Advertisment

Tamil News: 22 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Local body election Latest News 23rd February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: 17 மீனவர்கள் கைது.. மீட்க கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Tamil Nadu News Updates: பிரபல மலையாள நடிகை லலிதா(74) உடல்நலக் குறைவால் கோச்சியில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி அமோக வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளிலும், 132 நகராட்சிகளிலும், 434 பேரூராட்சிகளிலும் வெற்றி கொடி நாட்டியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால், அங்கிருந்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். 242 பயணிகளுடன் இந்திய விமானம் டெல்லிக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் நீண்ட நாள்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்பனையாகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிலாந்து கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து

இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு வியாழக்கிழமை முதல் நீக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:41 (IST) 23 Feb 2022
    பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கும் நாடாக ரஷ்யா இருக்கும் என நம்புகிறேன் : உக்ரைன்

    பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கும் நாடாக ரஷ்யா இருக்கும் என நம்புகிறேன். ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பலமுறை வலியுறுத்தி உள்ளேன் என்று - உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.


  • 22:40 (IST) 23 Feb 2022
    மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள், உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை காவலில் உள்ள 29 தமிழக மீனவர்கள், 82 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


  • 22:38 (IST) 23 Feb 2022
    சிறுமியை துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை

    சென்னையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்து துன்புறுத்திய கருணாகரன் என்பவருக்கு 41 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 22:37 (IST) 23 Feb 2022
    கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

    நாகர்கோவில் தனியார் பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் அலுவலகம் கட்ட தடை விதித்து உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 22:36 (IST) 23 Feb 2022
    ரஷ்ய அதிபர் புதின் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார் - உக்ரைன்

    உக்ரைன் ஒருபோதும் யாரையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ இல்லை - ரஷ்ய அதிபர் புதின் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது தெளிவாகிறது என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.


  • 22:35 (IST) 23 Feb 2022
    வெற்றிக்காக உழைத்தவர்கள் என்னுடன் வெற்றிக் களிப்பை பகிர்ந்து கொண்டனர் - முதல்வர் ஸ்டாலின்

    நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், வெற்றிக்காக உழைத்தவர்கள் என்னுடன் வெற்றிக் களிப்பை பகிர்ந்து கொண்டனர் வெற்றி பெற்றோரின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியை கண்டபோது கால் வலியும், உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 20:16 (IST) 23 Feb 2022
    தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

    தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்றும், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


  • 20:15 (IST) 23 Feb 2022
    தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என உத்தரவு

    தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்துமாறு தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களிலும் அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  • 19:32 (IST) 23 Feb 2022
    கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து

    முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் நிர்வாகிகள், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., ஆகியோர் நேரில் சந்திப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்


  • 18:54 (IST) 23 Feb 2022
    மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வெற்றி கவுன்சிலர்கள்

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் திமுக கவுன்சிலர்கள் வாழ்த்து பெற்றனர்.


  • 18:24 (IST) 23 Feb 2022
    சென்னையில் வார்டு மறுவரையறை செய்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

    சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் சில மண்டலங்களில் 50%க்கு அதிகமாக வார்டுகள் ஒதுக்கப்பட்டதால், வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.


  • 18:20 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்

    திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


  • 17:45 (IST) 23 Feb 2022
    ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது கர்நாடக ஐகோர்ட்

    ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.


  • 17:43 (IST) 23 Feb 2022
    செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி

    செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


  • 17:25 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு

    திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  • 16:59 (IST) 23 Feb 2022
    பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா காலணி டெண்டர் வழக்குகள் தள்ளுபடி

    பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா காலணி டெண்டர்களில் புதிய நிபந்தனையை சேர்த்ததை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்காத நிறுவனங்கள் வழக்கு தொடர முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


  • 16:54 (IST) 23 Feb 2022
    திமுகவின் தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின் நன்றி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 'திராவிட மாடல்' ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி. எதிர்க்கட்சிகளை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள்; அவர்களது வாதங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்


  • 16:48 (IST) 23 Feb 2022
    இலங்கை உடனான டி20 தொடரில் இருந்து தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல்

    வெஸ்ட் இண்டீஸ் உடனான கடைசி டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை உடனான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்


  • 16:42 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு திருப்பி அனுப்பிவைப்பு

    திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்த நிலையில், முதல் தகவல் அறிக்கையை வழக்கு மனுவில் இணைக்காததால் ஜெயக்குமாரின் மனு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது


  • 16:39 (IST) 23 Feb 2022
    கடல் பகுதியின் பாதுகாப்புக்காக "மரைன் எலைட்" படை உருவாக்கம்

    கடல் பகுதியின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக 'மரைன் எலைட்' படையை நிறுவி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா மற்றும் பால்க் விரிகுடாவில் உள்ள சூழலியல் உணர்திறன் வாய்ந்த கடலோர கடல் பகுதிகளை பாதுகாக்க இந்த "மரைன் எலைட்" படை உருவாக்கப்பட்டுள்ளது


  • 16:27 (IST) 23 Feb 2022
    வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது


  • 16:25 (IST) 23 Feb 2022
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது


  • 16:23 (IST) 23 Feb 2022
    உறவினர்களுக்கு இடையேயான ஆக்கிரமிப்பு வழக்கு – ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    உறவினர்களுக்கு இடையேயான ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையதல்ல என மதுரை, சீல்நாயக்கன்பட்டி கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது


  • 16:21 (IST) 23 Feb 2022
    மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது

    சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை மும்பையில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது


  • 16:20 (IST) 23 Feb 2022
    டெல்லியில் நிர்மலா சீதாராமன் உடன் பி.டி.ஆர். நாளை சந்திப்பு

    டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நாளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஜி.எஸ்.டி மற்றும் பேரிடர் நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார்


  • 16:02 (IST) 23 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் - ஓபிஎஸ்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்


  • 15:53 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 2வது வழக்கின் ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது


  • 15:49 (IST) 23 Feb 2022
    மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

    பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இதுவரை 35 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது


  • 15:25 (IST) 23 Feb 2022
    காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

    அதிமுகவில் தலைமை இல்லாததே, அக்கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டெபாசிட் இழக்க காரணம் என்றும், காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமமாகிவிடும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்


  • 15:16 (IST) 23 Feb 2022
    1,591 கூடுதல் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

    1,591 கூடுதல் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தற்காலிகப் பணியிடங்கள் அக்டோபர் 31, 2024 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது


  • 14:40 (IST) 23 Feb 2022
    10, 12ம் வகுப்பு நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனு.. விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

    மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவற்றின் அனைத்து 10, 12ம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுவில்’ மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


  • 14:33 (IST) 23 Feb 2022
    பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியில் சேர உத்தரவு!

    கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அனைவரும் புதிய இடங்களில் மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 14:26 (IST) 23 Feb 2022
    சி.ஆர்.பி.எஃப் வீரரை கண்டுபிடிக்க கோரி மனைவி வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு!

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிய சி.ஆர்.பி.எஃப் வீரரை கண்டுபிடிக்க கோரி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில்’ சத்தீஸ்கர் காவல்துறை உதவியுடன் சி.ஆர்.பி.எஃப். வீரரை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 14:26 (IST) 23 Feb 2022
    வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்!

    சென்னை மாநகராட்சி 194வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் விமலா கர்ணா அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


  • 14:25 (IST) 23 Feb 2022
    விஜய் மல்லையா, நீரவ் மோடி வங்கிக் கடன்..

    விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோரின் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ரூ. 18,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.


  • 14:25 (IST) 23 Feb 2022
    உ.பி. தேர்தல்.. 1 மணி நிலவரம்.. 37.45% வாக்குகள் பதிவு!

    உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.


  • 13:54 (IST) 23 Feb 2022
    ம.நீ.ம. வேட்பாளர்கள்தான் வெற்றியாளர்கள்.. கமல் ட்வீட்!

    உள்ளாட்சி தேர்தலில் அதிகாரபலம், பணபலம், கூட்டணி பலத்தை எதிர்த்து போட்டியிட துணிந்த ம.நீ.ம. வேட்பாளர்கள்தான் வெற்றியாளர்கள்! கமல்ஹாசன் அறிக்கை!


  • 13:52 (IST) 23 Feb 2022
    ஸ்டாலின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா.. கேரள முதல்வருக்கு அழைப்பு!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன் பாகம் -1' புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு. திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.


  • 13:14 (IST) 23 Feb 2022
    சேலம் திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சேலம் திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


  • 13:11 (IST) 23 Feb 2022
    துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா!

    உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, லக்கிம்பூர் கேரி மாவட்டம் பன்பீர்பூரில் உள்ள வாக்குசாவடியில், வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து’ 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார்.


  • 13:10 (IST) 23 Feb 2022
    ஜெயக்குமார் ஜாமீர் கோரிய மனு ஒத்திவைப்பு!

    திமுக நிர்வாகியை தாக்கியதாக, ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட வழக்கில், ஜாமின் கோரிய மனுவில்’ இருதரப்பு வாதங்களை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.


  • 12:45 (IST) 23 Feb 2022
    உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார்

    உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை செய்துள்ளார்.


  • 12:35 (IST) 23 Feb 2022
    ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    தேர்தலன்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவு


  • 12:33 (IST) 23 Feb 2022
    குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். போட்டித் தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மே மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது


  • 11:57 (IST) 23 Feb 2022
    எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு

    தமிழக அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு


  • 11:35 (IST) 23 Feb 2022
    188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    செங்கல்பட்டு மாவட்டடத்தில் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,


  • 11:34 (IST) 23 Feb 2022
    வாக்கு வங்கி - முழு விவரத்தை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையம்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் திமுக - 69.07% , அதிமுக - 11.94% உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் நகராட்சிகளில் திமுக - 61.41% , அதிமுக - 16.60 % உறுப்பினர்களை பெற்றுள்ளன என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


  • 11:33 (IST) 23 Feb 2022
    நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத்தான் சிவில் நீதிமன்றங்கள் உள்ளதே? - உச்ச நீதிமன்றம் கேள்வி

    நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களால், சிஆர்பிசி, ஐபிசி சட்ட அதிகாரம் பறிக்கப்படாதா என்றும், நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத்தான் சிவில் நீதிமன்றங்கள் உள்ளதே என்றும், நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நில அபகரிப்பு வழக்குகளாக கருதப்படுமா? ,
    தனிநபர் விவகாரங்களில் ஏன் அரசு தலையிட வேண்டும்? என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி


  • 10:59 (IST) 23 Feb 2022
    நடிகர் சங்க தேர்தல் செல்லும்: உயர்நீதிமன்றம்

    2019ஆம் ஆண்டு ஜூன் 23இல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனிநீதிபதி கல்யாணசுந்தரத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 10:58 (IST) 23 Feb 2022
    நடிகர் சங்க தேர்தல் செல்லும்: உயர்நீதிமன்றம்

    2019ஆம் ஆண்டு ஜூன் 23இல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனிநீதிபதி கல்யாணசுந்தரத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 10:32 (IST) 23 Feb 2022
    50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கிய முதல்வர்

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 50 லட்சமாவது பயனாளியான மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.


  • 10:25 (IST) 23 Feb 2022
    உ.பி.யில் 4ம் கட்ட தேர்தலில் 9.10% வாக்குப்பதிவு

    உத்தரப் பிரதேசத்தில் 4 ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 வாக்குகள் பதிவாகியுள்ளன.


  • 10:19 (IST) 23 Feb 2022
    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ120 குறைந்து ரூ37,888க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ15 குறைந்து ரூ4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 10:19 (IST) 23 Feb 2022
    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ120 குறைந்து ரூ37,888க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ15 குறைந்து ரூ4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 09:54 (IST) 23 Feb 2022
    ரஷ்யா மீது பொருளாதாரத் தடை

    உக்ரைன் மீதான அத்துமீறல்களை கண்டித்து ரஷ்யா மீது ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது


  • 09:45 (IST) 23 Feb 2022
    இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 278 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 08:39 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. திமுக நிர்வாகியை தாக்கியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், ராயப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்


  • 08:36 (IST) 23 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. திமுக நிர்வாகியை தாக்கியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், ராயப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்


  • 08:22 (IST) 23 Feb 2022
    உ.பி.யில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    உத்தரப் பிரதேசத்தில் 4 ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. 59 தொகுதிகளில் 624 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment