முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
மதுரை மாநகராட்சியில் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த 6 ஆயிரம் பேர் இன்று முதல் வேலைநிறுத்தம். தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்புக் குழு, மேயர் என 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி
செங்கல்பட்டில் மதுராந்தகம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து. கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 8வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
8 விருதுகளை வென்ற ஜாஸ் பட்லர்
15வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ். இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 15வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் 8 விருதுகளை வென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம் என திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை நன்கு அறியும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
பெட்ரோல், டீசல் மீதான விரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து நாளை தலைமை செயலகம் நோக்கி பாஜக பேரணி செல்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான விரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து நாளை தலைமை செயலகம் நோக்கி பாஜக பேரணி செல்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் துரைமுருகனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது
திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் முற்றிலும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் மீது பொய்யான அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு மோசமாக இருந்தது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் 5க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி -2, வினா எண் 29 க்கு விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சை, கொக்கேரி கிராமத்தில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். பீமனோடை வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர், விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். அடுத்த மாதம் கோவிலை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தீட்சிதர்கள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
2021ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
புதுச்சேரி, காரைக்கால் அம்மையார் கோவிலின் மாங்கனி திருவிழா வரும் ஜூலை13ம் தேதி முதல் நடைபெறும் என்றும், 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ரூ. 34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்தியில் மோடி அரசு 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, 8 ஆண்டுகளில் அரசியல் கலாசாரம் மாறியுள்ளது என்றும், இந்திய அரசியலின் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
“நாடு இன்று சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவைக் கொண்டாடுகிறது, மேலும் இது மோடி அரசாங்கத்தின் 8 ஆண்டுகளையும் கொண்டாடுகிறது. சேவை, நல்ல நிர்வாகம் மற்றும் ஏழை நலன். சேவை, நல்லாட்சி, நலன், இதுவே மோடி அரசின் செயல்பாடு, மோடி அரசின் ஆன்மா.
அரசாங்கத்தின் செயல்பாட்டு முறை இன்று மாறிவிட்டது. 2014ல் இருந்து இப்போது வரை நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். இன்று நாம் நாட்டில் பொறுப்புள்ள அரசாங்கத்தைக் காண்கிறோம், இன்று நாம் ஒரு செயலூக்கமுள்ள, பதிலளிக்கக்கூடிய அரசாங்கத்தைக் காண்கிறோம். இந்த மாற்றத்தின் கதையே நமது முன்னேற்றத்தின் அடையாளம்” என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் உயர்ந்து 55,925.74 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 308.95 புள்ளிகள் உயர்ந்து 16,661.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
சென்னையில் நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்கு நடமாடும் கழிவறைகள், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. மேலும் மாநகர் முழுவதும் பல இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பது உள்பட 101 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.
சீன விசா விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு – ஜூன் 3ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் கோரிய வழக்கில் ஜூன் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்திய நிலையில், “அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்ல வேண்டும். மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு. அரசு அலுவலகங்களில் நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
மக்களுக்காகத்தான் அரசு!மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்… pic.twitter.com/sIELpnmVMB
— M.K.Stalin (@mkstalin) May 30, 2022
தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா கடத்தல் வழக்கில் வங்கி கணக்குகளை முடக்கி தென்மண்டல ஐஜி, அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஜனவரியில் எழுத்து தேர்வும், ஏப்ரலில் நேர்முகத்தேர்வும் நடந்து முடிந்த நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு வலியுறுத்தியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்வி கொள்கையில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள் சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை எனறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது திருச்சி சென்றடைந்தார் தொடர்ந்து அவர் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி, வடிகால் பணிகளை 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்பட்டினத்தில் தொழிலதிபரை கொலை செய்து 175 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அடகு வைக்கப்பட்டுள்ள 40 சவரன் நகைகளை மீட்க தமிழக காவல்துறை கேரளா செல்கிறது
நேபாளம் மஸ்டாங் மாவட்டத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டு எடுத்துச் செல்லப்பட உள்ளது
நேபாளத்தில் தாரா ஏர் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. சொத்துவரி உயர்வு உள்ளிட்ட 101 தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 17 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மக்களிடம் ரூ50 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று முதல் ஜூன் 7 வரை ஆப்ரிக்கா, காபோன், செனகல், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் தேனி எம்.பி ரவீர்ந்திரநாத் குமார் உள்ளிட்ட 3 எம்.பிக்கள் செல்லவுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்திற்கு மாணவர்கள் இன்று குலுக்கல் முறையில் தேர்வு. இத்திட்டத்திற்கு 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், சுமார் 1 லட்சம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.
கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதியளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கேள்வி
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.