Tamil news today : ஒமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைத்து வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் சமூகப் பரவலாக மாற அனுமதித்தால், டெல்டாவை விட அதிவேகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி
தென்ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. லேசானா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 39 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் ரூபாய் 101.40-க்கும், டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனையாகிறது.
ஒமிக்ரான் அப்டேட்
ஆந்திரா மற்றும் கேரளாவில் முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:57 (IST) 13 Dec 2021ஜம்மு காஷ்மீர்: போலீஸ் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 போலீசார் பலி... 12 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் அருகே உயர் பாதுகாப்புப் பகுதியில் போலீஸ் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 போலீஸார் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஆயுதப் பிரிவின் 9வது பட்டாலியன் வீரர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவம் ஸ்ரீநகர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள செவானில் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 14 போலீசார் காயமடைந்ததாக போலீசார் முதலில் தெரிவித்தனர். இரண்டு போலீசார் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
- 20:43 (IST) 13 Dec 2021ஜனவரி 3ம் தேதி முதல் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து; வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் - தமிழக அரசு
ஜனவரி 3ம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்யப்படுகிறது என்றும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 20:40 (IST) 13 Dec 2021டிச. 31, ஜன. 1 தேதிகளில்அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழ்நாடு அரசு
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமுதாய அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 19:44 (IST) 13 Dec 2021தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கிய மத்திய அரசு
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. தொற்றா நோய்களுக்காக 29.88 லட்சம் பரிசோதனை செய்ததில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசு 3ம் இடம் பிடித்துள்ளது.
- 17:50 (IST) 13 Dec 2021ஒமிக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
பிரிட்டனில் முதல் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
- 17:26 (IST) 13 Dec 2021சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இது தொடர்பாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 17:22 (IST) 13 Dec 2021போதைபொருள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்பி பேச்சு
மக்களவையில் போதைபொருள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கலாநிதி வீராசாமி, சிறிய அளவில் கஞ்சா வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை வழங்குவதற்கு பதிலாக மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 17:19 (IST) 13 Dec 2021பாலிவுட் நடிகைகள் இருவருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும் குறிப்பிட்ட அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துகொண்டுதான் வருகிறது. இந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16:43 (IST) 13 Dec 2021மக்களே என்னுடைய தெய்வங்கள் - வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
உத்திர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்’ காரணமாக உத்திரபிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரதமர் மோடி இன்று வாரணாசியில் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் என்னை பொறுத்தவரை மக்களே என் தெய்வங்கள் என்று கூறியுள்ளார்.
- 16:37 (IST) 13 Dec 2021மாரிதாஸ் கைது செய்யப்பட் வழக்கு - உச்சநீதிமன்றம் மதுரை கிளை கேள்வி
பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணிய சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது அது கொலையாக இருக்கலாம் என்று கேள்வி எழுந்ததே என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
- 16:12 (IST) 13 Dec 2021நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
மீன் விற்கும் பெண்ணை பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்திய நிலையில், நாகர்கோவில் பேருந்து நிலையங்களில்,அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது நெரிசல் மிகுந்த பேருந்துகளில் அதிக அளவில் பயணிகள் ஏறுவதை அதிகாரிகள் தவிர்த்தனர்.
- 15:48 (IST) 13 Dec 2021மாரிதாஸ் கைது செய்யப்பட் வழக்கு - உச்சநீதிமன்றம் மதுரை கிளை கேள்வி
பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணிய சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது அது கொலையாக இருக்கலாம் என்று கேள்வி எழுந்ததே என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
- 15:29 (IST) 13 Dec 2021டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!
இந்தியா இன்று ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில், டார்பிடோவை (ஸ்மார்ட்) ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது.
"இந்த அமைப்பு டார்பிடோவின் வழக்கமான வரம்பிற்கு அப்பால், ஆண்டி-சப் மரைன் போர் திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று DRDO கூறுகிறது.
watch | India today successfully carried out a long-range Supersonic Missile Assisted Torpedo (SMART) off coast of Balasore in Odisha.
— ANI (@ANI) December 13, 2021
"The system has been designed to enhance Anti-sub marine warfare capability far beyond the conventional range of the torpedo," DRDO says pic.twitter.com/ZhD34UwuFW - 15:23 (IST) 13 Dec 2021தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்திய பிரதமர் மோடி!
