Advertisment

Tamil News: எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Ukraine Russia Conflict Latest News 14 March 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Tamil Nadu News Updates: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிட்சல் ஒபாமாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது

Advertisment

இன்று உக்ரைன்- ரஷ்யா 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை காணொலி வாயிலாக இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 130வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

ஒபாமாவுக்கு கொரோனா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிட்சல் ஒபாமாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது

கட்சியின் தலைவராக சோனியா தொடருவார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என டெல்லியில் நடந்த அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:18 (IST) 14 Mar 2022
    புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜெலென்ஸ்கி

    உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை காலை 9 மணிக்கு (13.00 GMT) அமெரிக்க நாடாளுமனறத்தில் உரையாற்றுவார் என்று அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தில் தெரிவித்தனர்.

    "புதினின் கொடூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கும், ரஷ்ய பொருளாதாரத்தை முடக்குவதற்கும் தனிமைப்படுத்துவதற்கும், உக்ரைனுக்கு மனிதாபிமான, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் சட்டத்தை இயற்றுவதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுதியுடன் உள்ளது" என்று அவர்கள் திங்களன்று எழுதினர். (ராய்ட்டர்ஸ்)



  • 21:48 (IST) 14 Mar 2022
    18ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அரசு தலைமை கொறடா அறிவிப்பு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்



  • 21:06 (IST) 14 Mar 2022
    ஹிஜாப் வழக்கு; பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ஆம் தேதி வரை கூட்டங்களுக்கு தடை

    ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ஆம் தேதி வரை அனைத்து வகையான கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது



  • 20:51 (IST) 14 Mar 2022
    உடனடி போர்நிறுத்தம் மற்றும் புதினுடன் நேரடிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி

    உக்ரைன் 'உடனடி' போர்நிறுத்தத்தை கோரியுள்ளது, அதே நேரத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார், என்று செய்தி நிறுவனம் DW தெரிவித்துள்ளது.



  • 20:28 (IST) 14 Mar 2022
    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டிற்கு மக்களவை ஒப்புதல்

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டிற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது



  • 19:54 (IST) 14 Mar 2022
    மத்திய சட்ட பிரிவுகள் ஜம்மு காஷ்மீரிலும் அமலுக்கு வந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

    370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் 890க்கும் மேற்பட்ட மத்திய சட்ட பிரிவுகள் ஜம்மு காஷ்மீரிலும் அமலுக்கு வந்துள்ளது என ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், அம்பேத்கரின் கனவு ஜம்மு காஷ்மீரிலும் நிறைவேறத் தொடங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்



  • 19:51 (IST) 14 Mar 2022
    புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்



  • 19:35 (IST) 14 Mar 2022
    டிகேஎம்-9 ரக அரிசியினை ரேசனில் விநியோகிப்பதை தவிர்க்க தமிழக அரசு முடிவு

    2022-23 பருவத்திலிருந்து டிகேஎம்-9 ரக அரிசியினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிடவும், ரேசனில் விநியோகிப்பதை தவிர்க்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது



  • 19:05 (IST) 14 Mar 2022
    4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பார்வையாளர்களை நியமித்தது பாஜக

    4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பார்வையாளர் மற்றும் துணை பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது. இதில் கோவா மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்



  • 18:27 (IST) 14 Mar 2022
    பிளஸ் 2 மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 16 வரை அவகாசம் - தேர்வுத்துறை

    பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:08 (IST) 14 Mar 2022
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

    பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



  • 18:07 (IST) 14 Mar 2022
    இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி

    இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி.



  • 17:39 (IST) 14 Mar 2022
    ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்

    ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்

    செய்யப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் நிர்வாக தலைவராகவும் தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் உள்ளார்.



  • 16:59 (IST) 14 Mar 2022
    உக்ரைன் - ரஷ்யா இடையேயான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை

    உக்ரைன் - ரஷ்யா இடையேயான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை கீவ் நகரில் நடைபெற்று வருகிறது. பெலாரஸ் மற்றும் துருக்கியில் நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கீவில் நடைபெற்று வருகிறது



  • 16:58 (IST) 14 Mar 2022
    சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ தொடர்பாக வழக்கு ஒத்திவைப்பு

    சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசாணையை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்



  • 16:29 (IST) 14 Mar 2022
    சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழக்கி உத்தரவிட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், வீட்டு சாப்பாடு அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரித்து, வழிபாடு தொடர்பாக நூல்களை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதி அளித்துள்ளது.



