பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 483-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
சென்னையில் கனமழை – விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் கனமழை காரணமாக 12 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. ஐதராபாத், டெல்லி, மும்பை, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 விமான சேவைகள் தாமதமாகின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும் தாமதமாக புறப்பட்டன
சனாதனத்தை தொட்டால் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் – அண்ணாமலை
சனாதனத்தை தொட்டால் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும். எந்த தனிக்கட்சியும் சந்திக்காத தோல்வியை இந்தியா கூட்டணி சந்திக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
வரும் 28-ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் - தலைமை காஜி
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி பிறை தென்பட்டால் மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்
காட்பாடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் காட்பாடிக்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
குளித்தலை அருகே குடிநீர் பாட்டிலில் செத்துக்கிடந்த பல்லி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது
‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி நாளை வெளியீடு
நாளை வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது
முதலை கடித்து முதியவர் மரணம்
கடலூர், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சுந்தரமூர்த்தி (54) என்பவரை முதலை கடித்து இழுத்து சென்றது. 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினரால் சுந்தரமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ், தாசில்தார், போலீசார் சம்பவ இடத்தில் இல்லாததால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
ஸ்ரீபெரும்புதூர் சோகண்டியில் பாஜக இளைஞரணி செயலாளராக இருந்த விஸ்வா என்பவர் தமிழக போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இவர் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜூன் 27ஆம் தேதி சிறையில் இருந்து வெளிவந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவந்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்துக்கு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு, பாரம்பரிய கைவினை கலைஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பாபு பேட்டியளித்தார்.
காவிரி நதி நீர்- மு.க. ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
லாரி மோதி விபத்து: காவலர் பலி
விருதுநகர், நரிக்குடி அருகே பணியில் இருந்த காவலர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் ராஜேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் தலைமறைவான நிலையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போபால் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து: கமல்நாத் அறிவிப்பு
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வீரலட்சுமியை முற்றுகையிட்ட நாம் தமிழர்
தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி திருவள்ளூரில் கோயிலுக்கு வந்த நிலையில், அவரைத் தடுத்து நிறுத்தி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால், தமிழர் முன்னேற்ற படை அமைப்பினர் - நாம் தமிழர் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்திய சர்வதேச மாநாடு, கண்காட்சி மையம்: நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி
டெல்லி துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டிடத்தை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்த இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் ரூ. 5400 கோடி செலவில் உருவாக்கப்படுள்ளது. 11,000 பேர் பங்கேற்கும் திறன் கொண்ட 13 கூட்ட அறைகள், 15 மாநாடு அறைகள் அமைப்புகள் உள்ளன.
புரட்டாசி பிரம்மோற்சவம்: திருப்பதிக்கு குடை ஊர்வலம்
புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்புறப்பட்டது
பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட 11 குடைகள், 9 குடைகள் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். 2 குடைகள் கீழ் திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது.
பாஜகவின் கனவு பழிக்காது: திருமாவளவன் பேட்டி
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விசிக வரவேற்கிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை விசிகவும் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணியும் ஏற்கவில்லை. I.N.D.I.A கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது அல்ல; பாஜக, சங்பரிவார்கள் கூட்டத்திற்கு எதிரானது. I.N.D.I.A கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜகவின் கனவு பழிக்காது - சென்னையில் திருமாவளவன் பேட்டி
காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜல்சக்தித்துறை அமைச்சருக்கு மனு
காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிட வலியுறுத்தி, துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் மனு அளிப்பார்கள்.
தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்க கர்நாடகாவிற்கு அறிவுரை வழங்க வலியுறுத்தப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க,ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
மா.சுப்பிரமணியன் பேட்டி
அடுத்த 10 நாட்களுக்குள் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும், 12 லட்சம் மாணவர்களுக்கு Madras Eye பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னையில் மா.சுப்பிரமணியன் பேட்டி
நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை
நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதாரர்களுக்கு செப்.18ம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும். 56.60 லட்சம் மகளிருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530க்கு விற்பனை
சீமான் ஆஜராக வேண்டும்
நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்- சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம்
விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு
நடிகை விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது சீமான் தரப்பு
ஆர்.என். ரவியின் செயலாளர் பணியிட மாற்றம்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிய இணைச் செயலாளர்களை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழக ஆளுநரின் செயலாளரான ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைச் செயலாளராக நியமனம்
கடையநல்லூரில் தீவிர சோதனை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் என்ஐஏ அதிகாரிகள்
ரசாலிபுரம் தெருவில் உள்ள இத்ரிஸ் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டு வரும் என்ஐஏ அதிகாரிகள்
இத்ரிஸ் செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து அழைப்பு வருவதாக தகவல்
தகவலின் அடிப்படையில் இத்ரிஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார். காரில் சென்றவர்கள் விரைந்து செயல்பட்டதால் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர், காரில் பற்றி எரிந்த நெருப்பை கட்டுப்படுத்தினர். கார் பற்றி எரிந்தது குறித்து, அவிநாசி காவல் துறையினர் விசாரணை
கோவையில் என்.ஐ.ஏ
கோவையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. உக்கடம் கார் வெடி விபத்து தொடர்பாக சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை
என்.ஐ.ஏ அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை
கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை. அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை என தகவல். சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை
இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது
ஹைதரபாத், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை
சென்னையில் கனமழை
சென்னை சென்ட்ரல், பெரியமேடு, எழும்பூர்,வடபழனி, அசோக் நகர், கே.கே. நகர், கோயம்பேடு, வளசரவாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
என்ஐஏ சோதனை - ரூ.60 லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை ரூ.60 லட்சம், 18,200 அமெரிக்க டாலர்கள், தீவிரவாதம் தொடர்பான புத்தகம் கையகப்படுத்தப்பட்டுள்ளது அரபு மொழி வகுப்பு எடுப்பதாக கூறி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைக்க பிரசாரம் செய்தது அம்பலம்
"ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்?" சென்னை உயர் நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது ஏன்? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன சிக்கல் உள்ளது? அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் இந்த கல்வி நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.