுக, விசிக இன்று பேச்சுவார்த்தை

    அண்ணா அறிவாலயத்தில் திமுக, விசிக தொகுதிப் பங்கீடு குறித்து இன்று மதியம் 3 மணிக்கு  பேச்சுவார்த்தை. மாலை 4 மணிக்கு திமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை  



  • Feb 12, 2024 12:09 IST
    பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: ராஜேஷ்தாஸ்க்கு 3ஆண்டு சிறைத் தண்டனை உறுதி

    பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு  சிறைத் தண்டனை உறுதி செய்தது  விழுப்புரம் முதன்மை அமர்வு  நீதிமன்றம் . 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உத்தரவு .



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment