Tamil news today: கொரோனா ஊரடங்கு காரணமாக ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவு கிடைக்காத நிலையில், பணம் கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்கவேண்டும் என்பதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 80 வயதான அவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் சளி இருந்து வந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காதர் மொய்தீன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tamil news today news in tamil : லைவ் அப்டேட்ஸ்
பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே, இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. முதலில் வெடிகுண்டு தாக்குதல் என அச்சம் நிலவியது. ஆனால், துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்கல் வெடித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி – பிற்பகல் 12.30 மணிக்கு பூமி பூஜை துவங்கும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், விநியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் முதல் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இன்னும் இலவச முக கவசங்கள் வழங்கப்படவில்லை.
தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது
பல்வேறு சிறப்பம்சம் கொண்ட புதிய கல்விக்கொள்கையை வரவேற்காமல் வசைபாடுவோருக்கு காலம் பதில் சொல்லும்.
அதிமுக - பாஜக வெவ்வேறு அரசியல் கட்சிகள் என்பதுடன் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம்
அதிமுக கொடியிலிருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து
- சி.பி.ராதாகிருஷ்ணன்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்
எளிய குடும்பங்களை சேர்ந்த பலர் சாதனை புரிந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
மாற்றுத்திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரன் வெற்றி பெற்றது பலருக்கும் ஒளிவிளக்காக திகழும்
-டிடிவி தினகரன்
சினிமா படபிடிப்புக்கு அனுமதி வழங்க தற்போது வாய்ப்பு இல்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர், திரையரங்குகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிடவில்லை எனக் கூறினார்.
தி.மலை - 112
மதுரை -106
தஞ்சை- 79
விழுப்புரம் -77
திண்டுக்கல்-71
சிவகங்கை- 69
நாகை- 52
கரூர்-50
ஈரோடு - 40
நீலகிரி - 36
அரியலூர்- 36
ராமநாதபுரம்- 32
நாமக்கல்- 31
திருப்பூர்- 27
நெல்லை- 26
திருவாரூர்- 21
பெரம்பலூர் -20
க.குறிச்சி- 18
தர்மபுரி - 17
கிருஷ்ணகிரி- 13
திருப்பத்தூர்-12
திமுகவிலிருந்து தம்மை நீக்கினாலும் கவலையில்லை என்று அக்கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமையமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ராமர் படத்திற்கு மலர்தூவி வணங்கினார். பாஜக மூத்த நிர்வாகிகள், கு.க. செல்வத்திற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம் தி.மு.க.வில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு உழைக்கவே, தான் எம்.எல்.ஏவாக ஆனதாக கு.க. செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிப்பு . திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடை நீக்கம். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கு.க.செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த செய்தி பொய்யாக இருக்கவே தானும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க 'அயோத்தியில் ராமர் கோவில்' கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என, தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் இராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 4, 2020
கர்நாடகாவில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்,ந்த ஒரு தனியார் மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு தான் தற்போது தேவை என்றும் சி.என்.ராஜா கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 4, 2020
டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், முடிந்தால் திமுக தலைமை தன் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளட்டும் என்றார்..
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights