Advertisment

Tamil News Today: வைகை அணையின் நீர்மட்டம் 66 அடி உயர்வு: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Tamil Nadu News, Tamil News LIVE, World Cup 2023, Chennai Rains, Nepal Earthquake, Minister EV Velu IT Raid– 04 November 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ச

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடி நடவடிக்கை

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 845 மோட்டார் பம்புகள், 446 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது" - சென்னை மாநகராட்சி

நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற நபர் கைது

ஒன்றிய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற மாங்காட்டை சேர்ந்த நாகசுப்பிரமணியம் என்பவர் கைது!

காவல் ஆணையரை போனில் தொடர்பு கொண்டு ஒன்றிய அரசின் நிதித்துறை இணை செயலர் பேசுவதாக பேசியுள்ளார். மத்திய குற்றவியல் ஆவணங்கள் மோசடி தொடர்பான புகாரின் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துங்கள் எனவும், நாகசுப்பிரமணியம் என்பவரை அனுப்பி வைக்கிறேன், அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சொல்லி அனுப்புங்கள் எனவும் ஆணையரிடம் கூறியுள்ளார்!

செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது தமிழ்நாட்டு எண் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது, நாடகமாடியதை நாகசுப்பிரமணியன் ஒப்புக் கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

ஒட்டன்சத்திரம் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் : மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

"திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு சார்பில் ₹11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை, விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்" என வேடசந்தூரில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி! 

மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழைநீரை அகற்றும் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியோடு இணைந்து 350 நீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது! வழித்தடம் மூன்றில் 145, வழித்தடம் நான்கில் 102, வழித்தடம் ஐந்தில் 103 என மொத்தம் 350 நீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது!

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து ராணுவ வீரர் ஒருவர் பலி

கேரளா, கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. கடற்படை தலைமையகத்தின் ஐ.என்.எஸ். கருடா ஓடுபாதையில் சேதக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் பலியான நிலையில் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.

வடகிழக்கு பருவமழை - பணியில் 23000 ஊழியர்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் பணியாற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மண்டல அலுவலர்கள் தலைமையில் வார்டுக்கு 10 ஊழியர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில பகுதிகளில் மழை நீரை அகற்றுவது சவாலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு. சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது : மா.சுப்பிரமணியன்

“தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது.. மழைக் காலம் என்பதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

லிஃப்டில் சிக்கி முதியவர் பலி

ஈரோட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் கை சிக்கி துண்டானதில் சுப்பரமணி என்பவர் உயிரிழப்பு. இஸ்திரி வேலைக்காக துணிகளை வாங்க சென்ற போது விபரீதம்

14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் 

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக புதிய மோசடி

குறைந்த விலையில் பட்டாசுகளை தருவதாக ஆன்லைனில் புதிய மோசடி. கடந்த ஒரு மாதத்தில் மோசடி புகாரில் 25 வழக்குகள் பதிவு

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தல். மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் 

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை. நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை- 2 பேர் சரண்

தூத்துக்குடியில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண். கருப்பசாமி, பரத் விக்னேஸ்குமார் ஆகிய இருவர் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த மாரிச்செல்வம், கார்த்திகா காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் வெட்டி படுகொலை. எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் பெண் வீட்டார் கொலை செய்தது விசாரணையில் அம்பலம். பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. 

கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் இ.டி சோதனை

தாளக்குடி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. மிதவை இயந்திரம் உதவியுடன் அளவிடும் பணிகள் தீவிரம். அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் மணல் அள்ளப்பட்டதா என்பதை கண்டறிய அளவிடும் பணி அமலாக்கத்துறை அடுத்தடுத்த சோதனை - கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு

அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்படும் போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த புகாரில் அமர் பிரசாத் ரெட்டி கைது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு 

அபிராமி ராமநாதனிடம் விசாரணை

பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை. அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

அபிராமி ராமநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி. அபிராமி ராமநாதனை விசாரணைக்காக அழைத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்

நேற்று மாலை 4 மணி முதல் கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் சோதனை. அபிராமி ராமநாதன் கட்டிவரும் வணிக வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது

கனமழையால் மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும்

கனமழையால் மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்.

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம். 

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் உள்ளிட்ட செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களை பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை. அனைவரும் களத்தில் மக்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

மழைநீர் வடிகால் பணிகள் 98% நிறைவு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு. தண்ணீர் தேங்கினால், ஒரு மணி நேரத்தில் அகற்றும் பணி நடைபெறும். 2,000 மெட்ரொ வாட்டர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். குடிநீருடன் கழிவுநீர் கலக்காதவாறு பணிகள் மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து 

மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி  வரையிலான மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மலை ரயில் சேவை ரத்து. 

மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது தாக்குதல். மீன்பிடி உபகரணங்கள், வலைகளை அபகரித்து சென்ற இலங்கை கடல் கொள்ளையர்கள்

தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45, 720க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,715-க்கும் விற்பனை ஆகிறது.

நேபாளம் நிலநடுக்கம்- பிரதமர் மோடி ஆதரவு

நேபாளம் நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த நேரத்தில் இந்தியா நேபாளத்துடன் துணை நிற்கிறது.

அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – பிரதமர் மோடி

கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது நாளாக அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து

கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் ரயில் பாதையில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேபாள நிலநடுக்கம்- உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது.

9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தேனி , மதுரை, சிவகங்கை சென்னையில் பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்        

நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பலமான நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னையில் வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு

சென்னையில் வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு இன்று முதல் அமலாகிறது. ஆட்டோக்களுக்கு 40 கி. மீட்டரும், டூவிலருக்கு 50 கி. மீட்டரும் வேகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை, திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான 40 இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment