Advertisment

Tamil News Highlights: சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 1st January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை

Tamil Nadu News Updates: ஜம்மு காஷ்மீர் சுத்ராவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயிலில், புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் கூடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரி கடற்கரை சாலையில் கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 58-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:51 (IST) 01 Jan 2022
    சென்னை, கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம்

    ஒமிக்ரான் பரவல் காரணமாக சென்னையில் கடற்கரைக்குச் செல்ல நாளை முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் நடைபயிற்சி செல்வோருக்கும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது


  • 20:15 (IST) 01 Jan 2022
    மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா

    மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


  • 19:40 (IST) 01 Jan 2022
    தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்வு

    தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானில் இருந்து 97 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் மேலும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


  • 18:55 (IST) 01 Jan 2022
    புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெற்றது; பொதுமக்களுக்கு நன்றி - தமிழக காவல்துறை

    ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெற்றது. ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கு நன்றி என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


  • 18:11 (IST) 01 Jan 2022
    சிவகாசி அருகே வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

    சிவகாசி அருகே வெடி விபத்தில் 4 பேர் இறந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


  • 18:09 (IST) 01 Jan 2022
    ஜனவரி 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம்

    தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என சட்டப்பேரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார்


  • 17:52 (IST) 01 Jan 2022
    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் வடிவேலு குணமடைந்தார்

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் வடிவேலு குணமடைந்தார். நடிகர் வடிவேலு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது


  • 17:42 (IST) 01 Jan 2022
    கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை

    கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், தேவைக்கேற்ப தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்கவும், வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது


  • 17:25 (IST) 01 Jan 2022
    RRR திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

    கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது


  • 17:17 (IST) 01 Jan 2022
    கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

    பொங்கல் பரிசுக்கு வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய கோரி, விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொள்முதல் செய்யும் கரும்புக்கு அரசு அறிவித்த விலையை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்


  • 16:47 (IST) 01 Jan 2022
    குவாரியில் திடீரென நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு!

    ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள குவாரியில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.


  • 16:44 (IST) 01 Jan 2022
    அரசு நில ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நீதிமன்றம்!

    அரசு நில ஆக்கிரமிப்புக்களை கண்டறியவும், அகற்றவும் அதிரடிப்படை அமைக்கப்பட்டதா என சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


  • 16:41 (IST) 01 Jan 2022
    சென்னையில் தொடர்மழை; 2 சுரங்கப்பாதைகள் மூடல்!

    சென்னையில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால், மழைநீர் தேங்கியுள்ளதால் மேட்லி மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.


  • 16:38 (IST) 01 Jan 2022
    வளர்ச்சியை அதிகரிப்பதே எதிர்காலத்தின் முக்கிய பணி: வடகொரிய அதிபர்!

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, அவசர கால தொற்றுநோய்களுக்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமே, எதிர்காலத்தின் முக்கிய பணிகளாக இருக்கும் என அவர் அறிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


  • 16:15 (IST) 01 Jan 2022
    பட்டாசு ஆலை வெடித்து 4 தொழிலாளர்கள் இறந்த சம்பவம்; ஆலை உரிமையாளர் மீது வழக்கு!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உரிய உரிமம்மின்றி ஆலை நடத்தியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


  • 16:10 (IST) 01 Jan 2022
    தி கிரேட் இந்தியன் கிச்சன்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

    தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா, தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


  • 15:48 (IST) 01 Jan 2022
    ஆவடி, தாம்பரத்தில் புதிதாக இரு காவல் ஆணையகரங்கள் திறப்பு!

    புதிதாக கட்டப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகம், ஆவடி சிறப்பு காவல்படை 2-ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகிய இரண்டு கட்டடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


  • 15:31 (IST) 01 Jan 2022
    அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 15:29 (IST) 01 Jan 2022
    சென்னை சர்வதேச திரைப்பட விழா: 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி!

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 53 நாடுகளின் 100 படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச திரைப்பட விழாவில், 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் இ. தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


  • 15:08 (IST) 01 Jan 2022
    நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டு வாழ்த்து!

    ட்வீட்டரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்


  • 15:02 (IST) 01 Jan 2022
    இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் ஏற்றுமதி!

    இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 15:01 (IST) 01 Jan 2022
    டிசம்பர் மாதம் மட்டும் ரூ.1.29 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

    2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும், ரூ.1.29 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


  • 15:01 (IST) 01 Jan 2022
    வீடுமுன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

    சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் வீடுமுன் கூடியிருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


  • 14:48 (IST) 01 Jan 2022
    புத்தாண்டு கொண்டாட்டம்: டாஸ்மாக்கில் ரூ.147.69 கோடிக்கு மதுவிற்பனை!

    தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.147. 69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.


  • 14:47 (IST) 01 Jan 2022
    கடந்தாண்டு ரூ.70 லட்சம் கோடி வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

    இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம், ரூ.70 லட்சம் கோடி வரை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதுதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


  • 14:47 (IST) 01 Jan 2022
    ஜம்மு-காஷ்மீர் கோயிலில் பக்தர்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

    ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.


  • 14:46 (IST) 01 Jan 2022
    புத்தாண்டு: கலைஞர், அண்ணா நினைவிடத்தின் ஸ்டாலின் மரியாதை!

    புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


  • 14:30 (IST) 01 Jan 2022
    தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும் - நாராயணசாமி

    புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்தால் முதல்வர் ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு


  • 14:29 (IST) 01 Jan 2022
    ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் 148 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது ரூ. 159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  • 14:28 (IST) 01 Jan 2022
    இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர் மோடி

    கடந்த ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் 70 லட்சம் கோடி வரை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய பொருளாதாரம் 8% வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.


  • 14:06 (IST) 01 Jan 2022
    இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தல்

    பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


  • 14:05 (IST) 01 Jan 2022
    157 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு

    சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த 157 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் பாரதி பவார் அறிவித்துள்ளார். பல மாநிலங்களில் நிலம் கிடைக்காத காரணத்தால் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சு


  • 13:40 (IST) 01 Jan 2022
    தமிழக மீனவர்களை மோடி கண்டு கொள்வதில்லை - வைகோ

    குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் மோடி துடிக்கிறார். தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை. பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை ஏற்படுத்த வேண்டும் என்று மதிமுக தலைவர் பேச்சு


  • 13:13 (IST) 01 Jan 2022
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு

    சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டார் விலை ரூ. 103.50 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 2131க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது


  • 12:40 (IST) 01 Jan 2022
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

    இஸ்ரேலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு ப்ளோரனா என்று பெயரிட்டுள்ளது அந்நாடு.


  • 12:37 (IST) 01 Jan 2022
    ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார் நடிகர் ரஜினி

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.


  • 12:35 (IST) 01 Jan 2022
    புத்தாண்டு கொண்டாட்டம் - 269 வழக்குகள் பதிவு

    சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நபர்கள் மீது 269 வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 பேர் மீது வழக்கு


  • 12:34 (IST) 01 Jan 2022
    தாம்பரம் காவல் ஆணையராக எம்.ரவி நியமனம்

    சிறப்பு அதிகாரிகளாக இருந்ந்த எம்.ரவி மற்றும் சந்தீப் ராய் ஆகியோருக்கு காவல் ஆணையர்களாக பதவி நியமன ஆணையை வழங்கி உத்தரவிட்டுள்ளார் கூடுதல் தலைமை செயலளார்.


  • 11:39 (IST) 01 Jan 2022
    ஆர்.எம்.சி. செயல்பாடுகளை மேம்படுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம்

    சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாடுகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புயல் போன்ற 'ரெட் அலர்ட்' சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மேற்கோள்.


  • 11:04 (IST) 01 Jan 2022
    மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று

    மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.


  • 10:26 (IST) 01 Jan 2022
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு

    சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 அறைகள் மொத்தமாக தரைமட்டம் ஆன நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன


  • 09:43 (IST) 01 Jan 2022
    இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 8,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 406 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 09:43 (IST) 01 Jan 2022
    இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 8,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 406 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,270 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,431 ஆக அதிகரித்துள்ளது.


  • 09:40 (IST) 01 Jan 2022
    இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 8,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 406 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 08:29 (IST) 01 Jan 2022
    சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - முன்பதிவு தொடங்கியது

    15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. Cowin இணையதளத்தில் ஆதார், பாஸ்போர்ட் அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்


Tamilnadu Petrol Diesel Rate Omicron Happy New Year Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment