Tamil Nadu News Updates: கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலிமை ரிலீஸ்
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பட்டாசு வெடித்து. பைக் சாகசங்கள் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம். அதே சமயம், கோவையில் வலிமை திரைப்படம் வெளியான பூ மார்க்கெட் அர்ச்சனா திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் நீண்ட நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ரூ18 ஆயிரம் கோடி மீட்பு
பல ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து ரூ 18 ஆயிரம் கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா இலங்கை டி20 போட்டி
இந்தியா இலங்கை இடையே இன்று முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், தீபக் சாகருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:48 (IST) 24 Feb 2022உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களின் பாதுகாப்பே முக்கியம் - பிரதமர் மோடி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று மோடி கூறினார் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறினார்.
- 22:46 (IST) 24 Feb 2022போருக்கு எதிரான போராட்டம் : ரஷயாவில் 389 பேர் கைது
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில், இந்த போருக்கு எதிரான போராட்டங்களில் ரஷ்யாவின் 39 நகரங்களில் நடந்த போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ரஷ்ய காவல்துறை குறைந்தது 389 பேரைக் கைது செய்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.இன்று அதிகாலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பல ஆண்டுகளாக ரஷ்யாவின் எதிர்ப்பின் மீதான ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தியுள்ளது.
- 20:59 (IST) 24 Feb 202211 விமான தளங்கள் உட்பட 74 உக்ரேனிய இராணுவ பகுதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போதுவரை உக்ரைனில், 11 விமான தளங்கள் உட்பட 74 உக்ரேனிய இராணுவ பகுதிகளை அழித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
- 20:59 (IST) 24 Feb 202211 விமான தளங்கள் உட்பட 74 உக்ரேனிய இராணுவ பகுதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போதுவரை உக்ரைனில், 11 விமான தளங்கள் உட்பட 74 உக்ரேனிய இராணுவ பகுதிகளை அழித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
- 20:19 (IST) 24 Feb 2022ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு 'சர்வாதிகாரி' - போரிஸ் ஜான்சன்
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி உரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு 'சர்வாதிகாரி' என்றும், 'உக்ரேனியர்களின் தேசிய உணர்வை ஒருபோதும் அடக்க மாட்டார்' என்றும் குறிப்பிட்டார்.
- 20:17 (IST) 24 Feb 2022உக்ரைன், கீவ் பகுதிக்கு அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் நடைபெறுவதாக தகவல்
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது உக்ரைன், கீவ் பகுதிக்கு அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
- 19:25 (IST) 24 Feb 2022உக்ரைனில் இந்தியர்களுக்கு தூதரகம் உதவி
உக்ரைனில் உள்ள சில இந்திய மாணவர்களுக்கு இன்று காலை முதல் பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்து தந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 19:02 (IST) 24 Feb 2022ரஷ்யா-உக்ரைன் மோதல்: கண்டத்திற்கான பேரழிவு - போரிஸ் ஜான்சன் கருத்து
ரஷ்யா-உக்ரைன் மோதலை 'கண்டத்தின் பேரழிவு' என்று கூறிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய படையெடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகவும், சக G7 தலைவர்களிடமும் பேசுவதாகவும் கூறினார். கூடிய விரைவில் அனைத்து நேட்டோ தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
- 18:57 (IST) 24 Feb 2022உக்ரைனுக்கு பிரான்ஸ் துணை நிற்கும்; ரஷ்ய நடவடிக்கை நீடித்த ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும்: மேக்ரான்
பிரான்ஸ் உக்ரைனின் பக்கம் நிற்கும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரெஞ்சு நாட்டிற்கு தொலைக்காட்சி உரையில் கூறினார். கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கை கண்டத்திற்கு உரியது, நீடித்த மற்றும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
- 18:54 (IST) 24 Feb 2022கிழக்கு உக்ரைன் நிலைமை: செய்தி வெளியிடுவது குறித்து ஊடகங்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை
கிழக்கு உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து செய்தி வெளியிடுவது பற்றி ஊடகங்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம்நாட்ஸர், ஊடகங்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள நிலைமை குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ ரஷ்ய வட்டாரங்களில் இருந்து அளிக்கப்படும் தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
- 18:51 (IST) 24 Feb 2022ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: இங்கிலாந்து வெளியுறவுத் துறையுடன் விவாதித்த ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ்ஸுடன் வியாழக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார்.