  • 16:25 (IST) 14 Mar 2022
    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து துறை நிர்வாக பிரிவு அலுவலகத்தில் நுழைந்த அதிகாரிகள் அதிரடி பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:57 (IST) 14 Mar 2022
    மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

    வடகிழக்கு பகுதி என்பது 8 மாநிலங்கள் சேர்ந்தது. வடகிழக்கு பகுதியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. வடகிழக்கு பகுதியில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார்



  • 15:54 (IST) 14 Mar 2022
    வரும் 18ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:32 (IST) 14 Mar 2022
    பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.



  • 15:25 (IST) 14 Mar 2022
    நடிகர் விஜய் காருக்கு வரி தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்



  • 14:58 (IST) 14 Mar 2022
    புதுவகை வைரஸ்.. விஜயபாஸ்கர் வேதனை!

    புதுவகை வைரஸ் உருவாகி உள்ளது என தகவல் வருவது வேதனையளிக்கிறது. வைரஸின் வீரியத்தை கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.



  • 14:43 (IST) 14 Mar 2022
    சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

    தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில், என்.எஸ்.இ. முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:42 (IST) 14 Mar 2022
    சீக்கியர்கள் விமானங்களில் கத்தியை எடுத்து செல்ல அனுமதி!

    விமானங்களில் கிர்பான் எனப்படும் கத்தியை எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கத்தியை எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



  • 14:15 (IST) 14 Mar 2022
    12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!

    இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசியும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.



  • 14:02 (IST) 14 Mar 2022
    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்!

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசு நிச்சயம் உதவும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.



  • 13:44 (IST) 14 Mar 2022
    நியூட்ரினோ திட்டம்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

    தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கூடாது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.



  • 13:44 (IST) 14 Mar 2022
    வன உயிரினங்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பு.. ஆ. ராசா கோரிக்கை!

    வன உயிரினங்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.



  • 13:25 (IST) 14 Mar 2022
    இந்தியாவில் பெட்ரோல் விலை 5% மட்டுமே உயர்வு!

    அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும், இந்தியா உயர்த்தவில்லை. பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50%க்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராளுமன்றத்தில் பேசினார்.



  • 13:24 (IST) 14 Mar 2022
    ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு!

    ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, வருமான வரித்துறை மேல்முறையீடு செய்த மனுவில் தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 12:59 (IST) 14 Mar 2022
    மைதானத்தில் நுழைந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு

    பெங்களூரில் நடக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்ட நான்கு இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



  • 12:35 (IST) 14 Mar 2022
    இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும்

    தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 16ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:33 (IST) 14 Mar 2022
    மேகதாதுவில் அணை கட்ட கூடாது - தம்பிதுரை

    மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களில் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க இயலும்? மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு



  • 12:32 (IST) 14 Mar 2022
    தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையல்ல - டி.ஆர். பாலு

    தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையல்ல. பழைய வட்டி விகிதத்தையே மீண்டும் வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 11:42 (IST) 14 Mar 2022
    வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது

    வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் கட்டாயம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



  • 11:41 (IST) 14 Mar 2022
    இன்று மதியம் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம் லோக் ஆயுக்தா ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



  • 11:40 (IST) 14 Mar 2022
    புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

    சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்



  • 10:47 (IST) 14 Mar 2022
    சென்னை தரமணியில் டி.எல்.எஃப் வளாக கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

    சென்னை தரமணியில் சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில் டிஎல்எஃப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து கட்டப்படவுள்ள அலுவலக வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்



  • 10:29 (IST) 14 Mar 2022
    கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்

    எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



  • 09:54 (IST) 14 Mar 2022
    புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

    புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 09:20 (IST) 14 Mar 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 36,168 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்



  • 09:11 (IST) 14 Mar 2022
    இன்று முதல் TET-க்கு விண்ணப்பிக்கலாம்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ltrb.tn.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 08:36 (IST) 14 Mar 2022
    இன்று முதல் பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெற்று முடிந்தது.



  • 08:36 (IST) 14 Mar 2022
    இன்று முதல் பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெற்று முடிந்தது.



  • 08:26 (IST) 14 Mar 2022
    ஜூன் 3 விக்ரம் திரைப்படம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியீடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.



  • 08:20 (IST) 14 Mar 2022
    கனடாவில் இந்திய மாணவர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

    கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றன.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment