Tamil Nadu News Updates: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் அதிகரித்து ரூ.95-க்கும் விற்பனையாகிறது.
ரூ2,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். தொழில் நிறுவனங்களுடன் ரூ2,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
10 நிமிட உணவு டெலிவரி திட்டம் ரத்து
சொமேட்டோ அண்மையில் அறிவித்த 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. புதிய திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சொமேட்டோ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
புதினை விமர்சித்த பைடன்
போலந்தில் நேட்டோ படைகள், உக்ரைன் மக்களுடன் ஜோ பைடன் சந்திப்பு. அதிபர் புதின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என ஜோ பைடன் விமர்சித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:34 (IST) 27 Mar 2022தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனாவுக்கு 394 பேர் சிகிச்சை பெற்று வருவரும் நிலையில் புதிதாக உயிரிழப்பு ஏதுவும் பதிவாகவில்லை
- 20:28 (IST) 27 Mar 2022விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகம் நிலம் வழங்க வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தை ஒட்டி புதுச்சேரி அமைந்துள்ளதால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கியது. இதனிடையே, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரி வந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, இதனை தெரிவித்தார்
- 19:27 (IST) 27 Mar 2022ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிகளை தேடி மேற்குவங்கம் சென்ற காவல்துறை
சென்னை ஐஐடியில் மேற்குவங்க மாணவிக்கு 5 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 8 பேர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை தேடி தனிப்படை போலீசார் மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.
- 18:11 (IST) 27 Mar 2022தமிழுக்கு மற்றொரு அணிகலனாக அமைந்துள்ளது ஏர்.ஆர்.ரஹ்மான் ஆல்பம் - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சென்றேன். மூப்பில்லா தமிழே... தாயே என அவர் உருவாக்கியிருந்த ஆல்பத்தை எனக்கு திரையிட்டார; கலைஞரின் செம்மொழிப் பாடலுக்கு இசை சேர்த்த விரல்கள் ஆயிற்றே; தமிழுக்கு மற்றொரு அணிகலனாக அவருடைய ஆல்பம் அமைந்திருந்தது” என்று ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்துக்கு புகழாரம் சூட்டினார்.
- 17:34 (IST) 27 Mar 2022அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்பதே நோக்கம் - மு.க. ஸ்டாலின் மடல்
துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், “அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கம். துபாய் பயணம் குறித்து ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசினாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் மனதார வரவேற்கிறார்கள். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் தமிழ்நாடு உள்ளானது” என்று தெரிவித்துள்ளார்.
- 17:32 (IST) 27 Mar 2022அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்பதே நோக்கம் - மு.க. ஸ்டாலின் மடல்
துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், “அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கம். துபாய் பயணம் குறித்து ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசினாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் மனதார வரவேற்கிறார்கள். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் தமிழ்நாடு உள்ளானது” என்று தெரிவித்துள்ளார்.
- 17:12 (IST) 27 Mar 2022சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து சாம்பியன்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். 21-16, 21-8 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
- 16:29 (IST) 27 Mar 2022ராணிப்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 காவலர்கள் காயம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கஞ்சா குற்றவாளியை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் குற்றவாளி, காவலர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர்
- 16:18 (IST) 27 Mar 2022எரிபொருள் மற்றும் உணவுக் கிடங்குகளை ரஷ்யா அழித்து வருவதாக, அதிக ஆயுதங்களை கோரும் உக்ரைன்
ரஷ்யாவின் படைகள் நாட்டின் எரிபொருள் மற்றும் உணவுக் கிடங்குகளை குறிவைப்பதாகவும், ரஷ்யப் படைகளைத் தடுக்க உக்ரைனுக்கு டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி மேற்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மூன்று நாள் ஐரோப்பா சுற்றுப்பயணம், ரஷ்யா மீது அமெரிக்கா மிகவும் கூர்மையான போக்கை கடைப்பிடிப்பதாக கருத்து தெரிவித்ததுடன், சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் "அதிகாரத்தில் நீடிக்க முடியாது" என்று கூறினார்.
உக்ரேனிய உள்துறை அமைச்சக ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யா உக்ரேனிய எரிபொருள் மற்றும் உணவு சேமிப்பு மையங்களை அழிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதன் ஏவுகணைகள் போலந்து எல்லையில் இருந்து 60 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள மேற்கு நகரமான லிவிவ் அருகே ஒரு எரிபொருள் வைப்பு மற்றும் இராணுவ பழுதுபார்க்கும் ஆலையை சனிக்கிழமை சேதப்படுத்தியதாகக் கூறியது. (ராய்ட்டர்ஸ்)
- 16:04 (IST) 27 Mar 2022நீட் தேர்வில் 15% மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீட்; மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? - ராமதாஸ் கேள்வி
நீட் தேர்வில் 9,19,400க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 9,17,875வது இடத்தைப் பிடித்தவருக்கு ராஜஸ்தானில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நீட் தேர்வில் 15% மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட, பணம் இருந்தால் இடம் கிடைக்கும் என்றால் தகுதி எவ்வாறு ஊக்குவிக்கப்படும்? இப்படித்தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வால் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நீட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
- 15:28 (IST) 27 Mar 2022ஐபிஎல்; மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் போட்டிகளில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில், மும்பை – டெல்லி அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
- 14:53 (IST) 27 Mar 2022உக்ரைன் கார்கிவ் அணுமின் நிலையம் மீண்டும் ஷெல் தாக்குதலால் பாதிப்பு
உக்ரைனின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, கார்கிவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீண்டும் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், சண்டையால் சேதத்தை மதிப்பிட முடியாது என்றும் கூறுகிறது. கார்கிவ் இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நியூட்ரான் மூல பரிசோதனை வசதி சனிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளானதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறினார். கார்கிவ் அணுமின் நிலையத்திலுள்ள கட்டிடங்களை ரஷ்ய ஷெல் தாக்குதலால் சேதப்படுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் முன்னர் அறிவித்துள்ளனர், ஆனால் கதிர்வீச்சு வெளியிடப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட நியூட்ரான் மூல நிலையமானது, மருத்துவ மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான கதிரியக்க ஐசோடோப்புகளின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- 14:34 (IST) 27 Mar 2022மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.
- 14:26 (IST) 27 Mar 2022வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த ஏவுகணை தரையிலிருந்து வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது
- 14:13 (IST) 27 Mar 2022தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் - தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மின்சேவை பாதிக்காதபடி இருக்க, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும். மின் தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயக்கப்பட வேண்டும். போன்ற வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது
- 13:53 (IST) 27 Mar 2022வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. தரையிலிருந்து வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.
- 13:46 (IST) 27 Mar 2022இன்று கே.ஜி.எஃப். டிரைலரை வெளியிடும் பிரபல நடிகர்
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் கே.ஜி.எஃப் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாடுவர் என்று படக் குழு அறிவித்துள்ளது.
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் பாகம் ஒன்று படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
- 13:33 (IST) 27 Mar 2022விருதுக்கு தேர்வான மதுரை புகைப்படக் கலைஞருக்கு முதல்வர் வாழ்த்து
வேர்ல்ட் பிரஸ் போட்டோ அமைப்பு விருதுக்கு மதுரையைச் சேர்ந்த செந்தில்குமரன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 13:10 (IST) 27 Mar 2022அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை-ஈ.பி.எஸ்
அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை என ஈபிஎஸ் தெரிவித்தார். சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
- 13:01 (IST) 27 Mar 2022முதல்வரை குறை கூற தகுதியில்லை-வேளாண் அமைச்சர்
முதல்வரை குறை கூறுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
- 12:51 (IST) 27 Mar 2022எம்.சி.ஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு எப்போது?
எம்.சி.ஏ படிப்பில் சேருவதற்கான டான்செட் தேர்வு, மே 14ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:47 (IST) 27 Mar 2022தமிழால் இணைவோம்-முதல்வர் உரை
தமிழால் இணைவோம், தமிழராய் இணைவோம் என்று துபாயில் முதல்வர் உரை நிகழ்த்தினார்.
- 12:29 (IST) 27 Mar 2022நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
நெல்லை, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 12:23 (IST) 27 Mar 2022கோவையில் வன்முறை-9 பேர் கைது
கோவை வெள்ளலூரில் மறைமுக தேர்தலின் போது நடந்த வன்முறை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்ற போது அதிமுக - திமுகவினர் இடையே மோதல் வெடித்தது. மோதலில் போலீஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
- 12:22 (IST) 27 Mar 2022தமிழக வாழைப்பழங்கள் அரேபியாவில் கிடைக்கிறது-பிரதமர் மோடி
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்கள் அரேபியாவில் அதிகளவில் கிடைக்கின்றன. ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழம், நாகலாந்தின் ராஜா மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
- 12:13 (IST) 27 Mar 2022தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை-ஈபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டினார். துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
- 11:56 (IST) 27 Mar 2022மனித ரத்தத்தில் பிளாஸ்டிக்!
மனித ரத்தத்தில் முதல் முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- 11:56 (IST) 27 Mar 2022மனித ரத்தத்தில் பிளாஸ்டிக்!
மனித ரத்தத்தில் முதல் முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- 11:36 (IST) 27 Mar 202221.1 கி.மீ. தூரம், 2.30 மணி நேரம்: அசத்திய சுகாதார அமைச்சர்
பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்று 21.1 கி.மீ. தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தினார்.
- 11:28 (IST) 27 Mar 2022பாலியல் தொல்லை - பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
வேலூர் காட்பாடி அருகே பாலியல் தொல்லை அளித்ததால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாணவியிடம் அத்துமீறியதாக அரசுப்பள்ளி ஆசிரியர் முரளிகிருஷ்ணன்(55) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 11:12 (IST) 27 Mar 202231ஆம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
- 10:31 (IST) 27 Mar 2022TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- 10:18 (IST) 27 Mar 2022தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்துள்ளது. மிதாலி ராஜ், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் அரைசதம். தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 10:10 (IST) 27 Mar 2022மத்தியப் பிரதேசத்திலும் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை!
ஹரிசிங் பல்கலைக்கழக்ததில் வகுப்பறையில் ஹிஜாபுடன் தொழுகை செய்த மாணவியிடம் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது. மாணவியின் வீடியோ வைரலானதையடுத்து, மத வழிபாட்டு முறைகளை அவரவர் வீடுகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 09:11 (IST) 27 Mar 2022இந்தியாவில் மேலும் 1,421 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 149 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,826 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 08:58 (IST) 27 Mar 20222 ஆண்டுகளுக்குப் பிறகு பன்னாட்டு விமான சேவை
சென்னையில் 2 ஆண்டுகளாக முடங்கியிருந்த பன்னாட்டு விமான சேவை, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. முக்கிய நிறுவனங்கள் விமான சேவையை தொடராததால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
- 08:38 (IST) 27 Mar 2022இந்தியா - மாலத்தீவு இடையே சுகாதாரம், கல்வியில் ஒப்பந்தம் கையெழுத்து
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மாலத்தீவு பயணத்தின் போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் விவாதித்தார்.
- 08:22 (IST) 27 Mar 2022சித்தூர் பேருந்து விபத்தில் 7 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.
- 08:04 (IST) 27 Mar 2022ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 போட்டிகள்
இன்று மாலை 3.30க்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மும்பை - டெல்லி அணிகளும், இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஓய்.பாடீல் மைதானத்தில் பெங்களூரு-பஞ்சாப் அணிகளும் மோதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.