இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்ட பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்தடைந்தார்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:58 (IST) 25 Aug 2023சந்திரயான் 3ன் மாபெரும் வெற்றிக்கு இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் : பிரதமர் மோடி
நிலவில் இந்திய தேசிய கொடியை பதித்ததன் மூலம் இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்" "சந்திரயான் 3ன் மாபெரும் வெற்றிக்கு இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" கிரீஸ் நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
- 22:55 (IST) 25 Aug 2023உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடந்த சுவாரஸ்யம்!
35 கி.மீ நடை போட்டியை, ஸ்லோவக்கிய வீராங்கனை நிறைவு செய்யும் போது, எல்லை கோட்டின் அருகே மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார் டொமினிக் செர்னி; அவரது காதலை ஹனாவும் ஏற்றுக்கொண்டார்; இவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!
- 21:08 (IST) 25 Aug 2023மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு!
"வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்" முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு!
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிப்பார்கள். அருமையான திட்டம்" - விஜய் ஆண்டனி, நடிகர் & இசையமைப்பாளர்
- 20:05 (IST) 25 Aug 2023உச்ச நீதிமன்றத்துக்கு 2 நாள்கள் விடுமுறை அறிவிப்பு
உச்சநீதிமன்றத்திற்கு வருகிற செப்டம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், ஜி20 மாநாடு நடைபெறுவதால் விடுமுறை
அறிவித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
- 19:47 (IST) 25 Aug 2023போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : மு.க.ஸ்டாலின்
"போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
- 19:35 (IST) 25 Aug 2023இது ஏகலைவனின் காலம்: முதலமைச்சர் M K ஸ்டாலின்
“தேசிய கல்விக் கொள்கை, நீட் பெயரில் தடுப்பு சுவர் போடுகிற துரோணாசாரியர்கள் உள்ளனர்; இது துரோணாச்சாரியரின் காலம் அல்ல, ஏகலைவனின் காலம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 19:07 (IST) 25 Aug 2023பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சி? கவர்னர் பகிரங்க எச்சரிக்கை
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான், ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இடையே மோதல் உச்சக் கட்டம் எட்டியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்; கடிதங்களுக்கு ஒழுங்காக பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:42 (IST) 25 Aug 2023நிலவின் மண், பாறை ஆய்வு
நிலவில் உள்ள மண் மற்றும் பாறைகளின் தன்மைகளை ஆராயக் கூடிய கருவிகள், செயல்பாட்டை தொடங்கியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
- 18:25 (IST) 25 Aug 2023நாகப்பட்டினம் மாணவர் மரணம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
நாகப்பட்டினம் மாணவர் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் அண்ணாமலை கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதில், “மாணவரின் மரணத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில், விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, நான்கு மணி நேரம், மைதானத்தில் வெயிலில் நிறுத்தி வைத்துள்ளனர். வெயில் தாங்க முடியாமல், 12ஆம் வகுப்பு படிக்கும் ரிஷி பாலன் என்ற மாணவர், மைதானத்திலேயே மயங்கி விழுந்து…
— K.Annamalai (@annamalai_k) August 25, 2023 - 18:25 (IST) 25 Aug 2023நாகப்பட்டினம் மாணவர் மரணம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
நாகப்பட்டினம் மாணவர் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் அண்ணாமலை கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதில், “மாணவரின் மரணத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில், விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, நான்கு மணி நேரம், மைதானத்தில் வெயிலில் நிறுத்தி வைத்துள்ளனர். வெயில் தாங்க முடியாமல், 12ஆம் வகுப்பு படிக்கும் ரிஷி பாலன் என்ற மாணவர், மைதானத்திலேயே மயங்கி விழுந்து…
— K.Annamalai (@annamalai_k) August 25, 2023 - 18:09 (IST) 25 Aug 2023அதிமுக மாநாட்டை கலாய்த்த ஓ.பி.எஸ்
மதுரை அதிமுக மாநாடு ஒரே புளியோதரை கதையாகி போய் உள்ளது.
இந்த இயக்கம் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டது. தொண்டர்களின் கருத்தை அறிந்து இயக்கம் செயல்பட வேண்டும்” என்றார்.
- 17:47 (IST) 25 Aug 2023ஜி20 உச்சி மாநாட்டில் புதின்?
இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் நேரில் வந்து கலந்துகொள்ள எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல்
நேற்று முன் தினம் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டிலும் அவர் காணொலி வழியாகவே பங்கேற்றறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 17:07 (IST) 25 Aug 202320வது இடத்திற்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!
செஸ் தரவரிசை பட்டியலில் 20வது இடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. தமிழ்நாடு வீரர் குகேஷ் 8வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும் உள்ளனர்.
- 16:42 (IST) 25 Aug 2023குற்றாலம் அருவி அருகே கடைகளில் பயங்கர தீவிபத்து!
தென்காசி: குற்றாலம் அருவி அருகே அமைந்துள்ள, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16:05 (IST) 25 Aug 2023கற்றல் திறனை அறிந்துகொள்ள திறன்வழி மதிப்பீட்டு தேர்வு!
தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 15:54 (IST) 25 Aug 2023கிரிக்கெட் உலகக் கோப்பை: அறிமுகம் செய்து வைத்த நடிகை மீனா!
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், உலகக் கோப்பை பாரீஸில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா.
- 15:44 (IST) 25 Aug 2023நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜூக்கு நோட்டீஸ்!
கொடைக்கானலில் அனுமதியின்றி வீடு கட்டுவதாக புகார் எழுந்த விவகாரத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜூக்கு வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- 15:40 (IST) 25 Aug 2023வசூல் சாதனை செய்யும் ஜெயிலர்!
கடந்த 10ஆம் தேதி வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 2 வாரத்தில் ரூ.525 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 15:01 (IST) 25 Aug 2023கிரீஸ் பிரதமர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு !
கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டார் பிரதமர் மோடி.
- 14:48 (IST) 25 Aug 2023இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- 14:36 (IST) 25 Aug 2023நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 - அரசிதழில் வெளியீடு!
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த, நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டம்.
- 14:26 (IST) 25 Aug 2023மாரடைப்பால் உயிரிழந்த மாணவன்: ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலன் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடியபோது மாணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும் வேதனையும் அடைந்ததாகவும், துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- 13:52 (IST) 25 Aug 2023மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அசாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அசாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு நியாயமான விசாரணையை உறுதி செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
- 12:58 (IST) 25 Aug 2023சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2020, டிசம்பரில் நடிகை சித்ரா மரணம் அடைந்தது தொடர்பாக கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு வழக்கு விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை காமராஜ் தொடர்ந்த மனு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை
- 12:57 (IST) 25 Aug 2023ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார் விஜயகாந்த்
மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸை வெளியிட்டார் விஜயகாந்த்
- 12:51 (IST) 25 Aug 2023நலமாக இருக்கிறார்- பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்; நலமாக இருக்கிறார்"- பிரேமலதா விஜயகாந்த்
- 12:31 (IST) 25 Aug 2023அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும்
அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும்" "தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்" - பண்ருட்டி ராமச்சந்திரன்
- 11:50 (IST) 25 Aug 2023அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3 நாட்கள் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3 நாட்கள் நீட்டிப்பு . வரும் 28ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
- 11:25 (IST) 25 Aug 2023உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி
அதிமுக பலமாகவே உள்ளது; உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும்"- எடப்பாடி பழனிசாமி
- 11:24 (IST) 25 Aug 2023இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் பொதுக்குழு தீர்மானம்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- 11:01 (IST) 25 Aug 2023மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு தடை விதிக்க மறுப்பு. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 10:53 (IST) 25 Aug 2023அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- 10:50 (IST) 25 Aug 2023ஈஷா யோகா மையம் விளக்கம்
ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி சிலைக்கு அனுமதி பெறவில்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது
அனுமதிக்கான உரிய ஒப்புதல்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்போம் என, ஈஷா யோகா மையம் விளக்கம்.
- 10:16 (IST) 25 Aug 2023கிரீஸ் நாட்டுக்கு சென்றார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.
ஒருநாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- 10:15 (IST) 25 Aug 2023நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் டிரம்ப்
தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்பாக அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அப்போது சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
- 09:53 (IST) 25 Aug 2023அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
காலை உணவு மிக மிக முக்கியம்; காலை உணவு இல்லை என்றால் எப்படி கல்வி கற்க முடியும். பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லி கொடுக்ககூடாது என்பதற்காகவே இத்திட்டம்.
நீதிகட்சி ஆட்சியில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது; 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஊட்டச் சத்து வழங்கும் திட்டமாக மாற்றினார் கருணாநிதி.
ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகள் பள்ளி சென்று கல்வி பெற எதுவும் தடையாக இருக்க கூடாது. அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- 09:52 (IST) 25 Aug 2023காலை உணவுத்திட்டத்தின் முக்கிய நோக்கம்
- பசி இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்
- ஊட்டச்சத்து குறைபாட்டால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது
- ரத்தசோகை குறைபாட்டை நீக்க வேண்டும்
- மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்க வேண்டும்
- வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 09:05 (IST) 25 Aug 2023காலை உணவு விரிவாக்க திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாகப்பட்டினம்: திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.
- 09:01 (IST) 25 Aug 2023முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; சென்னை திருவல்லிக்கேணி அரசு நடுநிலைப்பள்ளியில், திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இவ்விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 09:00 (IST) 25 Aug 2023செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி, எம்.பி - எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இன்று அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- 08:59 (IST) 25 Aug 2023விஜயகாந்த் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. @iVijayakant அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) August 25, 2023
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். - 08:11 (IST) 25 Aug 2023தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த்
விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளையொட்டி கோயேம்பேட்டில் உள்ள கட்சி அலுவகத்தில் காலை 10 மணிக்கு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கிறார்.
- 07:58 (IST) 25 Aug 2023அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
- 07:58 (IST) 25 Aug 2023காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டம்
தமிழ்நாடு முழுவதும் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டம் –மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
- 07:57 (IST) 25 Aug 2023சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
முழுமையாக படிக்க
- 07:57 (IST) 25 Aug 2023இன்றைய ராசிபலன்
உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளுங்கள்.
முழுமையாக படிக்க
https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-today-friday-25-august-2023-743650/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.