அப்போது, ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி பற்றிய தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
A telephonic discussion with UK Foreign Secretary @trussliz.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 24, 2022
Exchanged perspectives on the Ukrainian situation. - 18:48 (IST) 24 Feb 2022உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாம்ப் ஷெல்டர்களில் தங்குமாறு இந்திய தூதரகம் ஆலோசனை
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டில் உள்ள் இந்தியர்களை வெடிகுண்டு முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. விமான சைரன்கள் மற்றும் வெடிகுண்டு எச்சரிக்கைகளைக் கேட்பவர்கள் அருகிலுள்ள பாம்ப் ஷெல்டர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கிவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு புதிய ஆலோசனை தெரிவித்துள்ளது. உக்ரைன் இராணுவச் சட்டத்தின் கீழ் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், இது இயக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கிவ் பகுதியில் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மாணவர்களுக்காக, அவர்களைச் சேர்க்க தூதரகம் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. 'சில இடங்களில் விமான சைரன்கள்/வெடிகுண்டு எச்சரிக்கைகள் கேட்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால், கூகுள் மேப்ஸ்ஸில் அருகே உள்ள வெடிகுண்டால் பாதிக்காத முகாம்களின் பட்டியல் உள்ளது. என்று ஆலோசனை கூறியுள்ளது.
'மிஷன் சூழ்நிலைக்கு சாத்தியமான தீர்வைக் கண்டறிந்து கொண்டிருக்கும்போது, தயவுசெய்து உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், தேவையில்லாமல் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள். எல்லா நேரங்களிலும் உங்கள் ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்' என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.
- 18:41 (IST) 24 Feb 2022உக்ரைனின் கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் ஊடுருவ முயற்சி
உக்ரைனின் கிவ் பகுதியிலும், பெலாரஷ்ய எல்லையில் உள்ள அதன் சைட்டோமிர் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் ஊடுருவ முயற்சிப்பதாகவும், ரஷ்யா கிராட் ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் எல்லை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Confirmed by Ukrainian authorities. A large air assault operation with Mi-8 helicopters on Antonov International Airport in Hostomel. Interior Ministry says Russia has seized control. Very dangerous; it’s just 15 minutes west of the capital ring road. pic.twitter.com/JhlyVktVRC
— Christopher Miller (@ChristopherJM) February 24, 2022 - 17:51 (IST) 24 Feb 2022உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பேர் பலி; 10 பொதுமக்கள் உயிரிழப்பு
ரஷ்யாவின் குண்டு தாக்குதலில் 40 உக்ரைன் ராணுவ வீரர்களும் சுமார் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உக்ரைன் விவரங்கள் வழங்காமல் ‘சுமார் 50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை’ கொன்றதாக கூறியதாக AFP தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தொடக்கத்தில் உக்ரைனில் ஒரு இராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது தொடங்கிய வேகமான முன்னேற்றங்களில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன.
- 17:28 (IST) 24 Feb 2022உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குடலில் 40 ராணுவ வீரர்கள் பலி
உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய தாக்குதலில் இதுவரை 40 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். பல டஜன் பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் வியாழக்கிழமை தெரிவித்தார்.
- 17:25 (IST) 24 Feb 2022உக்ரைன், ஒடேசா பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 18 பேர் உயிரிழப்பு
உக்ரைன், ஒடேசா பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 16:59 (IST) 24 Feb 2022உக்ரைன் உளவுத்துறை அமைப்பின் தலைமையகத்தை தாக்கியது ரஷ்ய ராணுவப் படை
உக்ரைன், கியூவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை அமைப்பின் தலைமையகத்தை ரஷ்ய ராணுவப் படைகள் தாக்கியது
- 16:38 (IST) 24 Feb 2022உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்படும் - இந்திய தூதர்
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்படும். இந்தியர்கள் வேறு எங்கும் செல்லாமல் தனது இடத்திலோ, நன்கு தெரிந்த இடங்களுக்கோ சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய தூதரகம் இணைந்து தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் வாழ் இந்தியர்கள் அமைதியாக இருப்பதோடு சூழ்நிலையை திடமாக எதிர்கொள்ள வேண்டும் என இந்திய தூதர் பார்தா சட்பதி தெரிவித்துள்ளார்
- 16:27 (IST) 24 Feb 2022உக்ரைனில் உள்ள கேரள மாநிலத்தவரின் பாதுகாப்பு குறித்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர் MEA க்கு கடிதம்
உக்ரைனில் ரஷ்ய ராணுவத் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மலையாளிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட கேரள அரசு, அவர்களைப் பாதுகாத்து அவர்கள் நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய அரசை வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள மலையாளிகளை பத்திரமாக மீட்கக் கோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) வி டி சதீசன் ஆகியோர் தனித்தனியாக கடிதம் எழுதினர்.
