Tamil News Today: ‘மணலியில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் சேஃப்’ – சுங்கத்துறை நம்பிக்கை

today news in tamil : தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

By: Aug 6, 2020, 10:29:28 PM

Tamil News Today Updates: தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறினார்.

வங்கக் கடலில் மீண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள் ஷ்ரே மருத்துவமனையில் அதிகாலை 3.30 மணிக்கு ஐசியூ வார்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க அறிவித்துள்ளார்.

தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்தியை அறிந்துகொள்ள ஐ.இ. தமிழ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Live Blog
Tamil nadu news today live updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:29 (IST)06 Aug 2020
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 67.62% ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 51,706 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,82,215 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதமும் 67.19% உள்ளது. கொரோனா நோயாளிகளில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 14 நாட்களில் மட்டும் 63.8% பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22:20 (IST)06 Aug 2020
கல்லூரியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்: உயர்கல்வித்துறை

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது, மதிப்பெண் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

22:07 (IST)06 Aug 2020
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச முன்னிலை - 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டார் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா ஒன்பது லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் அனுரகுமார திசா நாயக்கவும், 4வது இடத்தில் இலங்கை தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த சம்பந்தனும் உள்ளனர். இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

21:48 (IST)06 Aug 2020
போக்குவரத்து மாற்றம்

ஆக.8,10,13 தேதிகளில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம்

உழைப்பாளர் சிலை டூ போர் நினைவுச்சின்னம் வரை, காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரையும், ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை

21:47 (IST)06 Aug 2020
’ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து’

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து

கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு - மோடி

20:54 (IST)06 Aug 2020
'கர்நாடகாவில் மேலும் 6,805பேருக்கு கொரோனா'

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 6,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,58,254 ஆக அதிகரிப்பு

மேலும் 93 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

20:54 (IST)06 Aug 2020
740 டன் அம்மோனியம் நைட்ரேட்

சென்னை அருகே மணலியில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

நகரத்திலிருந்து 20 கி.மீ மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் பாதுகாப்பாக உள்ளது

ஏலம் விடப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை

- சுங்கத்துறை

20:53 (IST)06 Aug 2020
'மகாராஷ்டிராவில் மேலும் 11,514 பேருக்கு கொரோனா'

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,79,779 ஆக அதிகரிப்பு.

மேலும் 316 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

20:48 (IST)06 Aug 2020
தொலைநோக்கு ஆவணம்

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொலைநோக்கு ஆவணம் - புதிய கல்விக் கொள்கை குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கருத்து

20:35 (IST)06 Aug 2020
சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும்

பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கம் தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும்

- தயாரிப்பாளர் சங்கம் கூட்டாக அறிக்கை

20:34 (IST)06 Aug 2020
சிபிஐ வழக்குப்பதிவு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

19:53 (IST)06 Aug 2020
500 ஆம்புலன்ஸ்

‘மக்களின் அவசர தேவைக்காக 500 ஆம்புலன்ஸ்கள் சுமார் 103 கோடி ரூபாயில் வாங்கப்படும்’ என மதுரையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

19:36 (IST)06 Aug 2020
பைஜூஸ் மற்றும் கொகோ கோலா

ஐபிஎல் 2020 போட்டிக்கான புதிய டைட்டில் ஸ்பான்ஸர்களாக பைஜூஸ் மற்றும் கொகோ கோலா இடையே கடும் போட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

19:17 (IST)06 Aug 2020
சென்னையில் 1091

சென்னையில் மேலும் 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு

* சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.06 லட்சம்

* சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,593 பேருக்கு கொரோனா

19:15 (IST)06 Aug 2020
5,684 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,684 பேர் கொரோனாவால் பாதிப்பு!

மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரிப்பு

இன்று மேலும் 110 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4,571 ஆக அதிகரிப்பு

19:08 (IST)06 Aug 2020
மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை

கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை

எதிர்க்கட்சிகள் புகாரில் எந்த அடிப்படையும் இல்லை

மாவட்ட வாரியாக விவரங்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறோம்

- முதலமைச்சர் பழனிசாமி

18:56 (IST)06 Aug 2020
கூடுதலாக ஒரு குழு அமைப்பு

இ-பாஸ் வழங்குவதில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்பதற்காகவே கூடுதலாக ஒரு குழு அமைப்பு

* தேவையின்றி வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையில் இருக்கிறது

- முதல்வர் பழனிசாமி

18:56 (IST)06 Aug 2020
12,000 காய்ச்சல் முகாம்

மதுரை மாவட்டத்தில் 1,63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது; மேலும் 12,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை கனவு நனவாகி வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன

- முதலமைச்சர் பழனிசாமி 

18:44 (IST)06 Aug 2020
மதுரையில் 7 பேர் பிளாஸ்மா தானம்

305 கோடி மதிப்பில் அரசு இராஜாஜி மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளது

மதுரையில் 7 பேர் பிளாஸ்மா தானம் செய்து உள்ளனர்;

பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன் வர வேண்டும்!”

- முதல்வர் பழனிசாமி

18:23 (IST)06 Aug 2020
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

அடுத்து இரண்டு நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

17:59 (IST)06 Aug 2020
வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

தென்காசி : வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

17:58 (IST)06 Aug 2020
பொதுஜன பெரமுன கட்சி தொடர்ந்து முன்னிலை

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி தொடர்ந்து முன்னிலை

ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி - 67.03%, சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி கட்சி - 16.99%, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி - 2.34% சம்பந்தனின் தமிழ் அரசு கட்சி - 2.28% வாக்குகள் பெற்றுள்ளன.

