Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
புதிதாக 7.35 லட்சம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை; சென்னையில் விழா
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர். இந்தப் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை நாளை (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையிலும், இதர மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையிலும் நாளை (10-11-2023) நடைபெறும்.#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu pic.twitter.com/J6cd6LzVVO
— TN DIPR (@TNDIPRNEWS) November 9, 2023
தாம் பயின்ற கல்லூரிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய வீரமுத்துவேல்
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர் பயின்ற 4 கல்லூரிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியை பகிர்ந்து அளித்துள்ளார்.
இது தமிழ்நாடு அரசு அளித்த பரிசுத் தொகை ஆகும். கடந்த 2ம் தேதி தமிழகத்தில் படித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: வழிப்பறி கொள்ளையன் காயம்
மதுரை தபால் தந்தி நகரில் வழிப்பறி கொள்ளையன் ஸ்டீபன் ராஜா என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்த ஸ்டீபன் ராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கல்லூரி மாணவர் ராகிங் - முதல் தகவல் அறிக்கை வெளியானது
கோவையில் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. சீனியர்கள் பணம் கேட்டால் இல்லை என சொல்லுவியா என்று சொல்லி தாக்கியதாகவும் 5 மணி நேரம் வெளியே விடமால் இரவு 11.30 மணி முதல் காலை 4 மணி வரை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானது. இதில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்! தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்! அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலுறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்! தீக்காயங்களுக்கான மருந்துகளையும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்!
மதுரையில் நீர் தேங்காத சாலைகளே இல்லை - ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் நீர் தேங்காத சாலைகளே இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் கூட நீர் தேங்கியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்
நடிகர் சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை; ரஞ்சனா நாச்சியார்
நடிகர் சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை என அரசு பேருந்தில் மாணவர்களை அடித்ததற்காக கைதான நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.
ஒமீகிள் வீடியோசாட் தளம் மூடல்
90ஸ் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த ஒமீகிள் வீடியோசாட் தளத்தை மூடுவதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார்
பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் மொத்த இடஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கும். அண்மையில் நடத்தப்ப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு உயர்வை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்ததன் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையே நாளை பேச்சுவார்த்தை
இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சு கடிதம்
முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு காலியாக உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
திமுக அரசு அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திமுக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்தார்.
சென்னையில் பரவலாக மழை பெய்ந்து வருகிறது
சென்னை, திருவொற்றியூர், மாதவரம், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: கார் மோதி தூய்மை பணியாளர் பலி
திருவான்மியூரில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவர், எதிர் சாலையில் வந்த லாரி மோதி உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில், கார் ஓட்டுநர் அஸ்வந்த் கைது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் தீவிர விசாரணை
சந்திரசேகர ராவ் வேட்பு மனுத் தாக்கல்
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: கஜ்வேல் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
உயர் நீதிமன்றங்களிடமே விட்டுவிடுகிறோம்
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரிய வழக்கு. விரைந்து விசாரிக்க ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் சிரமம் - உச்சநீதிமன்றம்
இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றங்களிடமே விட்டுவிடுகிறோம். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த மனுதாரர் கோரிக்கை
சிறப்பு நீதிமன்றங்களை உயர்நீதிமன்றங்கள் உருவாக்கி, தேவைக்கேற்ப வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் - உச்சநீதிமன்றம்
17 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
5 மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது.
சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,615 ஆகவும் விற்பனை ஆகிறது.
ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்- ராமதாஸ்
கோத்தகிரியில் அதிக மழைப் பொழிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 23 செ.மீ அதி கனமழை பதிவாகி உள்ளது.
காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்
கோவை: ஆலந்துரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கருப்பன் (73) என்ற முதியவரை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
தீபாவளி பண்டிகை: 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக (TANTEA) தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இணையாக TANTEA தொழிலாளர்களுக்கும் திருத்தி அமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438 வழங்கிடவும் உத்தரவு.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு ரத்து, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நவம்பர் 9) தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் லாரிகள் ஒடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை: 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி,திருப்பூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, மழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.