அங்குள்ள இந்திய மாணவர்களில் 2,320 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பலர் படிப்பில் இடைவேளையை விரும்பாமல் ஒதுங்கியிருப்பதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். "எங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் உங்கள் நல்ல குணத்தை கேட்டுக் கொள்ளவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். மேலும் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து அவர்கள் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உங்கள் அன்பான தலையீட்டையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயன் கூறியுள்ளார். கூறினார்.
எதிர்கட்சி தலைவர் தனது கடிதத்தில், சுமார் 20,000 இந்தியர்கள், பெரும்பாலும் மலையாளிகள், உக்ரைனில் சிக்கித் தவிப்பதாகவும், கடுமையான விமானப் பற்றாக்குறை மற்றும் விமானக் கட்டண உயர்வு காரணமாக அவர்களில் பலர், குறிப்பாக மாணவர்களால் விமான டிக்கெட்டுகளை வாங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
- 16:10 (IST) 24 Feb 2022உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவு; தங்கம் விலை உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிந்து 54,529 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 16,247 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து ரூ.38,992-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,874-க்கு விற்பனை செய்யப்படுகிறது
- 16:02 (IST) 24 Feb 2022கிழக்கு உக்ரைன் முழுவதும் பெரிய குண்டு வெடிப்புகள் பதிவு
கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் புதின் உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே அங்கு பெரிய வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
Large explosions have been filmed across eastern Ukraine shortly after President Putin ordered a military operation in the countryhttps://t.co/0do2isJcbn pic.twitter.com/p94XGCfBcy
— The Telegraph (@Telegraph) February 24, 2022 - 15:41 (IST) 24 Feb 2022தற்போதைய நிகழ்வுகளுக்கும் உக்ரைனின் நலன்களை மீறும் விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை: புடின்
உக்ரைன் மற்றும் உக்ரேனிய மக்களின் நலன்களை மீறும் நோக்கத்துடன் தற்போதைய நிகழ்வுகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் வியாழக்கிழமை உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கூறினார். "உக்ரேனைப் பணயக் கைதிகளாகக் கைப்பற்றி அதை நம் நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்த முயற்சிப்பவர்களிடமிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதுடன் இந்த முன்னேற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
"இன்றைய உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்ட போது அல்லது 2 ஆம் உலகப் போருக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்று கேட்கப்படவில்லை. இன்றைய உக்ரைனில் வாழும் மக்கள், இதைச் செய்ய விரும்பும் எவரும், அதைச் செய்ய முடியும். சுதந்திரமாக தேர்வு செய்வதற்கான இந்த உரிமையை அனுபவிக்கவும்," என்று அவர் கூறினார்.
- 15:31 (IST) 24 Feb 2022வான்வெளியை மூடிய உக்ரைன், இந்தியர்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடு
ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் உக்ரைன் தனது வான்வெளியை மூடிய நிலையில், உக்ரைனில் இருந்து இந்திய பிரஜைகளை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், சிறப்பு விமானங்களின் அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிய்வில் உள்ள இந்திய தூதரகம் ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது. “இந்திய குடிமக்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தகைய ஏற்பாடுகள் முடிந்தவுடன் தூதரகம் தகவல் தெரிவிக்கும், இதனால் இந்திய குடிமக்கள் நாட்டின் மேற்கு பகுதிக்கு இடம்பெயர முடியும். உங்கள் கடவுச்சீட்டுகள் மற்றும் தேவையான ஆவணங்களை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்” என்று தூதரகம் ஆலோசனையில் கூறியுள்ளது.
உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், தூதரகத்தின் இணையதளம் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அதன் சமூக ஊடக தளங்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@IndiainUkraine issues a fresh advisory for all Indian Nationals/Students in Ukraine.
— Arindam Bagchi (@MEAIndia) February 24, 2022
Alternative arrangements are being made for evacuation of our citizens.