17:57 (IST)06 Aug 2020
4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு

கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் வழங்கினர்

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் - இயக்குநர் ஷங்கர்

படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின் படி நடப்போம் - கமல்ஹாசன்

17:24 (IST)06 Aug 2020
பொதுநலன் ஏதுமில்லை

டாஸ்மாக் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பொதுநலன் ஏதுமில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

17:24 (IST)06 Aug 2020
உடல்நிலை சீராக உள்ளது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது - தனியார் மருத்துவமனை அறிக்கை.

17:23 (IST)06 Aug 2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

13-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனம் விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

16:50 (IST)06 Aug 2020
யாராலும் பிரிக்க முடியாது

திமுகவில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது என எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்பும் நபர்களுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

16:26 (IST)06 Aug 2020
ரூ.356 கோடியில் கே.புதூரில் தொழிற்பேட்டை

வைகை ந‌தி மேம்பாட்டிற்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.167 கோடி ஒதுக்கீடு

சிறுகுறு தொழில் நிறுவன மேம்பாட்டிற்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு

ரூ.356 கோடியில் கே.புதூரில் தொழிற்பேட்டை

ரூ.217 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன

- முதலமைச்சர் அறிவிப்பு

16:14 (IST)06 Aug 2020
மதுரையில் பாதிப்பு குறைந்து வருகிறது

மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது

அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

மதுரையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

- முதலமைச்சர் பழனிசாமி

16:13 (IST)06 Aug 2020
திருமாவளவனின் சகோதரி உயிரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பானுமதி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பானுமதி கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

16:00 (IST)06 Aug 2020
காஞ்சிபுரத்தில் இன்று புதியதாக மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரத்தில் இன்று புதியதாக மேலும் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,938 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 7,675 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,846 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15:10 (IST)06 Aug 2020
தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: “தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படும்” என்று கூறினார்.

15:08 (IST)06 Aug 2020
மதுரையில் கொரோனா சிகிச்சை நல மையத்தை திறந்துவைத்தார் - முதல்வர் பழனிசாமி

மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். தொழில்நுட்ப பூங்காவில் 900 படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிகிச்சை நல மையம் அமைக்கப்பட்டுள்ளது.

15:06 (IST)06 Aug 2020
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட 2 வீரர்களும் கடலோர பாதுகாப்புப்படை குடியிருப்பில் உள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14:07 (IST)06 Aug 2020
துப்பாக்கிச்சூடு வழக்கில் திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கடந்த மாதம் திருப்போரூர் அருகே நிலத் தகராறில் திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் அவரது தந்தை ஆகியோர் எதிர்தரப்பினரிடம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன், அவரது தந்தை உள்பட பலர் கைது செய்யபட்டன.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

13:37 (IST)06 Aug 2020
சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்; மக்கள் அச்சப்படத் தேவையில்லை - சுங்கத்துறை விளக்கம்

லெபனானில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் 740 டன் அம்மோனியர் நைட்ரேட் இருப்பது குறித்து கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது. அதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

12:54 (IST)06 Aug 2020
எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துவிடுவார் - முதல்வர்

திண்டுக்கல்லில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “எஸ்.வி.சேகருக்கு கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துவிடுவார். எஸ்.வி.சேகர் சரியாக செயல்படாததால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எஸ்.வி.சேகருக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. எஸ்.வி.சேகர் பாஜகவில் தான் இருக்கிறாரா? அவர் பிரசாரத்திற்கு வரவேயில்லை. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.

12:51 (IST)06 Aug 2020
இருமொழிக் கொள்கையை தொரும்; அறிவிப்பு விரைவில் வெளிவரும் - முதல்வர் பழனிசாமி

திண்டுக்கல்லில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது போல இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்று கூறினார்.

12:17 (IST)06 Aug 2020
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 4% சதவீத வட்டி தொடரும். வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டியும் உயர்த்தப்படவில்லை. வீடு மற்று வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்த்தப்படவில்லை. ரிவர்ஸ் வட்டி விகிதம் 3.3% ஆக தொடரும். சர்வதேச அளவில் பொருளாதார சூழல் சிதைந்துள்லது. ஜூன் மாதத்தில் இறக்குமதி குறைந்துள்ளது என்று கூறினார்.

11:44 (IST)06 Aug 2020
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு

இந்தியாவில் நடப்பு ஆண்டில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மிக அதிகபட்சமாக 58 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:40 (IST)06 Aug 2020
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி 2ஆம் கட்ட பரிசோதனை

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி 2ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. ஜூலை 23ல் தடுப்பூசி போடப்பட்டு ஆரோக்கியமாக உள்ள 2 தன்னார்வலர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது.

11:37 (IST)06 Aug 2020
விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி திருமதி.பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தொல்.திருமாவளவனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

11:32 (IST)06 Aug 2020
விழுப்புரம் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு; தொல்லியல் ஆய்வு நடத்த மக்கள் கோரிக்கை!

விழுப்புரம் அருகே கொடுக்கையூரில் செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள், பானைகள், மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

11:23 (IST)06 Aug 2020
வேகமாக நிரம்பிவரும் பவானிசாகர் அணை; உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்

பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

11:20 (IST)06 Aug 2020
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்க்காகவும் பிறந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்திட வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11:17 (IST)06 Aug 2020
வேலூரில் இன்று ஒரே நாளில் புதியதாக 199 பேருக்கு கொரோனா தொற்று

வேலூரில் இன்று ஒரே நாளில் புதியதாக 199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7004 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வேலூரி கொரோனா பாதிப்பால் 74 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரில் தற்போது 997 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil news today news in tamil : இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 904 பேர் உயிரிழந்துள்ளனர். 46,121 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Web Title:Tamil news today news in tamil corona virus updates chennai weather modi ramar temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X