/indian-express-tamil/media/media_files/RwGlW1tiEYn1V5SBMa66.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
சாதனை படைத்த வீரர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
ஆசிய போட்டிகளில் முதன்முறையாக 107 பதக்கங்களை குவித்து சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 தங்கம் உட்பட 22 பதக்கங்களை தமிழக வீரர்கள் குவித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சாதனை இளைஞர்களை விளையாட்டுத்துறை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 198 பேர் பலி, 1610 பேர் காயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பரந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலின் பதிலடியில் பிரதேசத்தில் குறைந்தது 198 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 1,610 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அட்டாக்: 100 இஸ்ரேலியர்கள், 200 பாலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் வரை கொல்லப்பட்டனர்.இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், அந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனர்கள் வரை உயிரிழந்திருக்க கூடும் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
காஸா மீது தாக்குதல் தொடங்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனர்களின் திடீர் தாக்குதலுக்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் பெரும் தாக்குதல்களை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
காவிரி விவகாரம்: திங்கள்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் (அக்.9) தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார்.
திங்களன்று சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: ஐ.நா கண்டிப்பு
ஐ.நா. மத்திய கிழக்கு அமைதி தூதர் டோர் வென்னஸ்லேண்ட் சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இது ஒரு ஆபத்தானது. அதிகபட்ச கட்டுப்பாட்டு தேவை” என வலியுறுத்தினார். மேலும், பொதுமக்களைப் பாதுகாக்க அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 107 பதக்கங்கள் பெற்ற இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது. இந்தியா இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என 107 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று மட்டும் நமது வீரர்கள் இன்று மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றனர்.
இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிக்குழு ராக்கெட் குண்டுகளை பொழிந்து தாக்குதல் நடத்தியதில் 22 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தொடர் நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 முறையே பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் போர் எதிரொலி; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ520 உயர்வு
இஸ்ரேல் போர் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,370க்கும், ஒரு சவரன் ரூ.42,960க்கும் விற்பனையாகிறது.
அக்டோபர் 18-ல் ’லியோ’ ப்ரீமியர் ஷோ
விஜய்யின் ’லியோ’ திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது. 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல்; 22 பேர் மரணம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிக்குழு ராக்கெட் குண்டுகளை பொழிந்து தாக்குதல் நடத்தியதில் 22 பேர் மரணமடைந்துள்ளனர்
சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு; தமிழக அரசு ஆதரவு
சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், சிறுதானிய நுகர்வு அதிகரிக்கும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஆசிய போட்டிகள் - ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்றது இந்திய அணி
ஆசிய போட்டிகள் 2023ல் ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்டது. ஆப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், இறுதிப்போட்டியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஐசிசி தரவரிசையில் முன்னிலை அடிப்படையில், இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் கொலை
இஸ்ரேலின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் கொலை செய்யப்பட்டுள்ளார். 35 இஸ்ரேலிய ராணுவ வீரர்களை கைப்பற்றியதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளார். நாம் போரில் இருக்கிறோம், வெல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. தென் கொரியாவின் சோய் - வோன்கோ ஜோடியை 2 - 0 என்ற கணக்கில் இந்திய ஜோடி
வீழ்த்தியது
நாளை, நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காசாவிற்கு அருகில் உள்ள சாலைகளை இஸ்ரேலிய ராணுவம் முடக்கியுள்ளது. இதனால், காசாவில் இருந்து பாலஸ்தீனிய குடும்பங்கள் அவசர அவசரமாக வீடுகளை காலி செய்து வருகின்றனர். இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல் தொடங்கியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Israel-Palestine Conflict Live Updates
வங்கதேசத்துக்கு 157 ரன்கள் இலக்கு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 156 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்கதேசத்துக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை: 4ம் தேதி வங்கி கணக்கில் செலுதல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் 14ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வங்கிகளில் பொதுமக்களுக்கு பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. அக்.15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதியே வங்கிகளில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆப்கானில் 3 முறை நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ராக்கெட் மழை: தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ்
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மழை பொழிந்துள்ளது ஹமாஸ் தீவிரவாத இயக்கம். ஆபரேஷன் அல்-அக்சா ஃப்ளட்-ஐ அறிவித்து 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் தெற்கு, மத்திய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய மக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஆலோசனை கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கர்நாடக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்: சிறப்பு ரயில்கள் இயக்கம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்.8, 13, 18, 23, 27 ஆகிய 5 தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நாளை முதல் 100 கனஅடி உபரி நீர் திறப்பு
வெள்ள நீர் வரத்து காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை (அக்.8) 10 மணியளவில், விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர், வெள்ள நீர் போக்கி வழியாக திறக்கப்படவுள்ளது
ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் அருகே அமைந்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் டி.டி.எஃப் வாசன் ஓட்டுனர் உரிமம்10 ஆண்டுகளுக்கு ரத்து
டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை, 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் டி.டி.எஃப் வாசன், கைதாகி புழல் சிறையில் உள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்
3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்கனுக்கு சொந்தமான ஹோட்டல், கல்லூரிகளில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்
சென்னை, கிளாம்பாக்கத்தில் ₹20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியது.
3 நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக இது அமைய உள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முழு செய்தியும் படிக்க: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக 100 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
சிக்கிம் வெள்ளப்பெருக்கு
சிக்கிம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 15 ராணுவ வீரர்கள் உட்பட 143 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்
வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 87 சதவீத நோட்டுகள் மட்டுமே திரும்பி வந்துள்ளதாகவும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வரவில்லை எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.