Advertisment

Tamil News Today : டாஸ்மாக் புதிய டெண்டர் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 22nd december 2021 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை - மாநில தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பாதிப்பு பரவியுள்ளது.மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 65 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமாக 220 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

TNPSC Group-4 New 2022 | Eligibility and Job Opportunities | வேலைவாய்ப்பு | Indian Express Tamil

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதன்படி நேற்று, இங்கிலாந்தில் 90,629 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை - தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

2ஆவது காலிறுதியில் கர்நாடக அணிக்கு எதிரான ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இமாசல பிரதேசம் அணியை தமிழ்நாடு எதிர்கொள்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:22 (IST) 22 Dec 2021
    கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 பொருட்கள் வழங்கப்பட்டது . புத்தாடை, அரிசி, பருப்பு,ரவை, பால்பவுடர் உள்ளிட்ட 15 பொருட்கள் வழங்கப்பட்டது .



  • 20:54 (IST) 22 Dec 2021
    டெல்லியில் நிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

    இந்தியாவில் கொரோன மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்து வருகிறது. இநநிலையில், இன்னும் ஒரு வாரததில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகை வரிசையாக வரவுள்ள நிலையில், இந்த பண்டிகைகளின் கொண்டாட்டத்திற்கு டெல்லியில் தடை விதிக்கப்படுவதாக டெல்லி பேரிடர் மேலான்மை ஆணையம் அறிவித்து்ள்ளது.



  • 20:48 (IST) 22 Dec 2021
    ஒமைக்ரான் குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை

    இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் சற்று தனிந்துள்ள நிலையில், புதிதாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பின் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்நிலையில், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 20:45 (IST) 22 Dec 2021
    தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் - முத்தரசன்

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி முறையில் கைது செய்வதும் சுட்டு கொலை செய்வதும் வழக்கமாக இருந்து வரும் நிலையில், தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.



  • 20:35 (IST) 22 Dec 2021
    டாஸ்மாக் புதிய டெண்டர் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

    தமிழகம் முழுவதும், டாஸ்மாக் மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்காக புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இதில், பார்கள் அமைப்பதற்கான நிலத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த புதிய டெண்டர் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர் சங்கத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். .

    இந்த வழக்கு விசாரைணையில்,, டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பு, நிலத்தின் உரிமையாளர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால் போதும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெண்டருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, டெண்டர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.



  • 19:17 (IST) 22 Dec 2021
    சிறுவன் மரணம் - சிசிடிவி வெளியீடு

    சில நாட்களுக்கு முன் தள்ளுவண்டியில் 4 வயது ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ,இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், சிசிடிவி காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர்கள் இருவர் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்துவிட்டு செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது



  • 19:13 (IST) 22 Dec 2021
    தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்தது.

    தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவாரே தவிர கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது என்று கூறியுள்ளது.



  • 18:37 (IST) 22 Dec 2021
    பொங்கல் பரிசு தொகுப்பு - சுற்றறிக்கை

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



  • 18:36 (IST) 22 Dec 2021
    பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கலை உறுதி செய்ய ஆட்சியர் தலைமையில் குழு

    பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்த கூட்டுறவு சங்க பதிவாளர், அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்



  • 17:21 (IST) 22 Dec 2021
    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவையில் சசிகலாவின் உறவினரிடம் விசாரணை

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



  • 16:50 (IST) 22 Dec 2021
    சென்னையில் மீண்டும் பிளாஸ்டிக் சோதனை

    சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழு அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.



  • 15:56 (IST) 22 Dec 2021
    வராக நதி தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! போக்குவரத்து துண்டிப்பு!

    விழுப்புரம் மாவட்டம் வராக நதி தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து சிக்கியது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 15:50 (IST) 22 Dec 2021
    அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு!

    பொள்ளாச்சி அருகே கோயில் விழாவில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 15:49 (IST) 22 Dec 2021
    வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா!

    வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்த 48 நபர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று கூறினார்.



  • 15:40 (IST) 22 Dec 2021
    ஒமிக்ரான் பரவல் தீவிரம்: மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

    இந்தியாவில் இதுவரை 213 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே , ஒமிக்ரான் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.



  • 15:36 (IST) 22 Dec 2021
    மோசடி புகார்: முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு!

    மோசடி புகாரில் சிக்கி தலைமறைவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • 15:16 (IST) 22 Dec 2021
    'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் 4 நாட்களில் 456 பேர் பயன்!

    சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கவும், விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லாத சிகிச்சை அளிக்கும் வகையிலும், 'இன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 18ம் தேதி தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும், 610 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் விபத்துகளில் சிக்கி படுகாயமுற்ற 456 பேர், இத்திட்டத்தின் மூலம் நலம் பெற்று வருகின்றனர்.



  • 15:05 (IST) 22 Dec 2021
    தமிழகத்தில் மேலும் புதிய 2 தனியார் மருத்துவ கல்லூரிகள்!

    தமிழகத்தில் மேலும் 2 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



  • 15:04 (IST) 22 Dec 2021
    டாஸ்மாக் பார்களுக்கான டெண்டருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டருக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் டெண்டர் விண்ணப்பங்களை அனைவருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:04 (IST) 22 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவை 82% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது!

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை 82% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது எனவும், கொரோனா குறித்த 12 மணிநேர விவாதத்தில் 99 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர் என மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.



  • 15:04 (IST) 22 Dec 2021
    கொரோனா: வரலாற்றில் முதல்முறையாக மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை வளர்ச்சி!

    கொரோனா எதிரொலி காரணமாக, வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்கா மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை வளர்ச்சியை (0.1%), கண்டுள்ளது என தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 14:21 (IST) 22 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அமளியால் 49 மணி நேரம் 32 நிமிடங்கள் வீண்!

    பல்வேறு அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இதுவரை 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமளி, ஒத்திவைப்புகள் காரணமாக 49 மணி நேரம் 32 நிமிடங்கள் வீணானது என மாநிலங்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது.



  • 14:21 (IST) 22 Dec 2021
    மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க, சட்டவிதிகள் உள்ளதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

    சிலை கடத்தல் தடுப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்த சேகர் ராம் என்பவர் போலி பத்திரிகையாளர் என பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க, சட்டவிதிகள் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:11 (IST) 22 Dec 2021
    வலிமை படத்தின் விசில் தீம் இன்று வெளியீடு!

    போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகிறது. இதன் பாடல்கள், மேக்கிங் வீடியோ ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று வலிமை படத்தின் விசில் தீம் வெளியாகவுள்ளது.



  • 13:34 (IST) 22 Dec 2021
    கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

    சென்னை, மயிலாப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்



  • 13:17 (IST) 22 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் - வெங்கையா நாயுடு அதிருப்தி

    நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் அவை நிகழ்வுகள் குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார்



  • 13:03 (IST) 22 Dec 2021
    கொரோனா காரணமாக 327 ஆசிரியர்கள் உயிரிழப்பு

    கொரோனா காரணமாக கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 327 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது



  • 13:02 (IST) 22 Dec 2021
    கொரோனா காரணமாக 327 ஆசிரியர்கள் உயிரிழப்பு

    கொரோனா காரணமாக கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 327 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது



  • 13:00 (IST) 22 Dec 2021
    கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் தொடக்கம்

    சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மயிலாப்பூர் மின் மயானத்திற்கு சண்முகநாதனின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது



  • 12:53 (IST) 22 Dec 2021
    பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ

    ஒடிசா கடற்கரை பகுதியில் 500 கி.மீ தூரம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது



  • 12:47 (IST) 22 Dec 2021
    'இலக்கிய மாமணி' விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு

    'இலக்கிய மாமணி' விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது



  • 12:43 (IST) 22 Dec 2021
    கொடைக்கானல் அருகே பள்ளி சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்; பெற்றோர் உறவினர்கள் சாலைமறியல்

    கொடைக்கானல் அருகே பள்ளி சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், நியாயம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகிராம பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தும் கிராம மக்கள், 3-வது நாளாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்



  • 12:36 (IST) 22 Dec 2021
    அண்டை நாடுகளை சேர்ந்த 3,117 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை - மத்திய அரசு

    கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 117 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது



  • 12:27 (IST) 22 Dec 2021
    புதுச்சேரியில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    புதுச்சேரியில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனாவுக்கு 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்



  • 12:25 (IST) 22 Dec 2021
    பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு – மத்திய அரசு பதில்

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹேக் செய்த விவகாரத்தை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • 12:06 (IST) 22 Dec 2021
    ஆந்திராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு

    ஆந்திராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவில் இருந்து சென்னை வழியாக திருப்பதி வந்த 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது



  • 11:58 (IST) 22 Dec 2021
    இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது; பாம்பன் மீனவர்களும் நாளை முதல் வேலை நிறுத்தம்

    இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களைத் தொடர்ந்து பாம்பன் மீனவர்களும் நாளை முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.



  • 11:44 (IST) 22 Dec 2021
    கேரளா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.டி.தாமஸ் மரணம்

    கேரளா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.டி.தாமஸ் உடல் நலக்குறைவால் காலமானார்



  • 11:27 (IST) 22 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ29 ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.



  • 11:24 (IST) 22 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ29 ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.



  • 10:34 (IST) 22 Dec 2021
    காவலர் சரவணன் குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம்

    மதுரையில் இரவு ரோந்துப்பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் சரவணன் உயிரிழந்துள்ளார். காவலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்



  • 10:26 (IST) 22 Dec 2021
    புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

    8ஆவது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்குகின்றன. இரவு 8.30 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதுகிறது.



  • 10:11 (IST) 22 Dec 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,47,58,481 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் 318 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:09 (IST) 22 Dec 2021
    நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை

    மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என கூறப்படுகிறது.



  • 10:08 (IST) 22 Dec 2021
    கர்நாடகாவில் 2 முறை அடுத்தடுத்து நில அதிர்வு

    கர்நாடகாவின் சிக்கபல்லபுரா அருகே இன்று காலை 2 முறை அடுத்தடுத்து 2.9 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு பதிவாகியுள்ளது.



  • 09:10 (IST) 22 Dec 2021
    நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை

    மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் சோதனை என கூறப்படுகிறது.



  • 08:00 (IST) 22 Dec 2021
    சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் பட்டம் பெற முறைகேடு

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடமாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் தேர்வுழுதியவர்களின் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



  • 07:59 (IST) 22 Dec 2021
    சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் பட்டம் பெற முறைகேடு

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடமாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் தேர்வுழுதியவர்களின் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



Tamil Nadu Corona Virus Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment