/tamil-ie/media/media_files/uploads/2022/06/french-open-8.jpg)
Tamil Nadu News Updates: தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் இன்று தொடக்கம். சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் 14வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனை
கோவையில் ஸ்வீக்கி ஊழியரை தாக்கிய காவலர் கைது
கோவையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை அத்துமீறி தாக்கிய போக்குவரத்து காவலர் கைது. தற்காலிக பணி நீக்கம் செய்து காவல் துறை உத்தரவு
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:34 (IST) 05 Jun 2022பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஃபேல் நடால், நார்வேயின் காஸ்பர் ருட்டை 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
- 20:49 (IST) 05 Jun 2022ஆழமான ஆற்றுப்பகுதிகள், குளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் வைக்க வேண்டும் - ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். “ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஆழமான ஆற்றுப்பகுதிகள், குளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகளும், தடுப்புகளும் வைக்க வேண்டும். வாழ வேண்டிய இளந்தளிர்களை நீர் நிலைகளில் உயிரிழப்பதை தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
- 18:50 (IST) 05 Jun 2022ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதி
பாலிவுட் நடிகர் ஹாருக்காணுக்கு கொரோனா வைரஸ் ட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் விழாவில், ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் கலந்துகொண்டனர்; அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- 17:41 (IST) 05 Jun 2022கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு
கடலூரில் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 16:47 (IST) 05 Jun 2022அந்தமான் அருகே நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
அந்தமான் அருகே கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது
- 16:44 (IST) 05 Jun 2022ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து 'விக்ரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்
'விக்ரம்' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 'விக்ரம்' படத்திற்கும், எனக்கும் நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ்ச்சி அடைய செய்கிறது. இந்த அன்பை நான் உங்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பேன் என்று தெரியவில்லை வாய்ப்பளித்த கமல்ஹாசனையும், ஆதரித்த ரசிகர்களையும் மிகவும் நேசிக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்
I haven’t been this emotional ever.The acceptance u’ve showed #Vikram and me has been so overwhelming.I don’t know how i’m gonna repay you guys for all this love.Ever grateful to @ikamalhaasan sir and my amazing people. So moved. Love you all 🙏🏻🙏🏻🙏🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 5, 2022 - 16:42 (IST) 05 Jun 2022ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து 'விக்ரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்
'விக்ரம்' திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 'விக்ரம்' படத்திற்கும், எனக்கும் நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ்ச்சி அடைய செய்கிறது. இந்த அன்பை நான் உங்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பேன் என்று தெரியவில்லை வாய்ப்பளித்த கமல்ஹாசனையும், ஆதரித்த ரசிகர்களையும் மிகவும் நேசிக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்
I haven’t been this emotional ever.The acceptance u’ve showed #Vikram and me has been so overwhelming.I don’t know how i’m gonna repay you guys for all this love.Ever grateful to @ikamalhaasan sir and my amazing people. So moved. Love you all 🙏🏻🙏🏻🙏🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 5, 2022 - 16:30 (IST) 05 Jun 2022கடலூரில் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி; விரிவான விசாரணைக்கு உத்தரவு
கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மண்ணின் தன்மை, குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
- 15:27 (IST) 05 Jun 2022அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
- 15:00 (IST) 05 Jun 202244 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்
தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 14:39 (IST) 05 Jun 2022தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.ஏ. 4, 5 வகை தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 14:22 (IST) 05 Jun 2022சென்னை மலர் கண்காட்சியை பார்வையிட்டார் ஸ்டாலின்
சென்னை, கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
- 14:16 (IST) 05 Jun 2022கடலூர், கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், ஏ.குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 7 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- 12:16 (IST) 05 Jun 2022தமிழகத்தில் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இயல்பைவிட வெப்ப நிலை 3 டிகிரி அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 11:47 (IST) 05 Jun 2022'அதிமுக - பாஜக இடையே விரிசல் இல்லை'- ஜெயக்குமார்
அதிமுக தான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே பெரிய விரிசல் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- 11:37 (IST) 05 Jun 2022தனியாரிடம் பொருள் வாங்கியதால் அரசுக்கு ரூ77 கோடி இழப்பு - அண்ணாமலை
கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருள்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ77 கோடி இழப்பு. ஹெல்த் மிக்ஸை ஆவினுக்கு பதில் தனியாரில் வாங்குவதால் தமிழக அரசுக்கு ரூ45 கோடி நஷ்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
- 11:22 (IST) 05 Jun 2022சென்னை மலர் கண்காட்சி - 2 நாளில் ரூ.8.35 லட்சம் வசூல்
சென்னை மலர் கண்காட்சியில் கடந்த 2 நாள்களில் ரூ8.35 லட்சம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ50, சிறுவர்களுக்கு ரூ20 கட்டண தொகையாகும்.
- 11:12 (IST) 05 Jun 2022குழந்தை இறப்பு விகிதம் - அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் ஒவ்வொரு 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு வயதுக்குள் உயிரிழப்பதாக இந்திய பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- 10:56 (IST) 05 Jun 2022காயிதே மில்லத்துக்கு முதல்வர் மரியாதை
காயிதே மில்லத்தின் 127 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை.
- 09:53 (IST) 05 Jun 2022இந்தியாவில் மேலும் 4,270 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
- 09:52 (IST) 05 Jun 2022இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 77 இடங்களில் காலை மற்றும் மதியம் என இரு வேளைகளாக நடத்தப்படுகிறது.
- 09:10 (IST) 05 Jun 2022மீண்டும் சாம்பியனானார் ஸ்வியாடெக்
பிரஞ்சு ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கணை இகா ஸ்வியாடெக் 2 ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அமெரிக்கா வீராங்கணை கோகோ காப்ஐ வீழ்த்தினார்.
- 08:45 (IST) 05 Jun 2022ஆவடியில் அரசு பேருந்து - பைக் மோதி விபத்து - ஒருவர் பலி
ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் உயிரிழப்பு; காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி
- 08:23 (IST) 05 Jun 2022பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்
பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.