Advertisment

Tamil News Highlights: இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் முதல்கட்டமாக மீட்பு

Tamil Nadu News, Tamil News LIVE, World Cup 2023, Leo Movie Vijay, T.N. Assembly, Cauvery water issue – 12 October 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
news

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ்

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, போராட்டத்துக்கு பதிலாக விளக்க கூட்டம் நடைபெறும் எனவும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் போல் ஹமாஸ்: பெஞ்சமின் நேதன்யாகு

“ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் போல் ஹமாஸ் பயங்கரவாதிகளும் நசுக்கி எறியப்பட வேண்டும். எந்த நாட்டு தலைவர்களும் ஹமாஸை சந்திக்க கூடாது. மீறியும் சந்தித்தால் அந்த நாட்டு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல் வழக்கில் யூடியூபர் ரவுடி பேபி சூர்யா கைது

மதுரையைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், யூடியூப் பிரபலங்களான சுப்புலெட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

டமாஸ்கஸ், அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்

இஸ்ரேலியப் படைகள் டமாஸ்கஸ், அலெப்போ விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 'நாங்கள் இங்கே இருக்கிறோம், எங்கும் செல்லவில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுக்கு உறுதியளித்துள்ளார்.

இஸ்ரேல் நெருக்கடிக்கு மத்தியில் உற்று கவனிக்கப்படும் எண்ணெய் சந்தை

இந்த வார இறுதியில் இஸ்ரேலில் நடந்த நிகழ்வுகளுக்கு உலகம் எதிர்வினையாற்றியதால், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 5% அதிகரித்து $89 அமெரிக்க டாலராக (€83) இருந்தது. சாத்தியமான விநியோகச் சிக்கல்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், விலைகள் பின்னர் குறைந்தன.

இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லை, ஆனால் மத்திய கிழக்கில் மோதல்கள் விரிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் நிபுணர்களை உலுக்கியுள்ளது. இது ஒரு பரந்த மோதலாக மாறி, அது எண்ணெய் விலையை உயர்த்தினால், அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி கீதா கோபிநாத் ப்ளூம்பெர்க்கிடம் கூறினார். "இது பொதுவாக உலகளாவிய எண்களை பாதிக்கும் சேனல்களில் ஒன்றாகும்."

பிளிங்கனின் இஸ்ரேல் வருகையின் நோக்கம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் பல நாடுகளின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணம், ஹமாஸை ஆதரிக்கும் ஈரானுக்கு மோதலில் ஈடுபட வேண்டாம் என்று ஒரு தடுப்புச் செய்தியை அனுப்பக்கூடும்.

வாஷிங்டனின் உயர்மட்ட இராஜதந்திரி, ஹமாஸால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க உதவ முயற்சிப்பார், சிலர் அமெரிக்கர்கள் என்று கருதப்படுவார்கள், மேலும் இஸ்ரேலியர்கள் மற்றும் எகிப்தியர்களுடன் காசா குடிமக்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவது குறித்து இஸ்ரேலிய தரைப்படை ஆக்கிரமிப்புக்கு முன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்துவார்.

ஆ. ராசாவுக்கு சொந்தமான இடத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைப்பு

கோவை, திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவுக்கு சொந்தமான ரூ. 5.85 கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் இடத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது. சட்ட விரோத, பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆ. ராசாவின் 15 பைசா சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், சீல் வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ரஃபா எல்லையை கடந்து செல்பவர்களைத் தாக்க வேண்டாம்; இஸ்ரேல் அரசுக்கு எகிப்து வேண்டுகோள்

ரஃபா எல்லையை கடந்து செல்பவர்களைத் தாக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து எகிப்து செல்லும் பாதையாக ரஃபா எல்லை இருக்கிறது. போர் காரணமாக பாலஸ்தீனத்தில் 1,354 பேரும் இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோருக்கான உயிரிழந்தனர்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று விமானம்  இஸ்ரேல் செல்கிறது - வெளியுறவுத் துறை தகவல்

இஸ்ரேல் நாட்டிலிருந்து இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டுள்ளது. 230 இந்தியர்களை மீட்க முதல் விமானம் இன்று (அக்டோபர் 12) மாலை டெல் அவிவ் சென்றடையும்; நாளை காலை இந்தியா திரும்பும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்த பாக்சி தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானோ பாலியல் ஒத்திவைப்பு

பில்கிஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உள்பட 25 பேர் கைது. ₨60 லட்சம் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

லெபனான் செல்கிறார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லஹியான் லெபனான் செல்கிறார்.  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு. இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என ஆண்டனி பிளிங்கன் உறுதி

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க "ஆபரேஷன் அஜய்" : மத்திய அமைச்சர் ஆலோசனை

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் "ஆபரேஷன் அஜய்"திட்டம் குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்,

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமின் மனு தள்ளுபடி

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமின் கோரி மனு மீது நடைபெற்ற விசாரணையில், ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன், சுற்றுலாத்துறை செயலாளராக கார்கலா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிணையக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது: இஸ்ரேல் 

பிணையக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவுக்கு மின்சாரம் வழங்கமாட்டோம்- இஸ்ரேல். இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.

நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி: வழக்கின் விசாரணை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைப்பு

 லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஏன் இன்னும் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி. 2021ம் ஆண்டில் ரூ80 கோடிக்கு விஷால் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். வேண்டுமென்றே எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தராமல் உள்ளார் என லைகா தரப்பு வாதம். பணத்தை செலுத்த தயாராக உள்ளோம். லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என விஷால் தரப்பு வாதம். வழக்கின் விசாரணை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைப்பு

 திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - SETC அறிவிப்பு

 இஸ்ரேலில் இருக்கும் 114 பேர் தமிழக  அரசிடம் உதவி கேட்டுள்ளனர்

"இஸ்ரேலில்  தங்கி இருக்கும் தமிழர்களில் 114 பேர் தமிழக  அரசிடம் உதவி கேட்டுள்ளனர்". வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் .

 குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரனை

சென்னையில் இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள். குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரனை.

 அடமானம் வைத்த நகையை கால அவகாசமின்றி ஏலம் விட்டதாக வாடிக்கையாளர் வழக்கு.

வேலூரில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத வங்கி மேலாளர்களுக்கு பிடிவாரண்ட். வாடிக்கையாளர் அய்யாசாமி தொடர்ந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அடமானம் வைத்த நகையை கால அவகாசமின்றி ஏலம் விட்டதாக வாடிக்கையாளர் வழக்கு.

 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

 ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளரின் வீடு உட்பட 2 இடங்களில் சோதனை. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை

2012 முதல் 2016ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நடவடிக்கை

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ரெய்டு

சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை. சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், கோவையில் வருமான வரித்துறை சோதனை. சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 

மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை. கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அக்டோபர் 7-ம் தேதி வரையாடு நாள்- ஸ்டாலின்

சென்னை, தலைமை செயலகத்தில் நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம். வரையாடு உருவ கல்வெட்டையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு நாள் அனுசரிக்க நடவடிக்கை

விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான விவசாயிகள், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததை கண்டித்து போராட்டம் ஏராளமான விவசாயிகள், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம். ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல்

அமைச்சர் பொன்முடி நிறுவனத்தில் கொள்ளை

அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் கொள்ளை. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கொள்ளை சம்பவம்.

நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே இருந்த 2 லாக்கர்களை தூக்கி சென்ற மர்ம நபர்கள். இரு லாக்கரிலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயங்கள் கொள்ளை. லாக்கரை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

என்கவுன்ட்டர்: ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆய்வு 

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்  கொல்லப்பட்ட சம்பவம். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு. குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது, போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக் கருதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. குற்றவாளிகளால் தாக்கப்பட்ட 3 போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி"- சங்கர், ஆவடி மாநகர காவல் ஆணையர்

காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது

காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது.

நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 43,280க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,410-க்கும் விற்பனை ஆகிறது.

செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம்

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்

கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கொரோனா  தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது.

சி.பி..யின் சிறப்பு இயக்குநராக டி.சி. ஜெயின் நியமனம்

சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் டி.சி. ஜெயினை,  சிபிஐயின் சிறப்பு இயக்குநராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

பொறுப்பேற்ற தேதியிலிருந்து (அக்டோபர் 31, 2023) ஓய்வுபெறும் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டாசு ஆலை விபத்து- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பட்டாசு உறுப்பத்திக்கு தடை விதிக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

பீகாரில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்து- 4 பேர் உயிரிழப்பு

பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு, வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் A+ ரவுடியை சுட்டு பிடித்தது போலீஸ்

செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி தணிகாவை போலீஸ் சுட்டுப் பிடித்தது. படுகாயமடைந்த தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பெரியபாளையத்தைச் சேர்ந்த தணிகா என்ற தணிகாசலம் மீது கொலை, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி ஐஏஎஸ், கரூர் ஆட்சியராக தங்கவேல்  ஐஏஎஸ், திருவள்ளூர் ஆட்சியராக பிரபுஷங்கர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment