/indian-express-tamil/media/media_files/E36vrTdbPxP5kGRd9ic2.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
மேகலாய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடநாடு விவாகாரத்தில் பத்திரிகையாளருக்கு எதிராக வழக்கு: கோர்ட்டில் ஆஜராக விலக்கு கோரும் இ.பி.எஸ்
கோடநாடு விவாகாரத்தில் பத்திரிகையாளருக்கு எதிராக வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவடில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு, பிறருக்கு சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலக்கு தர வேண்டும்; வீட்டில் இருந்தே சாட்சியம் அளிக்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் மனுவில் கோரியுள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இருவர் கைது
மேட்டுப்பாளையம் நகராட்சிக் கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீசிய தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நடிகை கெளதமி புகார்: அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
நடிகை கௌதமி கொடுத்த நிலமோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை முன்கூட்டிய வரவு வைக்க நடவடிக்கை
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான தொகை தீபாவளிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது, வழக்கமாக 15-ந் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இந்த மாதம் தீபாவளி நவம்பர் 12-ந் தேதி வருவதால், 10-ந் தேதி வரவு வைக்க நடவடிக்கை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக பிரமுகர் சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு
பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
பெண் தொழிலாளர்கள் அடையாள அட்டை வைத்து மோசடி
பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை என GST இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் GST சான்றிதழை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அரசு பேருந்தில் அம்பை நீதிமன்றம் செல்லும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி
தென்காசி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். அரசு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ இந்தியன் 2’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை நாளை மாலை 5.30க்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சாவூரில் வரும் 4-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு; நவம்பர் 16-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
பாஜக சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு.
வங்கி ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
ஆந்திர மாநிலம் கோதாவரியில் பட்டப்பகலில் வங்கி ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு நரசாபுரம் போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புதுச்சேரி அரசு அறிவிப்பு காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி .
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்
இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது - அதில் திமுகவின் பங்கு மகத்தானது; ஸ்டாலின்
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல: நாட்டு மக்களின் விடுதலைக்காக
"நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல! நாட்டு மக்களின் விடுதலைக்காக!" "சிஏஜியால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவின் கைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவோம்" நாளைய இந்தியா நம் வசமே: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு
ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கண்டெடுப்பு உயிரிழந்த மருத்துவ மாணவர் மதனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆவினில் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டம்
ஆவின் நிறுவனத்தில் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டம். டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள் 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் ஆரஞ்சு நிறம் - 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும் - ஆவின்
கட்சி தொடங்க விஜய்-க்கு கனவு -சீமான்
அரசியல் கட்சி தொடங்க நடிகர் விஜய்-க்கு கனவு - அவருக்கு எனது வாழ்த்து. நடிகர் விஜய் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டியது தட்டிக்கொடுப்பது மட்டுமே - சென்னை, போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
யாரோடும் கூட்டணி இல்லை- சீமான்
யாரோடும் கூட்டணி இல்லை எங்களோடு யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த பிறகு விஜயகாந்த் சரிவை சந்தித்தார் - சீமான்
உலகக் கோப்பையில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக நாடு திரும்ப உள்ள மிட்செல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி - தொழிற்கல்வி இணை இயக்குனர்
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி - யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.
நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கு வாபஸ்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ். வாபஸ் பெற்றதால் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு
நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, மாணவர் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது - உயர்நீதிமன்றம்
வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு
சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு. வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது, புதிய கட்டண உயர்வு
சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம். கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்வு. கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்வு
'தென்னாட்டு ஜான்சி ராணி' - கடலூரில் அஞ்சலை அம்மாள் சிலை திறப்பு
கடலூர் மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை. அஞ்சலை அம்மாள் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.
கருவை சுமந்தபடி போராடி சிறை சென்றவர் அஞ்சலை அம்மாள் 'தென்னாட்டு ஜான்சி ராணி' என காந்தியடிகளே வியந்த துணிச்சல் மிக்கவர் அஞ்சலை அம்மாள்
ஆளுநருக்கு எதிராக கேரள அரசு மனு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல்
8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன - கேரள அரசு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம் - கேரள அரசு
மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் - கேரள அரசு கோரிக்கை
தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
11.85 லட்சம் பேர் மேல்முறையீடு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடக்கம். தகுதியானவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் - தமிழக அரசு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான நல விடுதிகள்- உணவுத் தொகை உயர்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ₹1,000-ல் இருந்து ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
97%க்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டது
நாட்டில் புழக்கத்தில் இருந்த 97%க்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது- ரிசர்வ் வங்கி
அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல்
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
CGST – ரூ. 30, 062 கோடி
SGST- ரூ. 31,171 கோடி
IGST- ரூ.91,315 கோடியும் வசூல் ஆகியுள்ளது. இது 2வது அதிகபட்ச வசூல் ஆகும். கடந்த ஏப்ரலில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது.
பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா மரணம்
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். 1975ம் ஆண்டு 'மேல்நாட்டு மருமகள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஆவார்
சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்
சென்னையில் வரும் 4 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமலாகிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
பணயக்கைதிகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்திய இஸ்ரேல்
டெல்லியில் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கான தொலைக்காட்சி திரையிடலில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் கடந்த அக். 7 ஆம் தேதி நட த்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சி வீடியோக்களை இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஹமஸால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.
குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த கனமழை அடுத்து குற்றாலம் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜர்
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜர் ஆகிறார். அவர் கைது செய்யப்பட்டால் கட்சியும் ஆட்சியும் சிறையில் இருந்தே இயக்கப்படும் சூழல் அங்கு உருவாகி உள்ளது.
இண்டிகோ விமானத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்
மிசோரம் செல்லும் இண்டிகோ விமானத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து அறிவிப்புகள் காட்சிபடுத்தப்பட்டது. நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பயணிகள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தேர்தல் ஆணையம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது எல்லாமே தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.