வாரணாசி: காசி விஸ்வநாத் அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி மதிய உணவு சாப்பிட்டார்.
Varanasi: PM Narendra Modi had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor pic.twitter.com/OxJm3uZI2I
— ANI UP (@ANINewsUP) December 13, 2021 - 15:14 (IST) 13 Dec 20212031க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின்!
2031க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31 ஆயிரம் கோடியில், 9.53 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 15:13 (IST) 13 Dec 2021மோடி அரசின் மோசமான பொருளாதார நிர்வாகத்தை அம்பலப்படுத்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதயாத்திரை!
மோடி அரசின் மோசமான பொருளாதார நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ‘ஜன் ஜாக்ரன் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் டிசம்பர் 18-ம் தேதி உ.பி., மாநிலம் அமேதியில் பாதயாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.
- 15:08 (IST) 13 Dec 20212031க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின்!
2031க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31 ஆயிரம் கோடியில், 9.53 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 15:05 (IST) 13 Dec 2021வேதா இல்லத்தை நினைவிடமாக்க தீபா மற்றும் தீபக் ஒத்துழைக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை, தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர், வேதா இல்ல சாவியை தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் சமீபத்தில் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து வேதா இல்லத்துக்கு வந்த இருவரும் கூடிய விரைவில், வீட்டில் குடியேற போவதாக அறிவித்தனர். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவிடமாக்க தீபா மற்றும் தீபக் இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
- 15:04 (IST) 13 Dec 2021ஹெலிகாப்டர் விபத்து: பொய் தகவல் பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த தெற்குதுறை வயல் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன், குன்னூர் விமான விபத்து குறித்து குறித்து தவறான தகவலை பேசியுள்ளதாக கூறி அளித்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில், கீரனூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
- 14:58 (IST) 13 Dec 2021ஹெலிகாப்டர் விபத்து: பொய் தகவல் பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த தெற்குதுறை வயல் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன், குன்னூர் விமான விபத்து குறித்து குறித்து தவறான தகவலை பேசியுள்ளதாக கூறி அளித்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில், கீரனூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
- 14:24 (IST) 13 Dec 2021339 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காசி விஸ்வநாத் அணையை திறந்து வைத்த மோடி!
வாரணாசி: சுமார் 339 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாத் அணையின் 1ம் நிலையை(phase) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
Varanasi: Prime Minister Narendra Modi inaugurates phase 1 of Kashi Vishwanath Dham, constructed at a cost of around Rs 339 crores pic.twitter.com/kYN6rcyFRX
— ANI UP (@ANINewsUP) December 13, 2021 - 14:12 (IST) 13 Dec 202110ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்-சிபிஎஸ்இ அறிவிப்பு
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குரிய கேள்விக்கு பல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் ஒலித்தது. இதனிடையே ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
- 14:03 (IST) 13 Dec 2021சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாள் விவகாரம்: சோனியாகாந்தி கண்டனம்!
10 ஆம் வகுப்பு தேர்வுக்கான சிபிஎஸ்இ வினாத்தாளில் அதிர்ச்சியூட்டும் வகையில் பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி பற்றிய விவகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எழுப்பினார். அப்போது பேசியவர், கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ இந்த கேள்வியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முழுமையான மறுபரிசீலனை நடத்த வேண்டும் என்று கூறினார்!
- 14:01 (IST) 13 Dec 2021சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாள் விவகாரம்: சோனியாகாந்தி கண்டனம்!
10 ஆம் வகுப்பு தேர்வுக்கான சிபிஎஸ்இ வினாத்தாளில் அதிர்ச்சியூட்டும் வகையில் பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி பற்றிய விவகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எழுப்பினார். அப்போது பேசியவர், கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ இந்த கேள்வியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முழுமையான மறுபரிசீலனை நடத்த வேண்டும் என்று கூறினார்!
- 13:58 (IST) 13 Dec 2021ஸ்ரீநகர் அருகே 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு & காஷ்மீர் | ஸ்ரீநகரில் உள்ள ராங்ரெட் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 13:51 (IST) 13 Dec 2021வாரணாசி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
watch Prime Minister Narendra Modi offers prayers at Kashi Vishwanath temple in Varanasi pic.twitter.com/4pLpNubg2z
— ANI UP (@ANINewsUP) December 13, 2021 - 13:49 (IST) 13 Dec 20212021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து!
இஸ்ரேலில் நடைபெற்ற விழாவில் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து 2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியாது. அவள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் இருந்தாள். அவளுடைய ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் அவளுக்கு நிறைய ஆதரவளித்தனர்: ரவீந்தர் கவுர் சந்து, தாய்.
Chandigarh's Harnaaz Sandhu has been crowned Miss Universe 2021 at a function held in Israel
— ANI (@ANI) December 13, 2021
It's a proud moment for all of us. I can't express how happy I am. She has always been very active & determined. Her teachers & principal supported her a lot: Ravinder Kaur Sandhu,mother pic.twitter.com/Sx13oXfFxK - 13:38 (IST) 13 Dec 2021கேப்டன் வருண்சிங் உடல்நிலை கவலைக்கிடம்.. தொடர்கிறது தீவிர சிகிச்சை!
ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அவருக்கு பெங்களுருவில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தென் பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் அருண் கூறியுள்ளார்.
- 13:28 (IST) 13 Dec 2021மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டது - லெப்டினண்ட் ஜெனரல் அருண்
ஹெலிகாப்டர் விபத்தின் போது தமிழக முதல்வர் லெப்டினண்ட் ஜெனரல் தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டது என்று கூறியுள்ளார் லெப்டினண்ட் ஜெனரல் அருண்
- 13:25 (IST) 13 Dec 2021பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி - ரஜினி காந்த்
பிறந்த நாளன்று அன்புடன் வாழ்த்திய அனைத்து அரசியல், திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் அனைவருக்கும் நன்று கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினி காந்த்.
🙏🏻 pic.twitter.com/rLIo75hotS
— Rajinikanth (@rajinikanth) December 13, 2021 - 12:48 (IST) 13 Dec 2021ஜனவரி 5ம் தேதி துவங்குகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப் பேரவை வருகின்ற ஜனவரி 5ம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் துவங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலக வளாகத்தில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்றும் அறிப்பு
- 12:46 (IST) 13 Dec 2021புத்தக கண்காட்சியை துவங்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை நந்தனத்தில் ஜனவரி 6ம் தேதி அன்று நடைபெற இருக்கும் 45வது புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
- 12:45 (IST) 13 Dec 2021மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்த்து
நீலகிரியின் குன்னூர் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி லெப்டினண்ட் ஜெனரல் அருண் கவுரவித்தார்.
- 12:45 (IST) 13 Dec 2021வானிலை அறிவிப்பு
வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 17ம் தேதி வரைபலத்த காற்று வீசுவதால் குமரிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- 12:43 (IST) 13 Dec 2021வானிலை அறிவிப்பு
வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 17ம் தேதி வரைபலத்த காற்று வீசுவதால் குமரிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- 12:40 (IST) 13 Dec 2021மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
- 12:21 (IST) 13 Dec 2021சி.பி.எஸ்.இ. வினாத்தாள் விவகாரம் - மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ்
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த பெண்கள் தொடர்பான கருத்துகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை எனவே உடனடியாக வினாத்தாளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் சோனியா காந்த் பேச்சு.
- 12:12 (IST) 13 Dec 2021காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி
உத்திரப்பிரதேசம் மாவட்டம் வாரணாசியில் கங்கை வழியாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு படகில் சென்றுள்ளார் மோடி. அங்கே அமைந்திருக்கும் கால பைரவர் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.
- 12:06 (IST) 13 Dec 2021சென்னையில் 45வது புத்தகக் கண்காட்சியில் தடுப்பூசி முகாம்
சென்னையில் இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அப்போது சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 11:53 (IST) 13 Dec 2021இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் முதல்வர் தற்போது ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- 11:22 (IST) 13 Dec 2021கடும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 11:04 (IST) 13 Dec 2021கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,973 பேர் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 10:54 (IST) 13 Dec 2021தங்கம் விலை நிலவரம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,232-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:33 (IST) 13 Dec 2021எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸ் ஆஜர்
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாசை சைபர் க்ரைம் போலீஸ்.ஆஜர்படுத்தியது. தனியார் தொலைக்காட்சி இணை செயல் ஆசிரியர் அளித்த போலி மின்னஞ்சல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் ஆஜர்ப்படுத்துகின்றனர்.
- 08:53 (IST) 13 Dec 2021மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ்
பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- 08:34 (IST) 13 Dec 2021ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை
ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக சென்னை, தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.