Tamil Nadu News Updates: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தல்
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் பரிசோதனையை குறைத்திருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் விழாவில் அலங்கார ஊர்தி
மத்திய அரசு நிராகரித்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறும். முக்கிய நகரங்களில் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 76வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது.
பார்சல்களில் கொரோனா
வெளிநாடுகளில் இருந்து வரும் பார்ச்ல்கள் மூலம் கொரோனா பரவுவதாக சீனா கண்டறிந்துள்ளது. பார்சல்களை பிரிக்கும்போது மாஸ்க், கையுறை அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை நிரந்தர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்குபெறும் வகையில் வணிக விதிமுறைகளை சீரமைக்க வேண்டும். பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வைத்துள்ளார்
இந்தோனேசியாவின் அமாஹாய் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி வரும் 22ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகப்பட்சமாக சென்னையில் 8,007 பேருக்கும் கோவையில் 3,082 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. ஜனவரி 27ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டில் வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறும். பொது கலந்தாய்வு ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரிய இடைக்கால மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது
முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் அஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 2022 சீசனின் இறுதியில் டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான விஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. உ.பி தேர்தலில் பாஜக கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு கூடுடஹ்ல் அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு எக்காரணம் கொண்டும் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை, விவசாய இடங்களை ஆக்கிரமித்து இருந்தால் ஆய்வு செய்து அதிகாரிகள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. தமிழகத்தில் 9 மாதங்களில் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு ஈர்த்து உள்ளது. டாடா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. ரினியூவபிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டி.வி.எஸ். மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் முக்கியமானவையாகும்.
திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் எதை கொள்ளையடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மலையாள நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பொம்மன்ஹள்ளி கிராமத்தில் சரக்கு வாகனத்தின் பாரம் தாங்காமல் 20 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் இடிந்து விழுந்தது. பின்னர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கிரேன் உதவியுடன் சரக்கு வாகனம் மீட்க்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தில் எமண்ணா என்பவர் கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதியே இறந்த நிலையில், அவரது பெயரில் நவம்பர் 2 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மென்பொருளில் ஏற்பட்ட குளறுபடிகளால் தவறாக பதிவேற்றம் நடந்துள்ளதாக அம்மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, 30 % ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐரோப்பிய கவுன்சிலின் 'ரவுல் வாலன்பெர்க்' விருது பெறும் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ருத்ராட்சம் சீசன் தொடங்கியுள்ளது. குன்னூர் சிமஸ் பூங்காவில் மூலிகை மற்றும் அரியவகை பழங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் உள்ளது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடவு செய்யப்பட்ட ருத்ராட்சம் மரங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ருத்ராட்சம் சீசன் தொடங்கியுள்ளதால் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகினறனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த ஆத்துப்பாக்கத்தை சேர்ந்த யுவராஜ் என்ற தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது யுவராஜ், காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது அவரை தேடும் பணியில் காவல்துறையினர் விரைந்துளளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 5 நாட்களுக்கு பிறகு தற்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில்,அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 2017 ம் ஆண்டு ப்ரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை இந்தியன் வங்கியிடம் ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்றுள்ளது. தற்போது 400 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் செலுத்தவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட வங்கி தொடர்ந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் இன்று கடைக்கு சீல் வைத்தனர்.
தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தி.மு.க. அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆகவே கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மில்க் கேக், யோகர்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய ஐந்து புதிய ஆவின் தயாரிப்புகளை முதல்வர் ஸ்டாலின் விற்பனைக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் அறிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பால்கர்-ஐ, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் கோவாவில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கியில் பெற்ற ரூ.185 கோடி கடனை திருப்பி செலுத்தாததால், லண்டனில் உள்ள சொகுசு பங்களாவை விட்டு வெளியேறுமாறு விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சுகாதார அலுவலர் சதீஷ்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினர், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மேகதாது அணையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது. பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
முலாயம் சிங் யாதவின், இளைய மருமகள் அபர்ணா யாதவ், இன்று பாஜக-வில் இணைந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும், பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவி வருவதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்லது. நாளை மறுதினம் கோரிக்கையை பரிசீலிப்பதாக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் பதில்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில், 1 லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 441 பேர் உயிரிழந்துள்ளனர்.
அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். 300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு பார்ல் மைதானத்தில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகிய நிலையில், கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.