📞 Additional 24*7 helplines:
+38 0997300428
+38 0997300483
+38 0933980327
+38 0635917881
+38 0935046170 pic.twitter.com/95EHCPSOKy - 15:23 (IST) 24 Feb 202250 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் ராணுவ படைகள் 50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது
- 15:10 (IST) 24 Feb 2022தூத்துக்குடி: பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்
- 14:59 (IST) 24 Feb 2022உக்ரைன் போர்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
- 14:55 (IST) 24 Feb 2022ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பாதுகாப்பு படைகளில் சேரலாம்.. உக்ரைன் அரசு அழைப்பு!
ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
- 14:54 (IST) 24 Feb 2022ஐரோப்பாவில் மீண்டும் போர் வந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் பொறுப்பு!
ஐரோப்பாவில் மீண்டும் போர் வந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மக்களுடன் துணை நிற்கிறது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.
- 14:54 (IST) 24 Feb 2022புதின் உடன் மோடி பேச வேண்டும்.. இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்!
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தடுக்க புதின் உடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 14:24 (IST) 24 Feb 2022தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகம்.. 2 பெண் ஐ.பி.எஸ்.கள் நியமனம்!
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு’ போக்குவரத்து மற்றும் தலைமை பொறுப்புககான கூடுதல் ஆணையர்களாக விஜயகுமாரி ஐ.பி.எஸ், காமினி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 14:24 (IST) 24 Feb 2022உக்ரைனில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு!
உக்ரைனில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் மாணவர்கள் செய்வதறியாது கவலையில் உள்ளனர்.
- 14:23 (IST) 24 Feb 2022மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.. உக்ரைன் அரசு!
உக்ரைனில், போர் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வயதானவர்கள், நோயுற்றவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 14:15 (IST) 24 Feb 2022உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறோம்… அமெரிக்க அதிபர்!
உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
- 14:15 (IST) 24 Feb 2022பாதாள அறைகளில் தஞ்சம் அடையும் உக்ரைன் மக்கள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், அச்சத்தில் உறைந்துள்ள உக்ரைன் மக்கள், பாதுகாப்பு தேடி பாதாள அறைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
- 13:53 (IST) 24 Feb 2022ரஷ்யா - உக்ரைன் போர்.. இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு!
ரஷ்யா - உக்ரைன் போரால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 2,070 புள்ளிகள் சரிந்து 55,160 புள்ளிகளாக வீழ்ச்சி, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 635 புள்ளிகள் சரிந்து 16, 427 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
- 13:53 (IST) 24 Feb 2022உக்ரைனில் வான்வெளி மூடல்.. இந்தியர்களை மீட்பது எப்படி?
உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதற்கான மாற்று வழிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
- 13:35 (IST) 24 Feb 2022உணவு, குடிநீர் இல்லாமல் உக்ரைன் மக்கள் அவதி!
உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. உணவு, குடிநீர் பெற உக்ரைன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் உருவாகியுள்ளது.
- 13:34 (IST) 24 Feb 2022அதிமுக இதுபோன்ற தொடர் தோல்விகளை கண்டதில்லை.. சசிகலா!
50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்ற தொடர் தோல்விகளை கண்டதில்லை. விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே இதற்கு காரணம் என சசிகலா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
- 13:34 (IST) 24 Feb 2022உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கித் தவிப்பதால்’ அரசுகள் தலையிட்டு பத்திரமாக மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 13:12 (IST) 24 Feb 2022ரஷ்ய ரூபிளின் மதிப்பு ஒரே நாளில் 9% சரிவு!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிளின் மதிப்பு ஒரே நாளில் 9% சரிந்துள்ளது.
- 13:12 (IST) 24 Feb 2022உக்ரைனின் இவானோ சர்வதேச விமான நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்!
உக்ரைனின் இவானோ சர்வதேச விமான நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் பல்வேறு பகுதிகளில் பாராசூட் மூலம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தரையிறங்கியுள்ளனர்.
- 13:12 (IST) 24 Feb 2022ரஷ்யா போர் விமானங்களை சுட்டு விழ்த்தப்பட்டதா?
ரஷ்யா போர் விமானங்களை சுட்டு விழ்த்தியதாக உக்ரைன் அறிவித்த நிலையில், தங்களது ராணுவ போர் விமானங்கள் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
- 12:54 (IST) 24 Feb 2022உக்ரைன் விவகாரம் : ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கருத்து
ரஷ்யா - உக்ரைன் இடையேயான சூழ்நிலை பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் சுமூக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கருத்து
- 12:27 (IST) 24 Feb 2022உக்ரைனின் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது
செங்கிவ்கா எல்லை வழியாக ரஷ்ய ராணுவத்தின் பீரங்கிப் படை உக்ரைனில் நுழைந்தது. உக்ரைனின் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது எனவே இந்தியர்கள் தற்போது எங்கே தங்கியிருந்தாலும் அந்தந்த நகரங்களில் அமைதியாவும் பாதுகாப்பாகவும் இருங்கள் என்று உக்ரைனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
- 12:06 (IST) 24 Feb 2022நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றி
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி
- 12:04 (IST) 24 Feb 2022உக்ரைன் மக்கள் அச்சம்
பல்முனை தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் உக்ரைன் நாட்டில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
- 12:03 (IST) 24 Feb 2022அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு. காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு தள்ளிவைப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
- 11:34 (IST) 24 Feb 2022உக்ரைன் வாழ் தமிழர்களை காக்க மாநில அரசு முயற்சி
உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிட முதல்வர் உத்தரவு என்று திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா அறிவித்துள்ளார். உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் mm.abdulla@sansad.nic.in-ல் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:22 (IST) 24 Feb 2022மக்கள் பதட்டமடைய வேண்டாம் - உக்ரைன் அதிபர்
ராணுவம் தனது வேலைகளை செய்து வருகிறது. எனவே மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
- 11:16 (IST) 24 Feb 2022ஜோ பைடன் கடும் கண்டனம்
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளது அமெரிக்கா. கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜோ பைடன் எச்சரிக்கை
- 10:48 (IST) 24 Feb 2022ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் - ரஷ்யா
உக்ரைனில் உள்ள விமான தளங்கள், ராணுவ சொத்துக்கள் மீதே குறிவைத்துள்ளோம்; அதிக மக்கள் உள்ள பகுதிகள் எங்கள் இலக்கு அல்ல என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
- 10:32 (IST) 24 Feb 2022உக்ரைன் ரஷ்யா போர் - தங்கம் விலை உயர்வு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்க நகை 38 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்க நகை கிராம் ஒன்றுக்கு 4,827 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:32 (IST) 24 Feb 2022உக்ரைன் ரஷ்யா போர் - தங்கம் விலை உயர்வு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்க நகை 38 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்க நகை கிராம் ஒன்றுக்கு 4,827 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:26 (IST) 24 Feb 2022ரஷ்யாவுக்கு நேட்டோ அமைப்பு கண்டனம்
ரஷ்யாவின் நடவடிக்கையால் மக்களின் உயிருக்கு ஏற்படுவதுடன் பெரும் சேதம் ஏற்படும் என நேட்டோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
- 10:08 (IST) 24 Feb 2022உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரை தாண்டியது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
- 09:55 (IST) 24 Feb 2022ரஷ்யாவை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் - உக்ரைன் பிரதமர்
ரஷ்யா எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். ukrainerussiacrisis ukraine russia
- 09:50 (IST) 24 Feb 2022குண்டு மழை பொழியும் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியது.
Update from Dnipro. russia ukraine worldwar3 wwiii dnipro pic.twitter.com/QfUZmzvRq3
— WORLD WAR 3 - RUSSIA vs Ukraine 2022 (@WW32022) February 24, 2022BREAKING: Explosions in Ukraine's city of Mariupol pic.twitter.com/57ZZVyx5w2
— The Spectator Index (@spectatorindex) February 24, 2022
- 09:41 (IST) 24 Feb 2022உக்ரைன் - ரஷ்யா போர்... இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் உள்ளது.
- 09:25 (IST) 24 Feb 2022உயிர்கள் பலியானால் ரஷ்யாதான் பொறுப்பு - ஜோ பைடன்
ரஷ்யா நடவடிக்கையால் ஏராளமான உயிர்கள் பலியானால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 09:12 (IST) 24 Feb 2022உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவ படை தாக்குதலை தொடங்கியுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 08:59 (IST) 24 Feb 2022உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை - புதின் உத்தரவு
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்திய நிலையில், புதின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என புதின் எச்சரிக்கை
- 08:45 (IST) 24 Feb 2022உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை - புதின் உத்தரவு
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்திய நிலையில், புதின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 08:39 (IST) 24 Feb 2022உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை - புதின் உத்தரவு
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்திய நிலையில், புதின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நடவடிக்கையில் தலையிடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என புதின் எச்சரிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.