Tamil Nadu News Updates: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறைக்கு உத்தரவும். NO work NO pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க மண்டல இணைப்பதிவாளருக்கு ஆணை
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி. சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் பதவியை தக்க வைத்தார் போரிஸ் ஜான்சன்.
மதுரைக்கு செல்கிறார் ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாள்கள் பயணமாக இன்று மதுரை செல்கிறார். சிவகங்கை, புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்
பெட்ரோல், டீசல் நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ102.63க்கும், டீசல் லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் – ஐக்கிய அரபு அமீரகம்
வெறுப்புணர்வை தூண்டுவதை நிறுத்திவிட்டு, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு இடையே சகிப்புத்தன்மையை நிலைநாட்டுவது, சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என முகமது நபிகள் குறித்து சர்ச்சை தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மதுரை புதுநத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நூலகத்தின் கட்டுமாணப்பணிகள் தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் எஸ்.பட்டி கிராமத்தில், பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக புகார் அளித்தும் அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டிய பொதுமக்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு,நிலங்களை கிராம மக்களே கற்களை வீசி சூறையாடினர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்கள் மேம்பாட்டு மையத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 29ஆக உயர்ந்துள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் எதிர்க்கட்சி தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம். ஜூன் 24-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது
வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இனி அங்கன் வாடி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கந்துவட்டி அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். காவிரி மேலாண்மை ஆணையம் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு மீண்டும் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோவிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் காலை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் மீண்டும் வருகை தந்துள்ளனர். நடராஜர் கோவிலை ஆய்வு செய்ய காலை முதலே தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீட்டில் இருந்து ரூ2.83 கோடி பணம், 1.8 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது
அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாடு முழுவதும் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் நாளை அழிக்கப்படுகிறது. கவுகாத்தி, லக்னோ, மும்பை, முந்த்ரா, கண்ட்லா, பாட்னா, சிலிகுரி ஆகிய இடங்களில் இந்த போதைப் பொருட்கள் நாளை அழிக்கப்படுகின்றன
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒரு மாதம் ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவகாசம் கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது
கர்நாடகாவில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஹூசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்
தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத்துக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ. 33 லட்சம் வசுலித்து வழக்கில் யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். காவலில் விசாரிக்கக் கோரிய மனு, கார்த்திக்கோபிநாத் மனு மீதானை விசாரணை ஜீன் 13 தேதி ஒத்திவைப்பு
ஒலிம்பிக்கை போல் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு முதல் முறையாக தீச்சுடர் அறிமுகம் செய்யப்படுகிறது. தீச்சுடர் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடங்கும் முன் அனைத்து மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும் வரும் காலங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கும் முன் உலக நாடுகளுக்கு தீச்சுடர் எடுத்துச்செல்லப்படும்.
உத்தரபிரதேசம் , கர்நடகாவில் உள்ள பாஜக அலுவகத்திற்கு மிரட்டல் விடுத்ததாக தமிழ இளைஞரிடம் விசாரணை. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் உதவியுடன் லக்னோ போலீசார் இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர். போலிசார் விசாரிக்கும் இளைஞர் ராஜாமுகமது மனநலம் பாதிக்கட்டவர் என்பதால் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ சீட்டுகளை லக்னோ போலிசாரிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
மதுரை ஆதீனம் விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. மதுரை ஆதீனம் அரசியல்வாதியாக செயல்படுகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
32 புரோட்டின் கலவைகள் உள்ள பவுடர் 2018ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது. ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும், அதை வாங்க அரசு மறுப்பதாகவும் பரவும் தகவல் தவறானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை, அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை வலுகட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் சட்டத்தின்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நேற்று தீட்சிதர்களை சந்தித்து அன்பாக கோரிக்கை வைத்தோம், கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறினோம். மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். முதலமைச்சரின் அறிவுரைப்படி அமைதியாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இயக்குனர் லோகேஷுக்கு சினிமா மீதும், என் மீதும் இருந்த அன்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தரமான படைப்பை ரசிகர்கள் என்றும் தாங்கிப் பிடிப்பார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை நடத்தாது என தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 4000கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய இந்த ஏவுகணை அப்துல் கலாம் தீவில் நேற்று இரவு 7.30 மணியளவில் சோதிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வை தொடங்கியது அறநிலையத்துறை விசாரணை குழு. கோயில் நிர்வாகத்தின் வரவு, செலவு உள்ளிட்டவை பற்றி 5 பேர் கொண்ட குழு கணக்கு கேட்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுககு ரூ200 குறைந்து ரூ38 ஆயிரத்து 80க்கு விற்பனை. கிராமுக்கு ரூ25 குறைந்து ரூ4,760க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்புக்கு 26 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக மணிக்கு 320கிமீ வேகத்தில் இயங்கும் புல்லட் ரயில் சேவை. குஜராத்தின் சூரத் பிலிமோரா இடையே 2026 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை. வரி ஏய்ப்பு புகாரில் ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளிலும் ரெய்டு
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். 2015இல் மருத்துவ வாரிய தேர்வில் வென்றவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி போராட்டம்
பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுங்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதிப்பு. நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததால் மறு உத்தரவு வரை பரிசல் இயக்கவும் தடை