/tamil-ie/media/media_files/uploads/2023/05/Amit-shah.jpg)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 20:01 (IST) 09 Jun 2023மும்பை அமெரிக்க விமானம் ரத்து
இன்று சான்பிரான்சிஸ்கோ-வில் இருந்து மும்பைக்கு இயக்கப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ஏஐ180, எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் அல்லது ரத்து செய்யப்பட்ட விமானத்திற்கான முழுப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.
- 19:58 (IST) 09 Jun 2023சஞ்சய் ராவத்தை மிரட்டியதாக 2 பேர் கைது
மராட்டியத்தின் முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே ஆதரவு தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்தை மிரட்டியதாக 2 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 19:32 (IST) 09 Jun 2023அண்ணாமலை மீது வழக்கு: வில்சன்
அண்ணாமலை வழக்கை சந்திக்கணும். பயந்து போய் ஸ்டே வாங்கக்கூடாது என திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.
- 19:21 (IST) 09 Jun 2023மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், சென்னை, எழிலகத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
அப்போது, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநில திட்டக்குழு துணை தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
- 19:00 (IST) 09 Jun 2023பாடத் திட்டத்தில் அடிப்படை சட்டங்கள்: நீதிபதி கோரிக்கை
அடிப்படை சட்டங்களை பள்ளி பாடப்புத்தகங்களில் பாடமாக கொண்டுவர வேண்டும் என பணி நிறைவு பாராட்டு விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி வலியுறுத்தி உள்ளார்.
- 18:57 (IST) 09 Jun 2023ரயில் தண்டவாளம் சேதம்: சென்னையில் இளைஞர் கைது
சென்னை திருநின்றவூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தென்னமரத்தின் கட்டை வைத்த விவகாரத்தில், பாபு (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.
- 18:44 (IST) 09 Jun 2023இந்தோனேசியாவில் புதுமண தமிழ் மருத்துவ தம்பதி உயிரிழப்பு
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவர்கள், மருத்துவர்கள் ஆன விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோர் ஆவார்கள். இவர்களுக்கு கடந்த 1ம் தேதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடந்தது.
- 18:39 (IST) 09 Jun 2023மதுரை ரயில் நிலையத்தில் புகைப்பட சூட்டுக்கு அனுமதி
மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய மேலாளர் அறிவித்துள்ளார்.
அதாவது, ரயில் நிலையத்தில் ₨5,000 செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ரயில் முன் நின்று புகைப்படம் எடுக்க கூடுதலாக ₨1,500 செலுத்த வேண்டும்.
- 18:23 (IST) 09 Jun 2023ரகானே புதிய சாதனை
இந்திய அணியில் 512 நாள்களுக்கு பிறகு இடம் பிடித்த ரகானே, 89 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்துவருகிறார்.
இவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
- 18:10 (IST) 09 Jun 2023ஜெயஸ்ரீ கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே 2020ம் ஆண்டு சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக்கொன்ற வழக்கில் அதிமுக நிர்வாகிகள் முருகன் மற்றும் யாசகம் (எ) கலியபெருமாள் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 17:49 (IST) 09 Jun 2023திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்
எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல், அக்கட்சியிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
- 17:37 (IST) 09 Jun 2023எங்கிருந்தாலும் வாழ்க; மைத்ரேயன் குறித்து ஓபிஎஸ்
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.
- 17:30 (IST) 09 Jun 2023தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- 16:43 (IST) 09 Jun 202312ஆம் தேதி வரை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் நடவடிக்கை
தமிழகத்தில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு 650 பேருந்துகளும், மற்ற இடங்களுக்கு 850 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 16:28 (IST) 09 Jun 2023தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் விளையாட்டு வீரர்கள் பாதிப்பு: அண்ணாமலை
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி…
— K.Annamalai (@annamalai_k) June 9, 2023 - 16:19 (IST) 09 Jun 2023ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிபாடுகளில் 3 பேர் பலி: 15 பேர் படுகாயங்களுடன் மீட்பு
ஜார்கண்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக அச்சம் - மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.
- 16:13 (IST) 09 Jun 2023அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பி.எஸ்., வழக்கு: திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு
இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
- 15:31 (IST) 09 Jun 2023பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை
சென்னை, தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- 14:42 (IST) 09 Jun 2023முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்
- 14:42 (IST) 09 Jun 2023வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம்
வேளாண் துறைக்கு திமுக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. டெல்டா மாவட்ட உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக தொடர்ந்து செயல்படும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை பாதுகாப்போம் டெல்டாவில் 3000க்கும் மேலான பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 14:15 (IST) 09 Jun 2023விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்
விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் திருச்சி, இருதயபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வயல் வெளியில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணி உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர்
- 13:51 (IST) 09 Jun 2023ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் இடிப்பு வரும் ஜூன் 19ம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் - ஒடிசா அரசு
- 13:32 (IST) 09 Jun 2023மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணத்தால் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தல்
- 13:31 (IST) 09 Jun 2023மகளிர் கழிப்பறைக்கு சீல்
நீலகிரி, ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் விரிவான அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- 13:31 (IST) 09 Jun 2023மது பாக்கெட்டுகள் கடத்தல் - 2 பேர் கைது
மது பாக்கெட்டுகள் கடத்தல் - 2 பேர் கைது வேலூர், காட்பாடி அருகே மாதண்டகுப்பம் பகுதியில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,496 மது பாக்கெட்டுகள் பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
- 12:44 (IST) 09 Jun 2023இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு சேவை முடங்கியது
பிரவுசரில் இன்ஸ்ட்ராகிராம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு சேவை முடங்கியது APPல் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு சேவை சீராக உள்ளது.
- 12:44 (IST) 09 Jun 2023ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை: இலவசமாக பார்க்கலாம்
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம் - ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு
- 12:23 (IST) 09 Jun 2023ரூ. 2000 : எஸ்பிஐ அறிவிப்புக்கு எதிரான மேல்முறையீடு: அவசரமாக விசாரிக்க மறுப்பு
ரூ. 2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை . எஸ்பிஐ அறிவிப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
- 11:28 (IST) 09 Jun 2023மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- 11:28 (IST) 09 Jun 2023மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம்
தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம். அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என வனத்துறை அறிவிப்பு
- 10:54 (IST) 09 Jun 2023லிவர்பூல் கால்பந்து அணி
அர்ஜென்டினா கால்பந்து வீரர் அலெக்சிஸ் மெக்காளிஸ்டர் இங்கிலாந்தைச் சேர்ந்த லிவர்பூல் கால்பந்து அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- 10:44 (IST) 09 Jun 2023மு.க.ஸ்டாலின் ஆய்வு
தஞ்சையில் 3.50 கி.மீ தூரம் கொண்ட முதலை முத்துவாரி வடிகால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- 10:13 (IST) 09 Jun 2023தங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.44,800 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5600க்கும் விற்பனையாகிறது.
- 10:11 (IST) 09 Jun 2023ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி
தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ரூ. 6.24 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
- 09:44 (IST) 09 Jun 2023மிதமான மழைக்கு வாய்ப்பு
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜாய்' புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது; அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும்.
இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 09:01 (IST) 09 Jun 2023அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம்
தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது; மீறுவோர் மீது மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000 அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
- 08:20 (IST) 09 Jun 20239.16 கோடி யூனிட்கள் மின்சாரம்
சென்னையில் முதன்முறையாக நேற்று ஒரு நாளில் 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2ம் தேதி 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட்; அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது - அமைச்சர் செந்தில்பாலாஜி ட்வீட்
- 08:05 (IST) 09 Jun 2023உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டு இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அஜிங்கியா ரஹானே 29 ரன்களும், ஶ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 318 ரன்கள் பின்னடைவில் உள்ளது.
- 08:05 (IST) 09 Jun 2023இந்திய ரயில்வே உத்தரவு
ரயில் இயக்கும் லோகோ பைலட்கள் பணி புரியும் போது மொபைல் போனை ஆன் செய்து வைத்திருக்க கூடாது. கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டுவதற்கும் லோகோ பைலட்களுக்கு தடை விதித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
- 08:04 (IST) 09 Jun 2023விவசாய கடன்
நடப்பாண்டில் 14 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சிட்டா, அடங்கல் கொடுத்து விவசாயிகள் கடன் பெறலாம் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
- 08:04 (IST) 09 Jun 2023ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், நேற்று விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.
- 08:04 (IST) 09 Jun 2023பாஜக ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் ஆலோசனை கூட்டம், டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது
- 08:03 (IST) 09 Jun 2023மேகமலைக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
அரிசிக்கொம்பன் காட்டு யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.