Advertisment

Tamil News Today: 'மும்மொழிக் கொள்கையில் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை' - தமிழக பாஜக

News Today: தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த மறுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil News Today: 'மும்மொழிக் கொள்கையில் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை' - தமிழக பாஜக

TN Latest News Updates

news today : புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

Advertisment

பிரசாத் ஸ்டுடியோ உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள தனது பிரத்யேக அறையில் இருந்து விலை உயர்ந்த இசை கருவிகள், இசை குறிப்புகள் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு கடித​​ம் எழுதியுள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என அதில் வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த மறுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. வீட்டுக்கல்வி என்ற முறையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:06 (IST)03 Aug 2020

    இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை

    மும்மொழிக் கொள்கையில் இந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

    22:05 (IST)03 Aug 2020

    நீர் வரத்து- 3,009 கன அடி

    கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை

    ஹாரங்கி அணைக்கான நீர் வரத்து- 3,009 கன அடியாகவும், வெளியேற்றம் - 4,750 கன அடியாகவும் உள்ளது

    மொத்த கொள்ளளவு- 2859 அடி

    22:03 (IST)03 Aug 2020

    பந்த்ரா காவல்துறைக்கு முன்பே தெரியும்

    சுஷாந்தின் உயிருக்கு ஆபத்து என்று பிப்ரவரி 25 ஆம் தேதியே மும்பை, பந்த்ரா காவல்துறைக்கு தெரியும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    - தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தந்தை

    21:55 (IST)03 Aug 2020

    'மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது?' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    சமூக இடைவெளியை காரணம் காட்டி மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால், மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞர் சுதா வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதிகள், அப்படியானால் மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

    21:28 (IST)03 Aug 2020

    தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது - சென்னை உயர்நீதிமன்றம்

    உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பீஹார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் ரவுடிகள், அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்யப்படுவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர். இது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

    21:05 (IST)03 Aug 2020

    'கேரளாவில் மேலும் 962 பேருக்கு கொரோனா'

    கேரளாவில் ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    கடந்த 24 மணி நேரத்தில் 815 பேர் கொரோனாவிலிருந்து குணம்; 11,454 பேர் சிகிச்சையில் உள்ளனர்

    20:50 (IST)03 Aug 2020

    8,968 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று புதிதாக 8,968 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 266 பேர் உயிரிழப்பு.

    மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 15,842 ஆக அதிகரிப்பு.

    20:50 (IST)03 Aug 2020

    மும்பைக்கு ரெட் அலர்ட்

    ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    20:27 (IST)03 Aug 2020

    முதல்வருக்கு திருச்சி சிவா எம்.பி வேண்டுகோள்

    புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வரின் அறிக்கையில், மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில், மற்ற கருத்துக்களை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் - முதல்வருக்கு திருச்சி சிவா எம்.பி வேண்டுகோள்

    20:24 (IST)03 Aug 2020

    கொரோனா தொற்று உறுதி

    மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி

    10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா உறுதியானது

    20:14 (IST)03 Aug 2020

    அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

    ஆக.15 சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து ராஜ்பவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:51 (IST)03 Aug 2020

    'கர்நாடகாவில் மேலும் 4,752 பேருக்கு கொரோனா'

    கர்நாடகாவில் ஒரே நாளில் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,39,571ஆக அதிகரிப்பு

    மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    19:50 (IST)03 Aug 2020

    7,822 பேருக்கு கொரோனா

    ஆந்திராவில் ஒரே நாளில் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,66,586 ஆக அதிகரிப்பு

    மேலும் 63 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    19:44 (IST)03 Aug 2020

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் கிளாஸ் தொடக்கம்

    மாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை 2, 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.

    ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேக வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் பாடங்கள் பற்றிய தகவல்கள், கால அட்டவணை உள்ளிட்டவை புதுப்பிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று, பாடங்களை கற்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதை பேராசிரியர்கள் உறுதி செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

    ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    19:39 (IST)03 Aug 2020

    கறுப்பர் கூட்டத்தின் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

    கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகனுக்கு ஜாமீன்.

    19:14 (IST)03 Aug 2020

    வானதி சீனிவாசன் கேள்வி

    திமுகவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கை கற்பிக்கப்படுகிறது; ஆனால் அரசு பள்ளிகளில் அமல்படுத்தக் கூடாது என திமுக எதிர்ப்பது ஏன்? 

    - பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி

    19:09 (IST)03 Aug 2020

    புதுச்சேரியில் ஆட்சி

    புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    19:06 (IST)03 Aug 2020

    தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்!

    சென்னை- 20

    விருதுநகர்- 9

    கோவை - 7

    ராணிப்பேட்டை- 4

    புதுக்கோட்டை - 4

    செங்கல்பட்டு-4

    மதுரை - 4

    தூத்துக்குடி- 4

    திருவள்ளூர்- 4

    தி.மலை - 4

    காஞ்சிபுரம்- 5

    தேனி- 5

    தென்காசி- 5

    சிவகங்கை- 5

    நெல்லை- 5

    குமரி - 3

    சேலம்- 3

    18:51 (IST)03 Aug 2020

    டெல்லியில் மேலும் 805 பேருக்கு கொரோனா

    டெல்லியில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரிப்பு

    மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு

    18:39 (IST)03 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 2

    புதுக்கோட்டை- 86

    நெல்லை- 85

    தென்காசி- 75

    திண்டுக்கல்- 75

    கிருஷ்ணகிரி- 67

    க.குறிச்சி- 66

    சேலம்- 66

    சிவகங்கை- 64

    ராமநாதபுரம்- 62

    திருப்பூர்- 45

    திருப்பத்தூர்- 44

    நாமக்கல்- 43

    நீலகிரி -37

    நாகை- 32

    அரியலூர்- 20

    பெரம்பலூர் -19

    கரூர்-19

    தஞ்சை-18

    திருவாரூர்- 18

    ஈரோடு - 13

    தர்மபுரி - 4

    18:22 (IST)03 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 1

    சென்னை- 1021

    ராணிப்பேட்டை- 382

    விருதுநகர்- 348

    திருவள்ளூர்- 332

    செங்கல்பட்டு-331

    காஞ்சிபுரம்- 322

    தேனி- 305

    கோவை - 227

    குமரி - 215

    தூத்துக்குடி-215

    தி.மலை -212

    கடலூர்-167

    வேலூர் -134

    மதுரை -106

    திருச்சி-101

    விழுப்புரம் - 90

    18:21 (IST)03 Aug 2020

    2 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

    இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்வு.

    18:11 (IST)03 Aug 2020

    பலி எண்ணிக்கை 2,176

    சென்னையில் இன்று 20 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,176 ஆக உயர்வு

    சென்னையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்தது..

    18:03 (IST)03 Aug 2020

    5,609 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

    சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    இன்று மட்டும் 109 பேர் உயிரிழப்பு

    - தமிழக சுகாதாரத் துறை

    17:38 (IST)03 Aug 2020

    மயிலாடுதுறை திமுக எம்.பி திருவிடைமருதூர் செ.ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி

    மயிலாடுதுறை திமுக எம்.பி திருவிடைமருதூர் செ.ராமலிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2 எம்.பி. 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:34 (IST)03 Aug 2020

    அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு

    அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 5ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு வருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:32 (IST)03 Aug 2020

    ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

    ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:23 (IST)03 Aug 2020

    மும்மொழி வேண்டாம்: தமிழக முதல்வருக்கு நன்றி - திருமாவளவன்

    மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ஆனால், பிறபாதிப்புகள் பற்றி தமிழகஅரசின் நிலை குறித்து எதுவும் இல்லை. உடனே சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முற்றாக மறுதலிக்கவேண்டும். அதனை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    17:18 (IST)03 Aug 2020

    ராணிப்பேட்டையில் கொரோனாவால் இறந்த செவிலியர் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

    ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    17:16 (IST)03 Aug 2020

    ‘ஜிம்’களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

    ‘ஜிம்’களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

    17:13 (IST)03 Aug 2020

    மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் - அமைச்சர் தங்கமணி

    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி: மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நாளை பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

    16:38 (IST)03 Aug 2020

    பேரறிவாளனுக்கு பரோல் கோரி வழக்கு; பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? ஐகோர்ட் கேள்வி

    பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரி தாய் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    16:35 (IST)03 Aug 2020

    புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளை பறிக்கும் அம்சங்களை அனுமதிக்க கூடாது டிடிவி தினகரன்

    மும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    16:30 (IST)03 Aug 2020

    தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல - ஐகோர்ட் வேதனை

    தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவிவருவது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல என்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    16:22 (IST)03 Aug 2020

    புதிய கல்வி கொள்கையை ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் குழுவை அமைக்கிறது தமிழக அரசு

    தமிழக அரசு புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறது. இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

    15:58 (IST)03 Aug 2020

    புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம்; கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் மநீம தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்தார். பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என கமல்ஹாசன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    15:40 (IST)03 Aug 2020

    ராணிப்பேட்டையில் இன்று சி.ஐ.எஸ்.எஃப் படையினர் 64 பேர் உள்பட 394 பேருக்கு கொரோனா

    ராணிப்பேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 65 பேர் உட்பட 394 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    14:48 (IST)03 Aug 2020

    திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் இயக்குனர் பாரதிராஜா

    இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ‘திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார். இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    14:04 (IST)03 Aug 2020

    கொரோனா அறிகுறி, நயினார் நாகேந்திரன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

    பாஜக கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருப்பது உண்மை தான். ஆனால், கட்சி மாறப் போகிறேன் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர்  நயினார் நாகேந்திரன்  தெரிவித்தார்.     

    இதற்கிடையே நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாகவும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    13:55 (IST)03 Aug 2020

    COVISHIELD-ன் 2ம் மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி COVISHIELD-ன் 2ம் மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    13:16 (IST)03 Aug 2020

    நன்றி சொன்ன வைரமுத்து!

    இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி எனவும் வைரமுத்து. தெரிவித்துள்ளார். 

    13:14 (IST)03 Aug 2020

    17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு எனவும், கோவை,நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    13:04 (IST)03 Aug 2020

    சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை!

    தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது எனவும் கூறியுள்ளார். சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு இருப்பதால் அனுமதி தர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:48 (IST)03 Aug 2020

    எம்.எல்.ஏ கருணாஸ்!

    மும்மொழிக் கொள்கை மோசடி, இரு மொழிக் கொள்கை ஏமாற்று என்று  எம்.எல்.ஏ கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    12:45 (IST)03 Aug 2020

    கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா!

    சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்போதுதான் எனது கரோனா பரிசோதனை முடிவு வந்தது. எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    11:48 (IST)03 Aug 2020

    நன்றி சொன்ன மு.க ஸ்டாலின்!

    மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி . மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும்  என்று  மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

    11:21 (IST)03 Aug 2020

    விலையில்லா பாட புத்தகங்கள்!

    தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

    11:10 (IST)03 Aug 2020

    ஆய்வாளர் பணியிடமாற்றம்!

    சென்னையில் மாஞ்சா நூல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஆய்வாளர் ரஜீஸ்பாபுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் அருண் உத்தரவிடுள்ளார். 

    10:49 (IST)03 Aug 2020

    மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் அறிவிப்பு!

    மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர்.  புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

    10:46 (IST)03 Aug 2020

    அமைச்சர் செங்கோட்டையன்!

    100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று முதல் தனியார் தொலைக்காட்சிகள் பாடங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

    News Today: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை, மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், பயிற்சி மற்றும் போட்டிகளை தொடங்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரிக்கை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பு தடமறிதல், ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

    இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ், இன்று முதல் முதலீடு செய்யலாம். ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். ஒரு கிராம் 5 ஆயிரத்து 334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் தொகைக்கு 2 புள்ளி 5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்சா பந்தன் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    Tamilnadu Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment