Tamil Nadu News Updates: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது. பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை எடப்பாடியில் கைது செய்தது தனிப்படை போலீஸ்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு. தமிழகத்தில் ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைக்கிறார்.மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் . சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிப்பு. வேட்பாளர்களை அறிவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
லக்னோவை வீழ்த்தியது ஆர்சிபி
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி. வெள்ளிக்கிழமை நடைபெறும் 2ஆவது தகுதிச் சுற்றுப்போட்டியில் ராஜாஸ்தானை பெங்களூரு எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மே 31ம் தேதி ராஜினாமா செய்கிறார். புதிய ராணுவத் தளபதியாக விகும் லியனகே ஜூன் 1ல் பொறுப்பேற்கிறார்.
“சிறந்த பெண் அரசியல் ஆளுமையான சுப்பிரியா சுலேவுக்கு எதிரான மகாராஷ்டிர பாஜக தலைவரின் கருத்து ஆணாதிக்கத்தின் உச்சம். உலகமே பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில், பழமைவாதிகளை மக்கள் முற்றிலுமாகத் தூக்கி எறிய வேண்டும்” என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ள நிலையில், திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி போட்டு கோஷமிட்டு வருகின்றனர். அவர்கள் இப்படி கோஷமிட்டதால் பிரதமர் நிகழ்ச்சி நடைபெற உள்ள சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோஷமிட வேண்டாம் என தொண்டர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைனில் அமைதி உருவாக புதின் அனுமதிக்க மாட்டார் என்றும் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறாது; தனது நோக்கத்தில் புதின் தோற்றுவிட்டார் என்றும் ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உடன் இந்தியாவிற்கான பிரிட்டன் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் பஞ்சாப் – பிரிட்டன் இடையேயான விமான சேவை, விளையாட்டு, வர்த்தகம், முதலீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக சிறப்பு புலனாய்வு காவல் சார்பு ஆய்வாளர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே முட்டுக்காடு பகுதியில் போலி பத்திரப்பதிவு ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்ததாக சார்பதிவாளர் செல்வசுந்தரி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 30 வரை இடைக்கால தடை விதித்துள்ளது
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், தருமபுரி, குமரி, நெல்லை ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் இயக்குநர் குழுவில் இருந்து முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி விலகினார்.
கடந்த 2020ம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சாலை விபத்துகள் 18.46% ஆகவும், உயிரிழப்பு 12.84% ஆகவும் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிவகங்கை, கல்குறிச்சி வைகை ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதற்கு தடை கோரிய வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா பதவியேற்றார்.
தமிழ்நாட்டில், கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை ஆவினில் பணி நியமன முறைகேடு வழக்கில், 30 பணியாளர்களுக்கு பால்வளத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை, திருவேற்காட்டில் வரும் 28ஆம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பா.ம.க.வின் அடுத்த தலைவர் பொறுப்பை அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 1.83 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்திடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மணல் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிந்தும் நீண்ட நாட்களாக கைது செய்யாமல் இருப்பது ஏன்? என போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் மே 9ல் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீஸ் விசாரணை. ஏற்கனவே ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கொழுப்பில் அவரின் இல்லத்தில் சிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை, திரு.வி.க.நகர் பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரூ2.83 கோடி மதிப்பில் கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது
இந்தியாவில் மேலும் 2,628 பேருக்கு கொரோனா பாதிப்பு. 18 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து 2,167 பேர் குணமடைந்த நிலையில், மேலும் 15,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ320 குறைந்து ரூ38,120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ4,765-க்கு விற்பனை
திருணச் சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு. புதிய அரசாணையால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை
மதுரை, இடையபட்டி ஊராட்சி செயலாளர் லட்சுமணன் மர்மநபர்களால் வெட்டிக்கொலை. கோயில் பூசாரியாக இருந்த நிலையில் காலையில் பூஜைக்கு சென்றபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை
கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி தணிக்கை மேற்கொள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வலியுறுத்தல்
விசா முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் காங். எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆஜர். சீனர்களுக்கு விசா பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என கார்த்தி சிதம்பரம் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் ஈ.வெ.ரா சாலை, புரசைவாக்கம் தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை, அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு. இந்த சாலைகளுக்கு பதிலாக மாற்று வழியில் செல்ல காவல் துறை அறிவுறுத்தல்
சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம். ஏற்கனவே சென்னை ஆட்சியராக பதவி வகித்த விஜயராணி ஐஏஎஸ்-க்கு பதிலாக புதிய ஆட்சியரை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம். சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு