Advertisment

Tamil News Highlights: தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

Tamil Nadu News, Tamil News Updates, World cup 2023, Israel- Hamas War, Bangaru Adigalar passes away, Chennai Rains– 20 October 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
20 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 21, 2023 07:03 IST
New Update
Chennai-Rain

Tamil News Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது. அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆவினுக்கு கடந்த ஆண்டை விட 20 சதவீத கூடுதல் ஆர்டர்: மனோ தங்கராஜ்

“தீபாவளிக்கு ஆவினின் கடந்த ஆண்டை விட 20% ஆர்டர்கள் கூடுதலாக வந்துள்ளன. இது மேலும் அதிகரிக்கும்.

ஆவின் நிர்வாகத்தில் செலவினங்களை குறைத்து சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் கடந்த மாதம் ₹42 லட்சம் சேமிக்கப்பட்டது” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஊட்டியில் தெரிவித்தார்.

வால்பாறை: ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு



கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சுங்கம் சோலையார் ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்தனர். தற்போதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தெலங்கானா: தோசை சுட்ட ராகுல் காந்தி

தெலங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போத அங்குள்ள உணவகம் ஒன்றில் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பில்லை : டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியுடன் எக்காரணத்தைக் கொண்டும் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அடிகளார் உடலுக்கு அண்ணாமலை அஞ்சலி

பங்காரு அடிகளார் உடலுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்

ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து அக் 25-ல் அடுத்தக்கட்ட ஆலோசனை

ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து வரும் அக்டோபர் 25-ந் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அடுத்க்கட்ட ஆலோசனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் லியோ சாதனை

இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் லியோ படம், வெளியான ஒரே நாளில், ₹5 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வேறெந்த இந்திய படமும் ஒரு நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என படத்தின் வெளியீட்டு நிறுவனம் தகவல்!

நீதிபதியுடன் மோதல்-காமெடி நடிகர் கைது

நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காமெடி நடிகர் ஜெயமணி , அவரது நண்பரை கிண்டி போலீசார் கைது செய்தனர்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் 30ம் தேதி கூடுகிறது

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் வரும் 30ம் தேதி கூடுகிறது; காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிப்பு . நீதிமன்ற காவலை நவம்பர் 6 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு . சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு

அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் நிலையில் புயலாக உருவாக வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

 செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை

அபாய எச்சரிக்கை ஒலியுடன் அனைவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை அவசரகால தகவல் தொடர்பு அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை.

ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் தகுதி நீக்க செய்ய கோரி தங்க தமிழ்ச்செல்வனின் மனு . .பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விஷாலின் உதவியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்ற விவகாரம். விஷாலின் உதவியாளர், மேனகா ஜுஜூ ராமதாஸ், ராஜன் உள்ளிட்ட தரகர்களிடம் 2வது நாளாக மும்பை சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

 மேல்மருவத்தூர், பங்காரு அடிகளார் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் .பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

பங்காரு அடிகளார் மறைவு: ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்

பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனிடம் தொலைபேசி மூலமாக ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்

பிளாஸ்டிக் தடை: தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் - உச்சநீதிமன்றம் . தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி . பேப்பர் கப்புகள் மீதான தடை உத்தரவை மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தல்

 நடிகை ஜெயப்பிரதா சரணடைய உத்தரவு

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₨20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் உத்தரவு

 பங்காரு அடிகளார் மறைவு: வைரமுத்து இரங்கல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660 ஆகவும் விற்பனையாகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ங்காரு அடிகளார் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 

ங்காரு அடிகளார் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்- Credit Sun News Twitter 

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கக்கூடும். கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசுகிறது.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு           

மாரடைப்பால் காலமான மேல்மருத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பங்காரு அடிகளார் உடலுக்கு 3 முதல்வர்கள் இன்று அஞ்சலி

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார்

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். - இந்திய வானிலை ஆய்வு மையம்

பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவம் மூலம் பலருக்கு நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும், அவரது குடும்பத்துக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி இன்று (அக்:20) மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

2வது இடத்தில் நீடிக்கும் இந்திய அணி

2023 உலக கோப்பை தொடர் புள்ளிப் பட்டியல்: 8 புள்ளிகளுடன் 2வது இடத்திலேயே நீடிக்கிறது இந்திய அணி. அதே 8 புள்ளிகளுடன் இருக்கும் நியூசிலாந்து அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

நடப்பு உலககோப்பை தொடரில், இந்த 2 அணிகள் மட்டுமே எந்த போட்டியிலும் தோற்காமல் விளையாடி வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment