Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் கொரோனா : மத்திய அரசு கடிதம்
கொரோனா பரிசோதனையில் தீவிரம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம். ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் எச்சரிக்கை.
இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றது. 4க்கு 1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இயேசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அல்லாமல், மக்களுக்காக, மனித நேயத்திற்காக உழைத்தார்; மனித குலத்தை காப்பாற்ற வந்து, மற்றவர்களுக்காக துன்பப்பட்டு, உயிர் நீத்தார் என்று பேசியுள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் வரும் 27ம் தேதி வனத்துறை தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதார இயக்குனரகத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 5639 தபால் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் அதிகப்பட்சமாக சத்தீஸ்கரில் 1142 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.
திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சீனாவில் அதிவேகமாக பரவிவரும் பிஎஃப்7 ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவருகிறது.
இந்தப் புதிய தொற்றுக்கு குஜராத்திலும் இருவரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பெண் வழக்குரைஞர் ஹேமாவதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 2800 கிலோ பறிமுதல் போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1500 கோடி ஆகும்.
கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2022 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடற்சார் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த மசோதா கடும் தண்டனை வழங்க வழிகோலுகிறது.
நாட்டுக்கு எதிராக சமூக சீர்கேடுகளில் ஈடுபடும் என்ஜிஓக்கள் மீது அரசு கருணை காட்டாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் கு. அண்ணாமலை நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரின்ஸ் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கின்போது சிவகார்த்திகேயன் தரப்பு, “பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது தயாரிப்பு பணிகளில் தொடர்பு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பி.ஆர்.ஓ மற்றும் ஐடி பொறியாளரின் கார்கள் தீப்பற்றி எரிந்தன.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அம்பேத்கர் காவி உடையில், நெற்றியில் திருநீருடன் இருப்பது போல் நோட்டீஸ் அச்சடித்து ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கும்பகோணம் இந்து முன்னணி நிர்வாகி குருமூர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் 83 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு விட்டது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஜமால் என்பவரது வீட்டில் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக சோதனை எனக் கூறி அமரன் தலைமையிலான கும்பல் பணம் பறித்தது. என்.ஐ.ஏ அதிகாரிகள் என்ற பெயரில் மத்திய சென்னை மாவட்ட பாஜக நிர்வாகி வேங்கை அமரன் தலைமையிலான கும்பல் பறித்த ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பறித்த பணத்தை பதுக்க உதவி செய்த ஜிம் பயிர்சியாளர் முகமது ஃபைசல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளர்.
மேலும், ரூ.20 லட்சம் பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரூ.2 கோடி பணம் பறித்ததாக போலீசில் சரணடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “நாட்டில் 45,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. நாட்டில் 93% கிராமங்கள் 4ஜி சேவையைப் பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின், இலங்கை பாஸ்போர்ட் அவரிடம் திருப்பி வழங்கப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பாஸ்போர்ட்டை வழங்கியது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் சென்ற 1 விசைப் படகையும் பறிமுதல் செய்தனர்.
ஓ. பன்னீர்செல்வம்: பா.ஜ.க எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறது, அதையே நாங்களும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ரஃபேல் வாட்ச்சுக்கான பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்திய நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, டீக்கடையில், ரஃபேல் பற்றி பேசுகிறார்களோ அப்போது பில் வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “சமுதாய வளர்ச்சி குறியீட்டில் புதுச்சேரி 100-க்கு 65.99% பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. வீட்டுவசதி, குடிநீர் மேலாண்மை, துப்புரவு, போன்ற சமுதாய வளர்ச்சி குறியீட்டில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது” என்று கூரினார்.
சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் பேட்டி அளித்தார். அதில், “பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்; பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
வாரந்தோறும் புதன்கிழமை, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், ஐ.ஜி.க்கள், எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 11 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டதாக அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன் என ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு.
தெற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்பட 6 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையின் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிடலாம் என்று பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 24ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிடலாம் .
எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, ஓபிஎஸ்ஸிடம் இருப்பது தொண்டர் படை – ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் பேச்சு
தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னையில் மட்டும் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம்
கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது
ஆலோசனையில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
அடிப்படை ஆதரமற்ற முறையில் மனுத்தாக்கல் என கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
புதுச்சேரியில் தமிழை அழிக்க ஆளுநர் தமிழிசை முயற்சி செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் வந்தால் தமிழ் பாடம் இருக்காது. தமிழிசை முதல்வர் ரங்கசாமியை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என நாராயணசாமி குற்றச்சாட்டு
“எப்போதும் அமைதியுடனும் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறேன்”
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது என அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள். வரலாற்று சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி – ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஒடிசாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சென்னையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ஓ.பி.எஸ் வருகை
திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி மரணம்
கடந்த 18-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர்
கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் ஆஜர்
சென்னையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆட்டம் பாட்டத்துடன் ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் ஆதரவாளர்கள்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் ரேவதி சாட்சியத்தால் திருப்பம் சம்பவத்தின் போது காவல்நிலையத்தில் இல்லை என ஆய்வாளர் ஸ்ரீதர் வாதம் காவல்நிலையத்தில் தான் பணியில் இருந்தார் என காவலர் ரேவதி சாட்சியம் . வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை